டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றி வந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14ஆம் தேதியன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அப்போது நீதிபதி யஷ்வந்த் வர்மா வீட்டில், கட்டுக்கட்டாக பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணாவுக்கு புகார் கொடுக்கப்பட்ட நிலையில், நீதிபதி யஷ்வந்த் வர்மா ஏற்கெனவே பணியாற்றி வந்த அலகாபாத் நீதிமன்றத்துக்கே அவரை பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து உச்ச நீதிமன்றம் அமைத்த விசாரணை குழு அறிக்கை தாக்கல் செய்தது. அதன் அடிப்படையில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி யெஸ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்திற்கு பரிந்துரை வழங்கினார்.
அதற்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிபதி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதியின் நடத்தை நம்பிக்கையை அளிப்பதாக இல்லை என்றும், இந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் முடிவு செய்யட்டும் என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தன. மேலும், கைப்பற்றப்பட்ட பணம் யாருடையது என்பதை உச்ச நீதிமன்றம் ஆராயத் தேவையில்லை என்று கருத்து தெரிவித்த நீதிபதிகள், வழக்கை தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைத்தனர்.