அரசியல்

“தமிழ்நாடு மீனவர்களுக்கு தலா ரூ.73,000 அபராதம்”- இலங்கை கடற்படையின் வஞ்சிப்பு குறித்து ஒன்றிய அரசு தகவல்!

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 32 தமிழ்நாடு மீனவர்களுக்கு, இலங்கை நீதிமன்றம் ரூ.73,000 அபராதத்துடனான விடுதலை அல்லது 6 மாத சிறை தண்டனை தீர்ப்பு வழங்கியதாக ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சகம் தகவல்.

“தமிழ்நாடு மீனவர்களுக்கு தலா ரூ.73,000 அபராதம்”- இலங்கை கடற்படையின் வஞ்சிப்பு குறித்து ஒன்றிய அரசு தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

நாடாளுமன்றக் கூட்டத்தொடர் மார்ச் 10ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இக்கூட்டத்தொடரில், நாட்டில் நிலவும் பல்வேறு சிக்கல்கள் குறித்த எதிர்க்கட்சிகளின் கேள்விகளும், அதற்கு ஒன்றிய அரசு அளிக்கும் பதில்களும் இடம்பெற்று வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக, தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம்.அப்துல்லா, “இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் 32 பேர் அண்மையில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, தமிழ்நாடு முழுவதும் போராட்டம் நடந்து வருவதை ஒன்றிய அரசு அறிந்திருக்கிறதா?

அறிந்திருக்கிறது என்றால், மீனவர்களின் பாதுகாப்பு மற்றும் விடுதலைக்கு ஒன்றிய அரசு முன்னெடுத்த நடவடிக்கைகள் என்ன?

“தமிழ்நாடு மீனவர்களுக்கு தலா ரூ.73,000 அபராதம்”- இலங்கை கடற்படையின் வஞ்சிப்பு குறித்து ஒன்றிய அரசு தகவல்!

இந்திய மீனவர்கள், இலங்கை கடற்படையால் தொடர்ந்து வஞ்சிக்கப்படுவது குறித்து ஒன்றிய அரசு மேற்கொண்ட பேச்சுவார்த்தைகள் என்ன?” என கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஒன்றிய வெளியுறவுத்துறையின் சார்பில் இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், “இலங்கை கடற்படையால் கடந்த பிப்ரவரி 22ஆம் நாள் கைதுசெய்யப்பட்ட 32 இந்திய மீனவர்களுக்கு, தலா ரூ.73 ஆயிரம் அபராதத்துடன் விடுதலை அல்லது 6 மாதம் சிறை தண்டனை தீர்ப்பாக வழங்கப்பட்டது.

இந்திய அரசின் சார்பில், இலங்கை அரசுடன் இது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. 2024 ஆண்டு முதல் தற்போது வரை 591 மீனவர்கள் அபராதத்துடன் விடுதலை பெற்றுள்ளனர்.”

banner

Related Stories

Related Stories