பேரறிஞர் அண்ணாவை அவமானப்படுத்தி கார்ட்டூன் வெளியிட்டுள்ள ஆனந்த விகடனின் செயலுங்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ஆனந்த விகடனின் இந்த மோசமான செயலுக்கு முரசொலி நாளிதழும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து முரசொலியில் வெளியான கட்டுரை :
சென்னையில் ஒரு மாணவி. கொடூரன் ஒருவனால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார்.
அந்த நபரை 24 மணி நேரத்துக்குள் பிடித்து கைது செய்து சிறையில் அடைத்து விட்டது சென்னை காவல்துறை. அனைவர் பாதுகாப்பையும் உறுதி செய்துள்ளது அரசு.
எங்கே இழவு விழும்/ வன்கொடுமை நடக்காதா என்று காத்திருக்கும் பொள்ளாச்சி பழனிசாமி கூட்டம் ஒரு பக்கம் என்றால், காலம் காலமாக கதறிக் கொண்டிருக்கும் குலத்தொழில் கும்பல் மறுபுறம்.
நம் பிள்ளைகளின் முன்னேற்றத்தைப் பார்த்து கதறிக் கொண்டிருக்கும் “மனுவாத விகடன் கூட்டம்' எப்படி கார்ட்டூன் போடுகிறது?
பேரறிஞர் பெருந்தகை அண்ணாவுக்குப் பின்னால் ஒரு மாணவி கதறுகிறாராம்!
அனுராதா ரமணன் பேட்டி கொடுத்தால் எப்படி கார்ட்டூன் போடுவாய்?
...வாள் பின்னால் அவர் பதுங்கி இருப்பது மாதிரியா போடுவாய்?
காஞ்சிபுரம் கோவில் கருவறைக்குள் நடந்த தேவநாதன் மேட்டர் கட்டுரை போட்டால் யாருக்குப் பின்னால் அந்தப் பெண் மறைந்திருப்பதாய் கார்ட்டூன் போடுவாய்?
அண்ணா பல்கலைக் கழகத்துக்கு வேந்தர் யார்? எல்லா துணைவேந்தர்களையும் கண்ட்ரோல் செய்வது யார்? மாஜி ஐ.பி.எஸ். பின்னால் மறைந்திருப்பது போல கார்ட்டூன் போடுவாயா? பேடி!
“பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவு' என்ற போர்வையில், அண்ணா மீது ஆரிய அகம்பாவத்தையும் கொழுப்பையும் காட்டுவதா?
பாதிக்கப்பட்டவர் பேர் மட்டுமல்ல, இருப்பிடம் கூட காட்டக்கூடாது என்றால் அதை மீறி அண்ணா பல்கலைக் கழகத்தைக் கொச்சைப்படுத்தத் தயங்காத இந்த வர்ணக்கும்பலின் வன்மத்தை நினைத்தால் வாந்திதான் வருகிறது.
ஆதிக்க சக்திகளின் கையில் ஊடகம் போய்விட்டால், ஊடக சுதந்திரம் கொடுத்து விடக் கூடாது என்பார்கள்.
ஆனந்த விகடனே... மன்னிப்புக் கேள்!
நீ மன்னிப்புக் கேட்டாலும் மன்னிக்க மாட்டோம்!