அரசியல்

இருப்பது 10 தொகுதிகள், பாஜக வெல்வதோ 19 தொகுதிகள் : அம்பலமான கருத்து கணிப்பு முடிவுகளின் உண்மை நிலை !

Zee News கருத்து கணிப்பு முடிவுகளில் 10 தொகுதிகளே உள்ள ஹரியானாவில் பாஜக கூட்டணி 16- 19 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பது 10 தொகுதிகள், பாஜக வெல்வதோ 19 தொகுதிகள்  : அம்பலமான கருத்து கணிப்பு முடிவுகளின் உண்மை நிலை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த நாடாளுமன்ற தேர்தல் நேற்று (ஜூன் 1) நிறைவடைந்து விட்டது. அதனைத் தொடர்ந்து தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின. அந்த கருத்துக்கணிப்புகளில் பெரும்பாலானவை பாஜகவுக்கு ஆதரவாகவே வெளியாகியுள்ளது.

அதன்படி பாஜக கூட்டணி 350 முதல் 371 இடங்களுக்கும் மேல் வெற்றி பெரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் நாடு முழுவதும் பாஜகவே பெரும்பான்மை பெரும் என்றும், பாஜக ஆளாத முக்கிய மாநிலங்களில் கூட பாஜக வெல்லும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், இதில் NewsX, NDTV, India News ஆகிய நிறுவனங்கள் வெளியிட்ட கருத்து கணிப்பில் பாஜக கூட்டணி 371, இந்தியா கூட்டணி 125, பிற 47 என்று ஒரே மாதிரியான முடிவுகள் வெளியானது. இதனால் பாஜகவை கொடுத்ததை இந்த நிறுவனங்கள் அப்படியே வெளியிட்டுள்ளது என விமர்சிக்கப்பட்டது.

இருப்பது 10 தொகுதிகள், பாஜக வெல்வதோ 19 தொகுதிகள்  : அம்பலமான கருத்து கணிப்பு முடிவுகளின் உண்மை நிலை !

இந்த நிலையில், கருத்து கணிப்பின் முடிவுகளில் உள்ள ஏராளமான தவறான தகவல்கள் குறித்த செய்தி வெளியாகி வருகிறது. அதன்படி Zee News கருத்து கணிப்பு முடிவுகளில் 10 தொகுதிகளே உள்ள ஹரியானாவில் பாஜக கூட்டணி 16- 19 இடங்கள் வரை வெற்றிபெறும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே போல 4 தொகுதிகளே உள்ள இமாச்சல பிரதேசத்தில் பாஜக கூட்டணி 6-8 இடங்களில் வெல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இதனை குறிப்பிட்டு ஏன் பாஜக 350 இடங்களை வெல்லும் என்று கூறியுள்ளீர்கள். 500க்கும் அதிகமான தொகுதிகளில் பாஜக வெல்லும் என்று சொல்லியிருக்கலாமே என்று நெட்டிசன்கள் கருத்து கணிப்பு முடிவுகளை விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories