அரசியல்

“தென்மாநிலங்களுக்காக வாதாடி, உரிமைகளை பாதுகாப்பார்” -சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

தென்மாநிலங்களுக்காக வாதாடி, உரிமைகளை பாதுகாப்பார் என்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை சந்தித்தபின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

“தென்மாநிலங்களுக்காக வாதாடி, உரிமைகளை பாதுகாப்பார்” -சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை நேற்று (ஜூன் 4) நடைபெற்ற நிலையில், இதில் இந்தியா கூட்டணி 234 இடங்களையும் பாஜக கூட்டணி 292 இடங்களையும் பிடித்துள்ளது. இந்த சூழலில் பாஜக தனித்து 240 தொகுதிகளில் வெற்றி பெற்றாலும், தனி பெரும்பான்மை கிடைக்காத நிலையில், கூட்டணி கட்சிகளோடு இணைந்து ஆட்சியை பிடிக்கும் நிர்பந்தத்தில் பாஜக உள்ளது.

இந்த சூழலில் தேர்தல் முடிந்த கையேடு நேற்று (ஜூன் 5) டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்தியா கூட்டணி தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் டெல்லி சென்றனர். இதில் இந்தியா கூட்டணியில் உள்ள அனைத்து கட்சி சார்பிலும் தலைவர்கள் கலந்துகொண்டு ஆலோசித்தனர்.

“தென்மாநிலங்களுக்காக வாதாடி, உரிமைகளை பாதுகாப்பார்” -சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

இதனிடையே நேற்று பாஜக கூட்டணியும் ஆலோசனை மேற்கொண்டது. இதனை முன்னிட்டு பாஜக கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி தலைவரும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு மற்றும் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதிஷ்குமார் ஆகியோரும் டெல்லி சென்றனர்.

இந்த சூழலில் நேற்று டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

“தென்மாநிலங்களுக்காக வாதாடி, உரிமைகளை பாதுகாப்பார்” -சந்திரபாபு நாயுடுவை சந்தித்த முதல்வர் மு.க.ஸ்டாலின்!

"டெல்லி விமான நிலையத்தில், தலைவர் கலைஞர் அவர்களின் நீண்டகால நண்பரான சந்திரபாபு நாயுடு அவர்களைச் சந்தித்தேன். அவருக்கு எனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டு, சகோதர மாநிலங்களான தமிழ்நாடு - ஆந்திர பிரதேசம் இடையேயான நல்லுறவை வலுப்படுத்த இணைந்து செயல்படுவோம் என்ற என் நம்பிக்கையை வெளிப்படுத்தினேன்.

சந்திரபாபு நாயுடு அவர்கள் ஒன்றிய அரசில் மிக முக்கியப் பங்காற்றுவார் என்றும், அவர் தென்மாநிலங்களுக்காக வாதாடி, நமது உரிமைகளைப் பாதுகாப்பார் என்றும் உறுதியாக நம்புகிறேன்." என்று குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories