அரசியல்

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு!

இந்திய நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மை இழந்த பா.ஜ.க.வின் அடுத்த நகர்வு, ‘நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு.’ வடக்கை வைத்தே ஆட்சியைப் பிடிக்க திட்டமிடும் பா.ஜ.க.

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்றியத்தில் ஆட்சி வகிக்கும் பா.ஜ.க.விற்கு தொடர் இடையூறாக விளங்கி வரும் தென் மாநிலங்களின் நிகராளித்துவத்தை கூண்டோடு அழிக்கும் போக்காகவே, ஒன்றிய அரசு திட்டமிடும் நாடாளுமன்ற தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) முன்மொழிவு அமைந்துள்ளது.

இந்த மறுசீரமைப்பு முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், மக்களவையில் தமிழ்நாடு பெற்றிருக்கிற 38 என்ற நிகராளித்துவ எண்ணிக்கை 31ஆக குறையும் ஆபத்து ஏற்படும். இது தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, பா.ஜ.க.வை எதிர்த்து குரல் எழுப்பும் ஒட்டுமொத்த தென்னிந்திய மாநிலங்களுக்கும் இதே நிலைதான்.

காரணம், ஒன்றிய அரசின் கோட்பாட்டை தென்னிந்திய மாநிலங்கள் உறுதியாக பின்பற்றியதுதான். உலக அளவில் பரப்பளவின் அடிப்படையில் 7ஆவது இடத்தை இந்தியா பெற்றிருப்பினும், மக்கள் தொகையில் சீனாவை முந்திக்கொண்டு முதலிடத்திற்கு சென்று கொண்டிருக்கிறது இந்தியா.

இதனால், மக்களுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்படும் சூழல் அதிகரித்து வருவதோடு, பசி - பட்டினியும் மீளா துயராக உருவெடுத்துள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவர மக்கள் பிறப்பு விகிதம் கட்டுப்படுத்தப்பட வேண்டும் என்பதை உணர்ந்து நடந்ததன் விளைவாகதான், தென்னிந்திய மாநிலங்களுக்கு இன்று வஞ்சிப்பு இழைக்கப்பட்டிருக்கிறது.

நாடாளுமன்றத் தொகுதி மறுசீரமைப்பு - அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு 45 கட்சிகளுக்கு அழைப்பு!

இவை ஒருபுறம் இருக்க, பசியையும், பட்டினியையும் பொருட்படுத்தாத மாநிலங்களுக்கு நிகராளித்துவம் கூடுதலாக அளிக்க முன்வந்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. காரணம், அங்கு பா.ஜ.க கையாண்டு வரும் ஆதிக்கம். ஆட்சியின் மீது கொண்டுள்ள ஆசை.

ஆட்சிக்காகவும், அதிகாரத்திற்காகவும் பாரபட்ச நடவடிக்கைகளை செய்து வரும் பா.ஜ.க.வின் அதிகாரத்துவத்தின் வெளிப்பாடாக அமைந்திருக்கும், இந்த மறுசீரமைப்பு முன்மொழிவை திரும்பப்பெற்றிடாவிடில், தமிழ்நாட்டின் உரிமை மேலும் புறக்கணிப்படும் என்பதே தவிர்க்க முடியாத உண்மையாகவும் உள்ளது.

இதனை உணர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, கட்சி பாகுபாடு இன்றி தமிழ்நாட்டின் உரிமையை மீட்டெடுக்க அனைவரும் ஒன்று திரள்வோம் என அழைப்பு விடுத்துள்ளார்.

அதன்படி, தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியான அ.தி.மு.க, தோழமை கட்சிகளான வி.சி.க, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி உள்ளிட்ட 45 அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு அழைப்பு விடுத்து, வருகிற மார்ச்-5ஆம் நாள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வலியுறுத்தியுள்ளது தமிழ்நாடு அரசு.

மாநில உரிமைக்கு எதிரான இந்த அடக்குமுறை நடவடிக்கைக்கு இடம்தராமல், ஒட்டுமொத்த தமிழ்நாடும் ஒருமித்த குரலில் போராடி உரிமையை மீட்டெடுப்போம் எனவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

banner

Related Stories

Related Stories