அரசியல்

நீட் சிக்கலை, நாடே உணர்ந்திருக்கிறது! : தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி!

“இந்த நாடே, நீட் தேர்வின் சிக்கல்களை, உணர்ந்து இருக்கக்கூடிய சூழலில் நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்” : தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி!

நீட் சிக்கலை, நாடே உணர்ந்திருக்கிறது! : தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

தி.மு.க துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்றக் குழு தலைவருமான கனிமொழி அவர்கள், டெல்லியில் நடைபெற்று முடிந்த 18ஆவது மக்களவையின் முதல் கூட்டத்தொடரில் கலந்துகொண்டு, திரும்பியபோது அளித்த பேட்டியில் பேசியதாவது,

“நாடு முழுவதும் மாணவர்கள் நீட்டிற்கு எதிராக போராட்டம் நடத்திவரும் நிலையில் இன்று மக்களவையில் நீட் பிரச்சினைகள் குறித்து அனைத்து எதிர்க்கட்சிகளும் குரல் எழுப்பினோம்.

அதேபோல் இன்று தமிழக சட்டமன்றத்திலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வேண்டி இரண்டாவது முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மக்களவை மற்றும் மாநிலங்களவையிலும் எங்கள் உரிமைகள் மறுக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பற்றி எரியும் பிரச்சனைகள் குறித்து எதிர்க்கட்சிகள் விவாதமிட, பாஜக அரசு அனுமதி அளிக்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் பேச அனுமதி அளிக்க வேண்டும் என்ற நாடாளுமன்ற மரபையே சீர்குலைத்து, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்கள் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டது.

நீட் சிக்கலை, நாடே உணர்ந்திருக்கிறது! : தி.மு.க துணை பொதுச்செயலாளர் கனிமொழி!

முதலில் இருந்தே, நீட் தேர்விற்கு எதிரான பிரச்சனைகள் குறித்து தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களும், திராவிட முன்னேற்றக் கழகமும், தமிழகமும் குரல் எழுப்பி வருகிறது.

அதன் தொடர்ச்சியாக, தற்போது நீட் தேர்வு வினாத்தாள் குளறுபடியினால் ஒரு குறிப்பிட்ட மாணவர்கள் எப்படி பயனடைகிறார்கள்.

பொதுவாக கிராமப்புற மாணவர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்கள் இந்த நீட் தேர்வினால் எவ்வாறு பாதிக்கப்படுகிறார்கள் என்பதின் அடிப்படையில் தான், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 8 மாநில முதலமைச்சர்களுக்கு நீட் தேர்வுக்கு எதிராக, சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டுவர வேண்டும் என கடிதம் எழுதி இருக்கிறார்.

இந்த நாடே, நீட் தேர்வின் சிக்கல்களை, உணர்ந்து இருக்கக்கூடிய சூழலில் நீட் தேர்வு ரத்து செய்ய வாய்ப்பு இருக்கிறது என நம்புகிறேன்” என‌ தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories