அரசியல்

"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !

"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்கள் விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி, மல்லாங்கிணறில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நம்முடைய தமிழ்நாடு அரசு ஜாதி, மதம், பாலினம், அதிகாரம் போன்றிருக்கக்கூடிய எந்தவொரு காரணத்தாலும், வேறுபாடு இல்லாத எல்லோருக்கும் எல்லாமுமான சமவாய்ப்புகளை கொண்டிருக்கக்கூடிய நியாயமான ஒரு உயர்வான முன்னேற்றமிக்க சமத்துவ, சமுதாய அமைப்பினை உருவாக்கிடவேண்டும் என்ற உயர்ந்த நோக்கோடு நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய தலைமையிலான இந்த திராவிட மாடல் ஆட்சி சிறப்பான திட்டங்களை உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது மாத்திரம் அல்லாமல், சமூக நலத் திட்டங்களிலும் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருவதை நீங்கள் மிக நன்றாக அறிவீர்கள்.

அத்தகைய வேறுபாடுகளற்ற, ஏற்றத் தாழ்வுகளற்ற அல்லது பிறப்பால் ஒருவரை இழிவுபடுத்தக்கூடிய நிலைகளை முற்றிலுமாக மாற்றக்கூடிய அளவில், 1978-ஆம் ஆண்டு நம்முடைய தந்தை பெரியார் அவர்களின் நூற்றாண்டில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய தெருப் பெயர்கள், அந்தப் பெயர்களில் இருக்கக்கூடிய பின்னூட்டுகளாக இருக்கக்கூடிய சாதிப் பெயர்களை நீக்கக்கூடிய அரசாணைகளை அன்றைக்கு தமிழ்நாடு அரசு வெளியிட்டதும் உங்களுக்குத் தெரியும். அதனைத் தொடர்ந்து, நம்முடைய திராவிட மாடல் ஆட்சியை இத்தகைய சமூகநீதியை அடிப்படை நோக்கமாக அடித்தள நோக்கமாக கொண்டிருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல இடங்களில் ஆதிக்கத்தின் அடையாளமாக, தீண்டாமையின் அடையாளமாக கருதப்படக்கூடிய காலனி என்கின்ற அந்த சொல்லை ஒரு கிராமப் பகுதிகளிலோ அல்லது ஒரு குடியிருப்புகளில் இருக்கக்கூடிய அத்தகைய ஒரு சொல்லை முற்றிலுமாக நீக்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார்கள்.

அதனைத் தொடர்ந்து நம்முடைய அரசின் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு, இப்படி ஒரு குறிப்பிட்ட பிரிவினரை, அவர்கள் சார்ந்திருக்கக்கூடிய சமுதாயத்தின் அடிப்படையில் குறிப்பிட்டு, இழிவுப்படுத்துவதை நீக்கக்கூடிய வகையில், தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய பல்வேறு குடியிருப்புக்கள், தெருக்கள், நீர்நிலைகளில் அத்தகைய பெயர்கள் இடம் பெறுமானால், அவற்றை முற்றிலுமாக நீக்கவேண்டும் என்பதற்கான உரிய வழிகாட்டு நெறிமுறைகளை அரசாணையாக அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள்.

"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !

இந்த அடிப்படையில், மிகச் சிறப்பான வகையில், தமிழ்நாடு அரசு இந்த முன்னெடுப்பை மேற்கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தனது பரப்புரைக் கூட்டங்களில் மிக முன்னேறிய நோக்கோடு, சமுதாய விழிப்புணர்வோடு, சமுதாயத்தில் இருக்கக்கூடிய இத்தகைய இழிநிலையை துடைத்தெறிய வேண்டும் என்ற முதலமைச்சர் அவர்களுடைய உயர்ந்த நோக்கோடு அமைக்கப்பட்டிருக்கக்கூடிய இந்தத் திட்டங்களுக்கு அவர் வேறு வண்ணம் பூச கூடிய அளவில் தங்களுடைய பரப்புரை பயணங்களில் இதை இழிவுபடுத்தி பேசக்கூடிய ஒரு நிலையினை அவர் மேற்கொண்டிருப்பது முழுமையாக கண்டிக்கத்தக்கது என்பதை நான் தொடக்கத்திலேயே தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு, அவருடைய மாலை நேர பிரசங்கங்களில் ஏதேனும் ஒரு சப்ஜெக்ட் கிடைக்க வேண்டும் - ஏதாவது ஒன்றைச் சொல்லி தமிழ்நாடு அரசின் மீது அவதூறு பரப்ப வேண்டும் - அதன் மீது அவர் தன்னுடைய கருத்துக்களை திரித்து, திரிபுவாதத்தை மேற்கொண்டு, நல்ல திட்டங்களுக்கும் வேறுவிதமான திரிபு நோக்கங்களைக் கொண்டு வரவேண்டும் என்கின்ற அவருடைய தணியாத ஆசையின் அடிப்படையில், அவர் உண்மைகளை திரித்து நாட்டு மக்களிடையே தவறான கருத்துக்களைப் பரப்பி கொண்டிருக்கிறார்.

