அரசியல்

உச்சநீதிமன்றத்தில் ஏப்.14-ம் வக்ஃப் சட்டம் விசாரணை- அவசர அவசரமாக சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த பாஜக அரசு!

உச்சநீதிமன்றத்தில் ஏப்.14-ம் வக்ஃப் சட்டம் விசாரணை- அவசர அவசரமாக சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த பாஜக அரசு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இஸ்லாமிய மக்களுக்கு எதிராக வக்ஃப் சட்ட திருத்த மசோதாகை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து ஒன்றிய பா.ஜ.க அரசு தற்போது நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தபோதும், இதை ஒன்றிய அரசு நிறைவேற்றி இருக்கிறது.

இந்த மசோதாவிற்கு திமுக ஆரம்பத்தில் இருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்தது. திமுக எம்.பிக்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். அதோடு இந்த சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமே நிறைவேற்றப்பட்டது.

உச்சநீதிமன்றத்தில் ஏப்.14-ம் வக்ஃப் சட்டம் விசாரணை- அவசர அவசரமாக சட்டத்தை அமலுக்கு கொண்டு வந்த பாஜக அரசு!

எனினும் அதனை பொருட்படுத்தாக ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் வக்ஃப் மசோதாவை நிறைவேற்றியது. இதை அடுத்து, உச்சநீதிமன்றததை எதிர்க்கட்சிகள் நாடியுள்ளன. இம்மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தி.மு.க, காங்கிரஸ், இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக்,ஜமாயத் உலமா, சமஸ்த கேரளா ஜாமாயத் உலமா, உள்ளிட்ட கட்சிகள் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த வழக்குகள் ஏப்ரல் 16-ம் தேதி விசாரிக்கப்படும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது. இந்த நிலையில், இன்றிலிருந்து புதிய வக்ஃப் சட்டம் அமலுக்கு வருகிறது என்று ஒன்றிய அரசு அவசர அவசரமாக அறிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தால் இந்த மசோதாவுக்கு தடை விதிக்கப்படும் என அஞ்சி இந்த மசோதா உடனடியாக அமலுக்கு வந்துள்ளது என எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

banner

Related Stories

Related Stories