அரசியல்

இந்தியாவின் மாநில சுயாட்சி குரல்... ஆங்கில, இந்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக நமது முதலமைச்சர்!

இந்தியாவின் மாநில சுயாட்சி குரல்... ஆங்கில, இந்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக நமது முதலமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு நேற்று (மார்ச் 10) தொடங்கிய நிலையில், தொகுதி மறுவரையறை, மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தித் திணிப்பு, தேசிய கல்விக் கொள்கை ஆகியவற்றுக்கு திமுக உள்ளிட்ட தமிழ்நாட்டின் இந்தியா கூட்டணி கட்சி உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

அப்போது பேசிய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழ்நாட்டு மக்களை நாகரீகம் இல்லாதவர்கள் என்று அவமதித்து பேசினார். இதற்கு திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் நாடாளுமன்றத்திலேயே தங்களது கடும் எதிர்ப்புகளை பதிவு செய்தனர். இதன் காரணமாக தனது கருத்தை தர்மேந்திர பிரதான் திரும்பப்பெற்றார்.

இந்தியாவின் மாநில சுயாட்சி குரல்... ஆங்கில, இந்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக நமது முதலமைச்சர்!

இதைத்தொடர்ந்து தர்மேந்திர பிரதானின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாவை அடக்க வேண்டும் என்று எச்சரிக்கை விடுத்தார். மேலும் நாடாளுமன்றத்தில் தமிழ்நாடு அரசு பி.எம்.ஸ்ரீ திட்டத்தில் கையெழுத்திட வந்ததாக தர்மேந்திர பிரதான் பேசிய பொய்யை ஆதாரபூர்வமாக அம்பலப்படுத்தினார்.

இந்தியாவின் மாநில சுயாட்சி குரல்... ஆங்கில, இந்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக நமது முதலமைச்சர்!

இந்த நிலையில் நேற்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில், ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு ஒரு மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ள கண்டனங்கள் ஆங்கிலம் மற்றும் இந்தி ஊடகங்களில் தேசிய அளவில் தலைப்பு செய்தியாக வெளியாகியுள்ளது.

இந்தியாவின் மாநில சுயாட்சி குரல்... ஆங்கில, இந்தி ஊடகங்களில் தலைப்புச் செய்தியாக நமது முதலமைச்சர்!

அதாவது NDTV, The Indian Express, Times of India, Hindustan Times, Mint, Free Press Journal, India Today, One India, Business Standard, Swarajya, The Hindu, The Economic Times, Mathurabhumi.com, The Statesman, India.com, Jagran.com, abp, hindikhabar, outlookhindi போன்ற பல்வேறு ஹிந்தி மற்றும் ஆங்கில ஊடகங்களில் ஒன்றிய அமைச்சருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ள கண்டனமே தலைப்புச் செய்தியாக வெளியாகியுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சியை கொள்கையாக கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்ற மாநிலங்களின் உரிமைகள் பறிக்கப்படும் சூழலிலும் குரல் கொடுத்து வருகிறார். அண்மையில் கூட தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக பாஜக ஆளாத 7 மாநிலங்களைச் சேர்ந்த முதலமைச்சர்களுக்கும், முன்னாள் முதலமைச்சர்களுக்கும், அம்மாநிலங்களில் உள்ள பல்வேறு முக்கிய கட்சிகளின் தலைவர்களுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories