அரசியல்

உ.பிக்கு 31,962 கோடி, பீகாருக்கு 17,921 கோடி... தமிழ்நாட்டுக்கு வெறும் 7,268 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு!

மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

உ.பிக்கு 31,962 கோடி, பீகாருக்கு 17,921 கோடி... தமிழ்நாட்டுக்கு வெறும் 7,268 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

ஒன்றிய அரசுக்கு வரியாக தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் நமக்கு 29 பைசாதான் திரும்பக் கிடைக்கிறது. அதே எல்லாம் பா.ஜ.க. ஆளும் மாநிலம் செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கு 2.73 ரூபாய் திரும்பக் கிடைக்கிறது.

2014 முதல் 2022 வரை ஒன்றிய அரசின் நேரடி வரி வருவாயில் தமிழ்நாட்டின் பங்கு ரூ.5.16 லட்சம் கோடி. ஆனால் வரிப் பகிர்வாக நமக்குக் கிடைத்தது வெறும் ரூ.2.08 லட்சம் கோடி.அதே சமயத்தில் உ.பி.யின் பங்களிப்பு ரூ.2.24 லட்சம் கோடி. ஆனால் அவர்களுக்குக் கொடுக்கப்பட்டது ரூ.9.04 லட்சம் கோடி.

உத்தர பிரதேசம், பீகாருக்கு 200% பேரிடர் நிதி வழங்கப்படும் நிலையில், தமிழ்நாட்டிற்கு 64% மட்டுமே வழங்கப்படுகிறது. ஒன்றிய அரசின் இந்த பாகுபடுக்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

உ.பிக்கு 31,962 கோடி, பீகாருக்கு 17,921 கோடி... தமிழ்நாட்டுக்கு வெறும் 7,268 கோடி: ஒன்றிய அரசு ஒதுக்கீடு!

இந்த நிலையில் மாநிலங்களுக்கான நிதியை ஒன்றிய அரசு விடுவித்துள்ள நிலையில், தமிழ்நாட்டுக்கு ரூ.7,268 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ.31,962 கோடியும், பீகாருக்கு ரூ.17,921 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதன் மூலம் தமிழ்நாட்டை பாஜக தொடர்ந்து புறக்கணித்து வருவது மீண்டும் அம்பலமாகியுள்ளது. அதே நேரம் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு தொடர்ந்து அதிக நிதி அளித்து வருவதும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.

banner

Related Stories

Related Stories