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், ஏதேனும் ஒரு செய்தி இருக்க வேண்டும் என்று சொன்னால், ஒரு பழமொழியைச் சொல்வார்கள் - அம்பலம் தீப்பட்டதென்றால், அது அடுத்த கூட்டத்தை அஜண்டாவுக்கு ஆகும் என்பதைப் போல, ஒரு பிரச்சினை என்றால், அந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது வேறு அந்த பிரச்சினைக்கு தன்னுடைய பங்களிப்பைத் தந்து அந்த பிரச்சினைகளை தீர்க்கலாம் - ஒரு நல்ல காரியம் நடக்கிறது என்றால் அதை வரவேற்கலாம் – அதை விட்டுவிட்டு ஒரு விஷயத்தை எடுத்துக் கொண்டு ஒரு இடத்திற்கு போனோம் என்றால், அப்படியானால், அது அடுத்த கூட்டத் தொடருக்கான அஜண்டாவாக நாம் வைத்துக் கொள்ளலாம் என்று அவற்றில் அரசியல் லாபத்திற்காக குறுக்குச்சால் ஓட்டுவதை நம்முடைய எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வாடிக்கையாக கொண்டிருக்கிறார்கள். எனவேதான், இந்த சாதி பெயர்களை, சாதிப் பெயரில் உள்ளடக்கி இருக்கக்கூடிய பின்னூட்டுக்களாக இருக்கக்கூடிய தெருக்களாக இருந்தாலும், குடியிருப்புகளாக இருந்தாலும், நீர் நிலைகள் போன்று இருக்கக்கூடிய உள்கட்டமைப்புகளாக இருந்தாலும், தமிழ்நாட்டினுடைய எந்த பகுதியாக இருந்தாலும், அவற்றை அறவே ஒழித்திட வேண்டும் – அவற்றை நீக்கிட வேண்டும் என்று ஒரு உயர்ந்த நோக்கோடு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் கொண்டு வந்திருக்கக்கூடிய இந்தத் திட்டத்தை அவர் சிறுமைப்படுத்தி பேசுவதை இப்போது வழக்கமாக வைத்திருக்கிறார்.

இன்னும் ஒரு படி மேலே போய் சொல்கிறார் - ஏன் இவர்கள் பெயரை எல்லாம் வைக்க கூடாது என்று சில அரசியல் கட்சித் தலைவர்களுடைய பெயரும் கேட்கிறார். அரசாணை வெளியிடுகிறபோது, குறிப்பிட்ட பெயர்கள் என்று இந்த பெயர்கள் தான் வைக்க வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடவில்லை - அரசு இணைப்பு எண் 1A-ல் மிகத் தெளிவாக சொல்லியிருக்கிறது. எடுத்துக்காட்டான பெயர் பட்டியலை அவர்கள் தந்திருக்கிறார்கள். இந்த எடுத்துக்காட்டான பெயர் பட்டியலை என்பது, இந்தெந்த பெயர்கள் போன்ற பெயர்களை நீங்கள் வைக்கலாம் – மலர்கள் என்கின்ற பெயர்களை எடுத்துக் கொண்டால், இந்த மலர்களை போன்ற பெயர்களை வைக்கலாம்.

"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !

உதரணமாக, அது செம்பருத்தியாக இருந்தாலும், ரோஜாவாக இருந்தாலும், மல்லியாக இருந்தாலும், சூரியகாந்தியாக இருந்தாலும், இவை போன்ற மலர்களின் பொதுப் பெயர்களை வைக்கலாம் - அதுபோல நாட்டுக்கு உழைத்த உத்தமர்கள், தியாக தலைவர்கள், தமிழ்நாட்டின் உரிமைக்காக போராடி தலைவர்கள் – அப்படிப்பட்ட தலைவர்களின் பெயர்களை எல்லாம் குறிப்பிட்டு இத்தகைய தலைவர்கள் போன்றவர்களுடைய பெயரை எல்லாம் நீங்கள் வைக்கலாம் - இந்த அடிப்படையில், அது ஒரு எடுத்துக்கான பட்டியலாக கொடுக்கப்பட்டிருக்கிறது - அந்த பட்டியலில் இருப்பவர்கள் மட்டும் தான் கொடுக்க வேண்டும் என்கின்ற நிலைமை அல்ல.

