அரசியல்

"தூய்மை தொழிலாளர்களின் பணி நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !

"தூய்மை தொழிலாளர்களின் பணி  நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

தூய்மை தொழிலாளர்களின் போராட்டத்தில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை சிலர் வலியுறுத்துவது குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது என ஆதித்தமிழர் பேரவையின் தலைவர் அதியமான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை விவரம் :

தூய்மை தொழிலாளர்களின் போராட்டத்தில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை போராட்டத்தில் பங்கேற்ற சிலர் வலியுறுத்திள்ளனர். புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியாரின் கொள்கைகளை ஏற்றுக் கொண்டவர்கள் ஒருபோதும் குலத்தொழிலை வலியுறுத்த மாட்டார்கள்.

தூய்மை தொழிலில் பணி நிரந்தரம் என்ற கோரிக்கை மீண்டும் ஆதிதிராவிடர் மற்றும் அருந்ததியர் சமூகங்களை குலத் தொழிலுக்கே கொண்டு செல்லும்.பணி நிரந்தரம் என்பது அடுத்த தலைமுறையில் குப்பை அள்ளுவதற்கான ஒரு சமூகம் இருக்க வேண்டும் என்கிற ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடாகவே இருக்கிறது.

அடுத்த தலைமுறை மட்டுமல்ல இந்த தலைமுறையே இந்த இழிதொழிலில் இருந்தும் குலத் தொழிலில் இருந்தும் விடுபட வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம். மீண்டும் குலத்தொழில் என்ற புதை குழிக்குள் நம்மை நிலைநிறுத்த காலங்காலமாய் புரையோடி போன ஆதிக்க சமூகத்தினுடைய சதித்திட்டம் தான் பணி நிரந்தரம் என்று கோரிக்கை ஆகும்.

"தூய்மை தொழிலாளர்களின் பணி  நிரந்தரம் கோரிக்கை ஆதிக்க மனநிலையின் வெளிப்பாடு" - ஆதித்தமிழர் பேரவை !

பணி நிரந்தரம் மூலம் குறிப்பிட்ட சமூகங்களைபரம்பரை பரம்பரையாகதூய்மை தொழிலில் ஈடுபடுத்துவது சமூக மாற்றத்தில் அக்கறை உள்ளவர்கள் யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். மேலும் விஷவாயு மரணங்கள் தூய்மை தொழிலில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்கின்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பு நடைமுறைப்படுத்துதல் தூய்மை தொழிலில் எந்திரமயமாக்குதல் உள்ளிட்ட தூய்மை தொழிலாளர்களுக்கான பிரச்சனைகளில் ஆதிக்க சிந்தனையாளர்களின் பணி என்பது கடுகளவும் இல்லை.

இதுகுறித்து எந்த ஆக்கப்பூர்வமான கருத்துக்களும் இதுவரை வெளிவந்ததில்லை. இதிலிருந்து இவர்களின் நாடகத்தை நாம் புரிந்து கொள்ளலாம். கடந்த சில வருடங்களாககல்வி மற்றும் விழிப்புணர்வு ஏற்பட்டதன் விளைவாக இந்த தொழிலில் இருந்து விடுபட்டு பலர் முன்னேறியுள்ளனர்.

மீண்டும் பணி நிரந்தரம் என்ற கோரிக்கையின் மூலம் இந்த சமூகங்களை இதே தொழிலில் ஈடுபடுத்துவது மிகப்பெரிய பின்னடைவையே ஏற்படுத்தும் சமூக மாற்றம் ஏற்படாது. குறிப்பாக அருந்ததியர் சமூகம் முன்னேற்றத்திற்காக முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழங்கிய உள் இட ஒதுக்கீட்டின் காரணமாக தூய்மை தொழிலாளர்களின் குடும்பத்திலிருந்து மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், விமான பணிப்பெண்கள் , தொழில் முனைவோர்கள் என்று பலர் உயர்ந்துள்ளனர். பல குடும்பங்கள் அந்த குலத்தொழில் இருந்து விடுபட்டு மாற்றுப் பணிகளில் ஈடுபட்டு முன்னேறி உள்ளனர். அதற்கு அடித்தளம் அமைத்தது திராவிட மாடல் அரசு.

கல்வி பொருளாதார முன்னேற்றம்தான் இச்சமுகத்தையும் இந்த தொழிலாளர்களையும் மேம்படுத்தும். எனவே தூய்மை தொழிலில் ஈடுபட்டுள்ள அருந்ததியர் ஆதிதிராவிடர் சமூகத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஒருபோதும் பணி நிரந்தரம் என்று கோரிக்கையை முன் வைக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். தூய்மை தொழிலாளர்களின் வாழ்வு மேம்பட பல்வேறு சிறப்பு மிக்க திட்டங்களை தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது.அதை வரவேற்கிறோம் .

மனித மாண்போடும் சுயமரியாதையுடன் வாழ்வதற்கு குலத்தொழில் இருந்து வெளியேறுவது சரியானதாகும் .அதை நோக்கி சிந்திப்போம்.செயல்படுவோம்.பணி நிரந்தரம் என்ற கோரிக்கையை புறக்கணிப்போம்.

banner

Related Stories

Related Stories