அரசியல்

மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...

பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SIR நடத்தாமல் SR நடத்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம். இதற்கு தற்போது எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி ஒன்றிய பாஜக அரசின் ஆதரவோடு வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் (SIR) பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. பீகாரில் மேற்கொள்ளப்பட்ட SIR காரணமாக பல லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். அதோடு தற்போது பாஜக கூட்டணி பெருவாரியான தொகுதியில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதனால் SIR பணியின் நம்பகத்தன்மை மீதான சந்தேகம் தற்போது நாடு முழுவதும் வலுத்துள்ளது.

மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...

இந்த சூழலில் தமிழ்நாடு, கேரளா, கோவா, குஜராத், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், அந்தமான்-நிக்கோபர், சத்தீஸ்கர், லட்சத்தீவுகள், புதுச்சேரி ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் SIR பணிகள் மேற்கொள்ள தொடங்கியுள்ளது. கடந்த நவ.4-ம் தேதி தொடங்கியுள்ள இந்த பணிகள் ஒரு மாதத்திற்குள் டிச.4 வரை நடத்தப்படும் என்று அறிவித்துள்ளது.

SIR பணிக்கு எதிராக பல்வேறு மாநிலங்களும் குரல் கொடுத்து வருகிறது. அதோடு கேரளாவில் உள்ளாட்சி தேர்தல் வருவதனால் SIR பணிகளை ஒத்திவைக்கும்படி உத்தரவிடுமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது கேரள அரசு. அதே போல் தமிழ்நாட்டிலும் பருவமழை காலம், பண்டிகை காலம், விடுமுறை காலம் உள்ளிட்ட நேரத்தில் வருவதால் இதனை தற்போது நடத்த கூடாது என்று திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டம் நடத்தியது.

மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...

இந்த நிலையில் எதிர்ப்புக்கு மத்தியிலும் SIR பணிகள் 12 மாநிலங்களிலும் நடைபெற்று வரும் நிலையில், பாஜக ஆளும் அசாம் மாநிலத்துக்கு மட்டும் தேர்தல் ஆணையம் விலக்கு அளித்துள்ளது பெரும் கண்டனங்களையும் விமர்சனங்களையும் எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், அசாம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் அடுத்த ஆண்டு (2026) சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அசாம் மாநிலத்தை தவிர மற்ற மாநிலங்களில் SIR ஒரு மாதத்திற்குள் மேற்கொள்ள தேர்தல் ஆணையம் முனைப்புக் காட்டி வருகிறது. இப்படியான சூழலில் அசாமுக்கு மட்டும் ஏன் விலக்கு என்று பலரும் கேள்வி எழுப்பி வரும் நிலையில், அதற்கு ஒரு மட்டமான விளக்கத்தை கொடுத்துள்ளது தேர்தல் ஆணையம்.

மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...

மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR - Special Intensive Revision) மேற்கொள்ளவும், ஆனால் அசாம் மாநிலத்துக்கு மட்டும் சிறப்பு திருத்தம் (SR - Special Revision) நடத்த திட்டமிட்டுள்ளது தேர்தல் ஆணையம். அதன்படி சிறப்புத் திருத்தத்தை மேற்கொள்ள அசாம் மாநிலத்திற்கு 2026 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி தகுதி தேதியாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு தேசிய குடிமக்கள் பதிவேட்டின் (NRC) நிலை நிலுவையில் உள்ளதால், தேர்தல் ஆணையம் அசாம் மாநிலத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தத்தை (SIR) நடத்தவில்லை என்று தெரிவித்துள்ளது. அதே நேரத்தில் அசாமில் 2019 ஆம் ஆண்டு NRC பட்டியலில் 3.3 கோடி விண்ணப்பதாரர்கள் இருந்த நிலையில், அதிலிருந்து கிட்டத்தட்ட 19.6 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர்.

மற்ற மாநிலங்களுக்கு SIR... பாஜக ஆளும் அசாமுக்கு மட்டும் SR... நல்லா இருக்குய்யா உங்க டீலிங்கு...

ஆனால் இன்றுவரை அது தொடர்பான இறுதி அறிவிப்பு எதுவும் பின்பற்றப்படவில்லை. அதே நேரம், இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நடந்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாக தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், ``குடியுரிமைச் சட்டத்தின் கீழ், அசாமில் குடியுரிமைக்கு தனித்தனி விதிகள் உள்ளன. உச்ச நீதிமன்றத்தின் மேற்பார்வையின் கீழ், குடியுரிமையைச் சரிபார்க்கும் பணி நிறைவடைய உள்ளது. SIR பணி முழு நாட்டிற்கும் உரியது என்றாலும், அஸ்ஸாம் சூழலைக் கருத்தில் கொண்டு அந்த மாநிலத்துக்கு மட்டும் இந்த SIR பொருந்தாது”. என்றார்.

banner

Related Stories

Related Stories