எனவே, இதுபோன்ற அந்தந்த ஊர்களில் இருக்கக்கூடியவர்கள் - அந்தந்த பகுதிகளில் இருக்கக்கூடிய ஒரு பொதுத்தன்மை உடையவர்கள் - பாடுபட்ட தலைவர்களாக இருந்தாலும் சரி மலர்களைப் போன்று ஒரு பொதுப் பெயராக இருந்தாலும், அத்தகைய பெயர்களில் பழைய பெயர்கள் மாற்றப்பட்டு, புதுப் பெயர்கள் வைக்கப்படும் என்று சொன்னால் அந்த பெயர்களை வைத்து பிறகு, அந்த வழிகாட்டி நெறிமுறைகளின்படி 21 நாட்களுக்குள்ளாக அங்கே இருக்கக்கூடிய உள்ளாட்சி அமைப்புகள், மற்ற அமைப்புக்கள், அவற்றில் குறிப்பிட்டிருக்கின்ற பரிந்துரைகளை அளித்து அவற்றின் மீது ஏதேனும் ஆட்சேபனைகள் இருக்குமானால் 21 நாட்களுக்கு முன்பாக தெரிவிக்கப்பட்ட பிறகு நம்முடைய அரசுக்கு அது உரிய முன்மொழிவுகளாக அனுப்பி வைக்கப்படவேண்டும் என்று விதிமுறைகளில் தெரிந்திருக்க வேண்டும். எனவே, இதையெல்லாம் தெரிந்துகொண்டே வேண்டுமென்றே குறிப்பிட்ட சில தலைவர்கள் எல்லாம் விடுத்து, உங்கள் கட்சியின் தலைவர்கள் பெயர்களை மட்டும் தான் நீங்கள் வைத்துக் கொள்கிறீர்கள் என்று அவர்கள் சொல்வது என்பது முற்றிலும் தவறானது. அந்த பிரச்சாரம் என்பது முற்றிலும் கற்பனையின் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இன்னும் சொல்லவேண்டும் என்று சொன்னால், எந்த ஒரு நல்ல நோக்கத்திற்காக இது செய்யப்படுகிறதோ, அந்த நல்ல நோக்கத்தின் அந்த நன்நம்பிக்கை மாண்புமிகு முதலமைச்சர் அவருக்கும், இந்த ஆட்சிக்கும் கிடைத்துவிடக் கூடாது என்கின்ற எண்ணத்தில் தான் இத்தகைய பரப்புரைகளை திரு. எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

"ஜி.டி.நாயுடு பெயர் முறையான வகையில் வைக்கப்பட்டுள்ளது"- அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் !

அதே வரிசையில் தான் அண்மையில், கோவையில் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் இரண்டு நாட்களுக்கு முன்பாக திறந்து வைத்திருக்கக்கூடிய தமிழ்நாட்டில் மிக நீளமான 10 கிலோ மீட்டருக்கு மேலே இருக்கக்கூடிய ஒரு உயர்மட்ட பாலத்திற்கு, புகழ்பெற்ற விஞ்ஞானி ஜி.டி.நாயுடு அவர்களுடைய பெயரை வைத்திருப்பதையும் அவர் குறையாக சொல்கிறார். ஜி.டி நாயுடு யார்? ஒரு மிகப் பெரிய விஞ்ஞானி. அந்த பகுதியிலேயே அவர் குடியிருந்தவர். எனவே, அந்தச் சாலைக்கு அவருடைய பெயரை கோவை மாவட்டத்தின் மக்களுக்காக மட்டுமல்ல, ஒட்டுமொத்த தமிழ் நாட்டு மக்களுக்கும் ஒரு மாபெரும் அடையாளமாக, ஒரு விஞ்ஞானியாக விளங்கிய அவர், அவருடைய பெயர் சூட்டுவது என்பது சாலப்பொருத்தமாக இருக்கும் என்ற வகையில் தான் அவருடைய பெயரை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சூட்டி, அதை பலதரப்பட்ட மக்களால் அங்கே வரவேற்றிருக்கிறார்கள்.

இப்பொழுது அவர் என்ன சொல்கிறார் என்று கேட்டால், ஜி.டி.நாயுடு பெயரில் நாயுடு என்று இருக்கிறது என்று சொன்னால், அவருக்கு வெறும் ஜிடி பாலம் என்றா அழைக்கமுடியும்? அந்த பாலத்திற்கு ஜி.டி.நாயுடு பாலம் என்று வைக்கும்பொழுதுதான் அவர் இன்னார் என்று அறியப்படுகிறார். தமிழ்நாட்டில்கூட பல்வேறு தெருக்களுக்கு அந்த காலத்தில் கூட, திராவிட இயக்கத்தில் ஒருவராக இருந்த தலைவர் ஒருவராக இருந்த டி.எம் நாயர் அவர்கள் – டி.எம்.நாயர் என்கின்ற பெயரில் நாயர் என்கின்ற சமுதாய பின்னூட்டு பெயர் இருக்கின்ற காரணத்தால், நாயர் என்று எடுத்துவிட்டால் வெறும் டி.எம் என்று இருந்தால், அது எவ்வாறு சரியாக இருக்கும்? எனவே, அவற்றை குறிப்பிட்டபோது அவர் எவ்வாறு அறியப்பட்டாரோ, அந்த தலைவர்களை குறித்து வரக்கூடிய சந்ததியினர் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தான், அவைகள் விதிவிலக்குகளாக அதை கருதப்பட்டு வரவேண்டும் என்பது நடைமுறையே தவிர, எடப்பாடி பழனிசாமி அவர்கள், இன்னும் இன்னும் சிலரும் கூட என்னவென்று தெரியாமல் இவர் பெயர் வைக்க கூடாது - வேறு பெயர் வைக்க வேண்டுமென்று இவற்றிற்கு கூடே நின்று குறுக்குச்சால் ஓட்டி அதில் அரசியல் இலாபம் பார்க்கும் இயல்வது என்பது மெத்தமும் கண்டிக்கத்தக்க ஒன்று.

எனவே, “எத்தைத் தின்றால் பித்தம் தெளியும்” என்கின்ற நிலையில் இருக்கக்கூடிய எதிர்க்கட்சித் தலைவரும், அந்த நிலையை பின்பற்றிருக்கக்கூடிய வேறு சில அரசியல் கட்சித் தலைவர்களும் இதனுடைய உண்மை நிலையை உணர்ந்து தமிழ்நாடு அரசு எந்த நோக்கத்திற்காக இந்த அரசாணை வெளியிட்டு இருக்கிறது. அதை போல், ஜி.டி.நாயுடு அவர்களுடைய பெயர் எந்த நோக்கத்திற்காக சூட்டப்பட்டு இருக்கிறது - அது விதிவிலக்குகளாக அந்தப் பெயர் சூட்டப்பட்டால்தான், எந்த தலைவர் என்பது குறிப்பேட்டில் அந்தப் பெயரை எடுத்துவிட்டு வெறும் பெயரில் ஜி.டி. என்று பெயரில் வைத்தால் யாருக்கு அது தெரியும் – அதைப்போல ஒருவர் பெயர் மட்டும் இருந்தால், அந்த பொதுப் பெயரில் இருக்கக்கூடிய ஏராளமான பெயர்கள் இருக்கக்கூடிய ஒரு சிலர் இருக்கும் போது அதை யாரை குறிக்கும் என்பதை அதற்கான தெளிவு பிறக்காது என்கின்ற வகையில்தான் இந்த பாலத்திற்கு சரியான வகையில், முறையான வகையில் அந்தப் பெயர் சூட்டப்பட்டிருக்கிறது.

எனவே, நான் இறுதியாக சொல்வது, இந்த ஒட்டுமொத்தமான சாதிப் பெயர்களை நீக்கக்கூடிய நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் திட்டம் என்பது சமுதாயத்தில் உள்ள ஏற்றத் தாழ்வுகள், அதில் இருக்கக்கூடிய எத்தகைய மாறுபாடுகளாக இருந்தாலும் அது செல்வம் குறித்த மாறுபாடுகளாக இருந்தாலும், சமுதாயத்தின் படிநிலைகளில் இருக்கக்கூடிய, அடுக்குகளில் இருக்கக்கூடிய இத்தகைய சாதி நிலைகளின் காரணமாக அவர்கள் இழித்துரைக்கப்பட்டு, அதனுடைய படிநிலைகளில் அவர்களுக்கு இழைக்கக்கூடிய அநீதிகளாக இருந்தாலும், அவற்றையெல்லாம் முற்றிலுமாக நீக்கக்கூடிய ஒரு சமத்துவ, சமதர்ம, சமுதாயத்தை நோக்கிய ஒரு சமூக நீதியின் அடிப்படை பயணமாக இது அமைந்திருக்கிறது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories