விளையாட்டு

பாகிஸ்தானில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்படாது-பாகிஸ்தான் அரசு தகவல்  

ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் ஒளிபரப்பப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

ஐபிஎல்
ஐபிஎல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

12-வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டி நாளை சென்னையில் தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மோதுகிறது. ஐபிஎல் தொடரை காண ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் ஐபிஎல் போட்டிகளை தங்களது நாட்டில் ஒளிபரப்பப்போவதில்லை என பாகிஸ்தான் அறிவித்துள்ளது.

இது குறித்து பேட்டியளித்த பாகிஸ்தான் நாட்டின் அமைச்சர் ஃபாவத் அகமது சவுத்ரி, 'புல்வாமாவில் நடந்த தாக்குதலைக் காரணம் காட்டி அண்மையில் நடந்த பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டிகளை டி ஸ்போர்ட்ஸ் நிறுவனம் இந்தியாவில் ஒளிபரப்ப மறுத்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப மாட்டோம்.

அரசியலையும் கிரிக்கெட்டையும் தொடர்பு படுத்த நாங்கள் விரும்பவில்லை, ஆனால் இந்திய அணியினர் ராணுவ தொப்பி அணிந்து போட்டியில் விளையாடினர். அவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஐபிஎல் தொடரை பாகிஸ்தானில் ஒளிபரப்பாமல் இருப்பதால் இந்திய அணிக்கும் ஐபிஎல் அமைப்புக்கும் தான் நஷ்டம் என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories