அரசியல்

“ஒன்றிய அரசின் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?” - அண்ணாமலைக்கு எம்.எம்.அப்துல்லா MP கேள்வி!

ஒவ்வொரு இந்தியருக்கும் மும்மொழி தேவை என்கிற எண்ணம் பாஜகவுக்கு இருந்தால், பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் மக்கள் எந்த 3வது மொழியைப் படிக்கிறார்கள்? என்று திமுக MP MM அப்துல்லா கேள்வியெழுப்பியுள்ளார்.

“ஒன்றிய அரசின் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?” - அண்ணாமலைக்கு எம்.எம்.அப்துல்லா MP  கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஒன்றியத்தில் பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே மக்களுக்கு எதிரான செயல்களை தொடர்ந்து செய்து வருகிறது. பாஜகவின் இந்த செயல்களுக்கு எதிராக குரல் எழுப்பும் மாநிலங்களை தொடர்ந்து குறிவைத்து நிதி வழங்காமல் வஞ்சித்து வருகிறது. அதிலும் தமிழ்நாட்டிடம் பாஜக நிதியை கொடுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு செயல்பட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியை தர மறுத்து வருவதற்கு கண்டனங்கள் குவிந்து வரும் நிலையில், அண்மையில் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.2 ஆயிரம் கோடி நிதியை பாஜக ஆளும் மற்றும் அதன் கூட்டணி மாநிலங்களுக்கு பகிர்ந்தளித்துள்ளது. இதற்கு தமிழ்நாடு மக்கள், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் மத்தியில் கண்டனங்கள் எழுந்து வந்த நிலையில், மும்மொழி கொள்கை, தேசிய கல்விக் கொள்கை உள்ளிட்டவையை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்தினால்தான் தமிழ்நாட்டுக்கு கல்வி நிதி தர முடியும் என்று ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் நேற்று (பிப்.15) பேட்டியளித்துள்ளது கண்டனங்களை எழுப்பியுள்ளது.

“ஒன்றிய அரசின் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?” - அண்ணாமலைக்கு எம்.எம்.அப்துல்லா MP  கேள்வி!

அந்த வகையில் ஒன்றிய அமைச்சரின் பேச்சுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், "They have to come to the terms of the Indian Constitution" என்கிறார் ஒன்றியக் கல்வி அமைச்சர். மும்மொழிக் கொள்கையை 'rule of law' என்கிறார். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் எந்தப் பிரிவு மும்மொழிக் கொள்கையைக் கட்டாயமாக்குகிறது? எனக் கல்வி அமைச்சரால் கூற முடியுமா?

மாநிலங்களால் ஆனதே இந்திய ஒன்றியம்! ஒத்திசைவுப் பட்டியலில் உள்ளதுதான் கல்வி! அதற்கு ஒன்றிய அரசு ஏகபோக எஜமானர்கள் அல்ல! "மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது" என்று blackmail செய்யும் தடித்தனத்தைத் தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்! எங்கள் உரிமையைத்தான் கேட்கிறோம்! உங்கள் தனிச்சொத்தைக் கேட்பதுபோல் திமிராகப் பேசினால், தமிழர்களின் தனிக்குணத்தையும் டெல்லி பார்க்க வேண்டியிருக்கும்..." என்று குறிப்பிட்டு கண்டனம் தெரிவித்திருந்தார்.

“ஒன்றிய அரசின் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?” - அண்ணாமலைக்கு எம்.எம்.அப்துல்லா MP  கேள்வி!

இந்த சூழலில் இதற்கு மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, "தற்போது 2025 ஆம் ஆண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உலகம் வேகமாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. இன்னும், உங்கள் 1960களின் காலாவதியான கொள்கையை, தமிழகக் குழந்தைகள் மீது திணிப்பது என்ன நியாயம்?" என்றும், தமிழ்நாட்டில் இருக்கும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இந்தி இருப்பதாக கூறியும் விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில், அண்ணாமலையின் இந்த அடிப்படை அறிவில்லாத விமர்சனத்துக்கு திமுக எம்.பி. எம்.எம்.அப்துல்லா பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து எம்.எம்.அப்துல்லா எம்.பி. வெளியிட்டுள்ள கண்டன பதிவு வருமாறு :

"சிபிஎஸ்இ பள்ளிகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் இருப்பவை என்கிற குறைந்தபட்ச அறிவாவது இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் விரும்புபவர்கள் இந்தி கற்றுக்கொள்ள எந்தத் தடையும் இல்லை. இந்தித் திணிப்பைத் தான் தமிழ்நாடு எதிர்க்கிறது. ஒவ்வொரு இந்தியருக்கும் மும்மொழி தேவை என்கிற எண்ணம் பாஜகவுக்கு இருந்தால், பாஜக ஆளும் வட இந்திய மாநிலங்களில் மக்கள் எந்த மூன்றாவது மொழியைப் படிக்கிறார்கள்? எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது? தமிழ்நாட்டில் உள்ள ஒன்றிய அரசு நடத்தும் பள்ளிகளில் ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை?

தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும் என்பதை நேரடியாக சொல்ல முடியாமல் மும்மொழிக் கொள்கை என்கிற பெயரில் பாஜக ஆடும் நாடகம் தமிழ்நாட்டில் உள்ள சாமானிய மக்களுக்குக் கூட நன்கு புரியும். மொழித்திணிப்புக்கு எதிராக நிற்பது காலாவதியான கொள்கை அல்ல. மாநில உரிமை காக்கும் மகத்தான கொள்கை. நாவடக்கத்தோடு பேசுங்கள்!"

banner

Related Stories

Related Stories