அரசியல்

40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னிலை : சொல்லி அடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

தமிழ்நாட்டில் 40 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி முன்னிலையில் உள்ளது.

40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னிலை : சொல்லி அடிக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற 18 ஆவது மக்களவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று (ஜூன் 4) தொடங்கி நடைபெற்று வருகிறது. 10 ஆண்டுகால பாசிச பா.ஜ.க ஆட்சியை வீழ்த்துதுவதற்காக 26 எதிர்க்கட்சிகள் இணைந்து ’இந்தியா’ கூட்டணியை உருவாக்கி தேர்தளில் களம் கண்டுள்ளனர். இதுவரை இப்படி எதிர்க்கட்சிகள் இணைந்து தேர்தலில் போட்டியிட்டது கிடையாது. இதனால் இந்த தேர்தல் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

இந்நிலையில் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைந்த தேர்தலின் வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி 40 தொகுதிகளில் போட்டியிட்டது.

இந்நிலையில் தி.மு.க கூட்டணி தமிழ்நாட்டில் 40 தொகுதிகளில் முன்னிலை பெற்று வருகிறது. 21 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க 21 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளது.

அதேபோல், புச்சேரி ஒரு தொகுதி உள்ளிட்ட 10 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியும் முன்னிலையில் இருந்து வருகிறது. மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட்ட மதிமுக, 2 தொகுதிகளில் சிபிஎம் மற்றும் சிபிஐ, விசிக முன்னிலையில் உள்ளது.

மேலும் ஒரு தொகுதியில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி முன்னிலை பெற்று வருகிறது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள மொத்தம் 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணியே முன்னிலை பெற்று வருகிறது.

தி.மு.க கூட்டணியை எதிர்த்து போட்டியிட்ட பா.ஜ.க, அ.தி.மு.க, பாமக, தேமுதிக வேட்பாளர்கள் தோல்வியை தழுவி வருகிறார்கள். தேர்தல் பிரச்சாரங்களின் போது 40 தொகுதிகளிலும் தி.மு.க தலைமையிலான இந்தியா கூட்டணி வெற்றி பெரும் என தி.மு.க தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார் அதைபோலவே தற்போது 40 தொகுதிகளிலும் தி.மு.க கூட்டணி முன்னிலையில் இருந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories