அரசியல்

அதானி குழுமத்தின் மீது உடனடி விசாரணை தேவை : 21 பன்னாட்டு அமைப்புகள்!

2014ஆம் ஆண்டு இந்தோனேசியா நாட்டிடமிருந்து டன் கணக்கில் நிலக்கரி வாங்கி, அதில் கொள்ளை இலாபம் ஈட்டிய அதானி குழுமம்.

அதானி குழுமத்தின் மீது உடனடி விசாரணை தேவை : 21 பன்னாட்டு அமைப்புகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

இங்கிலாந்து நாட்டின் இலண்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கும், Financial Times அம்பலமாக்கிய அதானியின் மோசடியை, எதிர்க்கட்சிகளை கடந்து பன்னாட்டு அமைப்புகளும் எதிர்க்க தொடங்கியுள்ளன.

2014ஆம் ஆண்டு சனவரி மாதம், அதானி குழுமம் இந்தோனேசியா நாட்டிடம் இருந்து, 3,500 கலோரிகள்/ கிலோ தரத்தில் உடைய நிலக்கரியை டன் கணக்கில் வாங்கி, அதனை 6,000 கலோரிகள்/ கிலோ தரமுடையது என ஏமாற்றி, 3 மடங்கு அதிக விலைக்கு, தமிழ்நாடு மின் வாரியத்திற்கு (TANGEDGO)(அ.தி.மு.க ஆட்சியில்) விற்பனை செய்துள்ளது.

அதாவது, 28 டாலர் மதிப்புள்ள ஒரு டன் நிலக்கரியை, 92 டாலர் மதிப்புடையது என கொள்ளை விலைக்கு விற்றுள்ளது அதானி குழுமம்.

இதனால், பணம் களவாடப்பட்டதை விட, மக்களின் உயிர்களுக்கும் கூடுதல் ஆபத்து விளைவிக்கப்பட்டது என்பது தெளிவடைந்தது.

இதனையடுத்து, தேசிய அளவில் அதானிக்கு எதிரான கண்டனங்கள் எழ, Financial Times-இல் இடம்பெற்றுள்ள ஆய்வு கட்டுரை, அதானி குழுமத்தின் மோசடியை தெளிவாக வெளிச்சமிட்டு காட்டுகிறது.

எனவே, மேலும் காலம் தாழ்த்தாமல், அதானி குழுமத்திற்கு எதிரான விசாரணையை உடனடியாக தொடங்க வேண்டும் என Australian Centre for International Justice, Banktrack, Bob Brown Foundation, Culture Unstained, Eko, Extinction Rebellion, Friends of the Earth Australia, London Mining Network, Mackay Conservation Group, Market Forces, Money Rebellion,

அதானி குழுமத்தின் மீது உடனடி விசாரணை தேவை : 21 பன்னாட்டு அமைப்புகள்!

Move Beyond Coal, Seniors for Climate Action Now, Stand.Earth, Stop Adani, Sunrise Movement, Tipping Point, Toxic Bonds, Transparency International Australia, W&J Nagana Yarrbayn Cultural Custodians, and Queensland Conservation Council ஆகிய 21 பன்னாட்டு அமைப்புகள், உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட்டிற்கு கடிதம் எழுதியுள்ளன.

இதில், குறிப்பாக Stop Adani என்கிற அமைப்பு, அதானி குழுமத்தின் நிலக்கரி மோசடியில் நீதி கிடைக்க வேண்டும் என்பதையே முதன்மை நோக்கமாக வைத்து செயல்பட்டு வருகிறது.

உலகின் மிகப்பெரிய முதலீட்டாளர்களான, BlackRock, SBI, JP Morgan, HSBC ஆகிய நிறுவனங்கள், அதானி குழுமத்தின் மீது முதலீடு செய்வதை நிறுத்த வேண்டும் என்பதும், Stop Adani-இன் நோக்கங்களில் ஒன்று.

இவ்வாறு, அரசியல் கட்சிகளை கடந்து, பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும், அதானி குழுமத்தை முற்றுகையிட தொடங்கியுள்ளதால், அதானியும், அதானியின் நட்பு கட்சியான பா.ஜ.க.வும் திக்குமுக்காடி வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories