அரசியல்

"திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 90% திட்டங்களை செயல்படுத்தியுள்ளது" - செல்வப்பெருந்தகை பேட்டி !

"திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 90% திட்டங்களை செயல்படுத்தியுள்ளது" - செல்வப்பெருந்தகை பேட்டி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை ராயப்பேட்டையில் அமைந்துள்ள சத்தியமூர்த்தி பவனி அகில இந்திய அமைப்பு சாரா தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்கள் காங்கிரஸ் சார்பில் மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப் பெருந்தகை கலந்து கொண்டார்.

அதனைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அடுத்த ஆண்டு தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு 2028 ஆம் ஆண்டு நிறைவடையும் என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது குறித்தான கேள்விக்கு, "ஏன் உடனே நிரப்ப வேண்டியது தானே. புள்ளியல் துறை ஒன்றிய அரசு கட்டுப்பாட்டில் தானே உள்ளது. மூன்று ஆண்டுகள் தள்ளிப் போவது அரசியல் வேலை ஏமாற்று வேலை" என தெரிவித்தார்.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான பணிகளை காங்கிரஸ் கட்சி தொடங்கியதா என்ற கேள்விக்கு," கிராம கமிட்டியில் இருந்து எல்லாவற்றையும் ஆரம்பித்து இருக்கிறோம். இந்தியா கூட்டணியைப் பொறுத்த வரைக்கும் இந்தியா கூட்டணியின் தமிழக தலைவர் முதலமைச்சர் அவர்கள் எடுக்கும் முடிவு தான். யார் வந்தாலும் வரவேற்போம். ஆனால் அது குறித்து கூட்டணியின் தலைவரான முதலமைச்சர்தான் முடிவெடுப்பார்.மாநிலக் கட்சிகள் இங்கே பேசுகிறார்கள். நாங்கள் தேசிய கட்சி, எங்களை பொறுத்தவரை அவர்கள் தான் அனைத்து முடிவையும் எடுப்பார்கள்" என தெரிவித்தார்.

"திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் சொன்ன 90% திட்டங்களை செயல்படுத்தியுள்ளது" - செல்வப்பெருந்தகை பேட்டி !

திமுக கூட்டணி கலைந்து போகும் என எதிர்கட்சிகள் கூறுவது குறித்தான கேள்விக்கு, "ஒரு செங்கலை கூட பேர்த்தெடுக்க முடியாது. இது கொள்கை கூட்டணி, பாசிச சக்திகளை விரட்டுகின்ற கூட்டணி, ஒருபோதும் யாரும் இந்த கூட்டணியை விட்டு விலகவும் மாட்டார்கள். திமுக தேர்தல் வாக்குறுதியில் 90 விழுக்காடு நிறைவேற்றி இருக்கிறார்கள். அதில் எந்த மாற்று கருத்தும் கிடையாது.

அரசியலுக்காக எது வேண்டுமானாலும் பேசலாம். தேர்தலில் கொடுக்காத வாக்குறுதிகளையும் திமுக நிறைவேற்றி இருக்கிறது. அதை பற்றி ஏன் யாரும் பேச மறுக்கிறார்கள். காலை உணவு திட்டம் எல்லாம் தேர்தல் அறிக்கையில் கொடுக்காதது அதையெல்லாம் நிறைவேற்றி இருக்கிறார்கள்.நீட் தேர்வு பொருத்தவரைக்கும் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருக்கிறது. நீட் தேர்வு தோல்வியால் மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டாலும் ஒன்றிய அரசு அதனை பற்றி கவலைப்படுவதில்லை"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories