அரசியல்

"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !

ஜி.எஸ்.டி வரி விதிப்பு மாற்றத்தின் மூலம் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான் என்று கேரள நிதி அமைச்சர் கே.என்.பால கோபால் கூறியுள்ளார்.

"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எல்லா பொருட்கள் மீதும் ஜி.எஸ்.டி வரியை விதித்து வருகிறது. இதனால் உணவு உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்து வருவது சாமானிய மக்களைப் பாதித்துள்ளது.

அதுமட்டுமின்றி ஜி.எஸ்.டி மூலம் ஒன்றிய அரசுக்கு அதிக வருமானம் கிடைத்துவரும் நிலையில், இதனால் மாநில அரசுகளின் வருமானம் மிகவும் குறைந்துள்ளது. இதன் காரணமாக ஒன்றிய அரசு இதற்கு சிறப்பு நிதியை அளித்து வந்தது.

இந்த நிதி விரைவில் நிறுத்தப்படும் நிலையில், அதனை தொடர்ந்து வழங்கவேண்டும் என மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. இதனிடையே ஜி.எஸ்.டி வரி விதிப்பில் மாற்றம் கொண்டுவரப்போவதாக ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.

"GST வரி விதிப்பு மாற்றத்தால் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான்" - கேரள அமைச்சர் விமர்சனம் !

இந்த நிலையில், இந்த மாற்றத்தின் மூலம் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான் என்றும், மாநில அரசின் வருவாய் குறையும் என்றும் கேரள நிதி அமைச்சர் கே.என்.பால கோபால் கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய அவர், "கேரளாவுக்கு கடந்த ஆண்டு 51,000 கோடி வருவாய் கிடைக்க வேண்டிய நிலையில் ஜி.எஸ்.டி மூலம் 32 ஆயிரம் கோடி மட்டுமே கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி புதிய வரி மாற்றம் மூலம் மேலும் 9,000 கோடி ரூபாய் குறையும் நிலை ஏற்பட்டுள்ளது.

போதிய ஆய்வு நடத்தாமல் ஒன்றிய அரசு வரி குறைப்பு திட்டத்தை செயல்படுத்த முன்வந்துள்ளது. இதன் மூலம் லாபம் அடையப்போவது பெரு நிறுவனங்கள்தான். எதிர்கட்சி மாநிலங்கள் மட்டுமல்ல அனைத்து மாநிலங்களும் இதன் மூலம் பாதிக்கப்படும். அதற்கான இழப்பை ஈடுசெய்ய வேண்டும்.இழப்பீடு வழங்க புதிய திட்டம் குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்" என்று தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories