அரசியல்

புத்தகக் காட்சி: அறிவு சார் உலகத்தில் வந்து உளறி சென்ற சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் - பபாசி விமர்சனம் !

புத்தகக் காட்சி: அறிவு சார் உலகத்தில் வந்து உளறி சென்ற சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் - பபாசி விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி ஏ மைதானத்தில் 48வது புத்தகக் காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் புத்தகக் காட்சிக்கு ஒரு பதிப்பகத்தின் ( டிஸ்கவரி புக் பேலஸ்) சார்பில் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது.

அதில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு புத்தகத்தை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்படாமல் புதுச்சேரியின் தமிழ்தாய் வாழ்த்து கீதம் இசைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது....

புத்தகக் காட்சி: அறிவு சார் உலகத்தில் வந்து உளறி சென்ற சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் - பபாசி விமர்சனம் !

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய சீமான் புத்தகக் காட்சியின் ஐந்தாவது நுழைவாயிலில் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பாதை என்று பெயர் வைக்கப்பட்டிருப்பது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கத்தின் தலைவர் கவிதா சேது சொக்கலிங்கம் மற்றும் செயலாளர் முருகன் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், "ஒவ்வொரு பதிப்பாளர்களும் இந்த புத்தகக் காட்சியில் நூல்களை அறிமுகம் செய்வார்கள். அதுபோல் ஒரு பதிப்பகத்தின் சார்பில் புத்தகம் அறிமுகம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது, அதில் சீமான் கலந்து கொண்டார்.

புத்தகக் காட்சி: அறிவு சார் உலகத்தில் வந்து உளறி சென்ற சீமான் மன்னிப்பு கேட்கவேண்டும் - பபாசி விமர்சனம் !

அப்போது நான் சீமானிடம் இது ஒரு இலக்கிய மேடை, இங்கு அரசியல் பேசுவது கிடையாது. இங்கு அனைத்துக் கட்சிகளைச் சேர்ந்தவர்களும் வருகிறார்கள், புத்தகங்கள் இலக்கியங்களைப் பற்றி தான் பேசுகிறார்கள் என்று சீமான் மேடை ஏறுவதற்கு முன்பே கூறினேன். என்னிடம் நான் அரசியல் குறித்தெல்லாம் பேச மாட்டேன் என்று கூறிவிட்டு மேடைமேல் அரசியல் மற்றும் தனிநபர் தாக்குதலை நடத்தினார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை மாற்றி பாடியதற்கு பபாசி சார்பில் அந்த புத்தக பதிப்பகத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பதிப்பகத்தின் சார்பில் மூன்று நாட்களுக்குள் விளக்கம் கொடுக்கப்பட வேண்டும் என்று அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த செயலுக்காக சீமானும் மன்னிப்பு கேட்க வேண்டும். அறிவு சார் உலகத்தில் வந்து சீமான் உலறிவிட்டு செல்வது எந்த விதத்தில் நியாயம் ? புத்தகக் காட்சிக்கு விருந்தினராக வந்த சீமான், அவருடைய கண்ணியத்தை காக்க தவறி விட்டார்"என்று கூறினார்.

banner

Related Stories

Related Stories