அரசியல்

ஆந்திர NDA கூட்டணிக்குள் உள்ள முரண்கள் : யார் நினைப்பது நடக்கும்?

இஸ்லாமியர்களுக்கு இடஒதுக்கீடு, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் என்ற முன்மொழிவுகளில் கருத்தியல் வேறுபடும், பா.ஜ.க - தெலுங்கு தேசம் கட்சி.

ஆந்திர NDA கூட்டணிக்குள் உள்ள முரண்கள் : யார் நினைப்பது நடக்கும்?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஏப்ரல் மாதம் தொடங்கி, ஜூன் வரை 7 கட்டங்களாக நடந்த மக்களவை தேர்தலில், மோடி உள்ளிட்ட பா.ஜ.க மூத்த தலைவர்கள் உமிழ்ந்த வெறுப்பு பேச்சுகள் ஏராளம்.

அவ்வெறுப்பு பேச்சுகளில், இஸ்லாமியர்களை முன்னிறுத்தி வைக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளுள் ஒன்றான, “இஸ்லாமியர்களுக்கென தனி இடஒதுக்கீடு தருவதை காலத்திற்கும் பா.ஜ.க ஏற்றுக்கொள்ளாது” என்பது மிகவும் சர்ச்சை வாய்ந்ததாக அமைந்தது.

இதனால், உத்தரப் பிரதேசம், மகாராஷ்டிரம் உள்ளிட்ட பா.ஜ.க வலுமிக்க மாநிலங்களிலும் தோல்வியை தழுவியது.

அவ்வாறு, பொதுமேடைகளில் உமிழ்ந்த வெறுப்புகளால் பெருவாரியான வாக்குகள் சிதைவுற்றது என்றால், மோடியின் நேர்காணல்கள் வழியும் பல வாக்குகள் சிதைவுற்றன.

அதில் குறிப்பிட்டு சொல்லும்படியானது தான், “பெண்களுக்கு இலவச பேருந்து வசதி செய்து தருவதால், மெட்ரோ வருமானத்தில் இடர் உருவாகியுள்ளது” என்பது.

ஆந்திர NDA கூட்டணிக்குள் உள்ள முரண்கள் : யார் நினைப்பது நடக்கும்?

ஆனால், பா.ஜ.க.வின் இவ்விரு முன்மொழிவுகளுக்கும், நேர் எதிரான தேர்தல் வாக்குறுதிகளை அளித்த கட்சி தான், NDA கூட்டணியில் இருக்கிற தெலுங்கு தேசம் கட்சி.

தெலுங்கு தேசம் கட்சி, தாம் தேர்தலில் வென்றால், “இஸ்லாமியர்களுக்கு தனி இட ஒதுக்கீடும் வழங்கப்படும், பெண்களுக்கு இலவச பேருந்து போக்குவரத்து வசதியும் செய்து தரப்படும்” என தெரிவித்தது.

இதனால், மக்களும் தங்களது பெருவாரியான ஆதரவை தெலுங்கு தேசம் தலைமையிலான NDA கூட்டணிக்கு வெளிப்படுத்தினர்.

இந்நிலையில், ஒன்றியத்தில் பெரும்பான்மை இருக்கைகளை கொண்ட பா.ஜ.க.வின் முன்மொழிவுகள் ஆந்திராவில் எடுபடுமா?

அல்லது,

ஆந்திராவில் பெரும்பான்மை இருக்கைகளை கொண்ட தெலுங்கு தேசம் கட்சியின் முன்மொழிவுகள் ஆந்திராவில் எடுபடுமா? போன்ற கேள்விகள் வலுக்கத்தொடங்கியுள்ளன.

banner

Related Stories

Related Stories