காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள பல்வேறு பகுதிகளில் 80 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வகுப்பறைக் கட்டிடம், அங்கன்வாடி மையம்,நியாய விலை கடை உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளை காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினரும், திமுக மாணவரணி செயலாளருமான எழிலரசன் திறந்து வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அண்ணா நகர் பகுதியில் புதிய நியாய விலை கடை கட்டிடம் கட்டுவதற்கான பணியினை அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். அதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "பாஜக தலைவர் அண்ணாமலையின் செயல் ஒரு அரசியல் கட்சி தலைவர்கள் செய்யும் செயலல்ல.
சீர்திருத்த அரசியல் நூற்றாண்டு கடந்து நகந்து செல்லக்கூடிய நிலையில் அவரின் இந்த செயல் மூட பழக்கத்திற்கோ அல்லது பிற்போக்கு தனத்திற்கு உரிய வகையில் அடையாளப்படுத்துகிறது. பெரியார் மண்ணுக்கு இத்தகைய செயல் உகந்தல்ல. அண்ணாமலையின் போராட்டம் ஒரு கேலிக்கூத்தாக மாறிவிட்டது,
எதிர்கட்சியாக இருந்தது போதே ஆளுநர் அவர்கள் அரசு பணியை ஆய்வு மேற்கொண்டபோது எதிர்த்து வருகிறோம், ஆளுநர் என்பவர் மாநிலத்தின் அரசியலமைப்பு பொறுப்பேற்றுள்ளாரே தவிர நிர்வாக ரீதியாக தலைமை இல்லை, முதலமைச்சர்தான் நிர்வாக தலைமை பொறுப்பில் உள்ளவர்.
அண்ணா பல்கலைக்கழக பகுதிகளில் தவறு நிகழ்ந்தால் அதற்கு பல்கலைக்கழக வேந்தராக ஆளுநர்தான் முழு பொறுப்பு. இது குறித்து பலரும் கேள்வி கேட்ட பின்னர் தற்போதுதான் அண்ணா பல்கலைக்கழகத்தில் ஆளுநர் ஆய்வுக்கு செல்கிறார். ஆய்வுக்கு பின்னர் ஆளுநர் பல்கலைக்கழக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பாரா என்பது குறித்து எதிர்பார்க்கிறேன்"என்று கூறியுள்ளார்.