அரசியல்

“மோடியை குறித்து அறிய இதை படியுங்கள்” - BATMINTON வீராங்கனை சாய்னாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!

“மோடியை குறித்து அறிய இதை படியுங்கள்” - BATMINTON வீராங்கனை சாய்னாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

இந்தியாவில் பிரபல பேட்மிண்டன் வீராங்கனையாக அறியப்படுபவர் சாய்னா நேவால். இவர் விளையாட்டு மூலம் இந்தியாவுக்கு பல்வேறு பதக்கங்களை பெற்று தந்துள்ளார். மேலும் பதம்ஸ்ரீ, அர்ஜுனா உள்ளிட்ட உயரிய விருதுகளையும் பெற்றுள்ளார். இந்த சூழலில் அரசியலிலும் ஆர்வம் கொண்ட இவர், கடந்த 2020-ம் ஆண்டு பாஜகவில் இணைந்தார்.

பாஜகவில் இணைந்த பிறகு இவர் பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளானார். இப்படி தொடர்ந்து மோடி குறித்து விமர்சனங்கள் எழுந்தால், அவர்களுக்கு பதிலளிப்பதாக கூறி எதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி வருகிறார். கடந்த 2022-ம் ஆண்டு கூட பஞ்சாபிற்கு சென்ற பிரதமர் மோடிக்கு விவசாயிகள் அவரது காரை மறித்து தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர்.

“மோடியை குறித்து அறிய இதை படியுங்கள்” - BATMINTON வீராங்கனை சாய்னாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!

இந்த சம்பவம் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு பலரும் பலவித கருத்துகளை தெரிவித்து வந்தனர். மேலும் பாதுகாப்பு குறைபாடு குறித்தும் பாஜகவினர் விமர்சித்து வந்தனர். அந்த வகையில் பேட்மிண்டன் வீராங்கனையும், பாஜக உறுப்பினருமான சாய்னா நேவாலும் இதற்கு கண்டனம் தெரிவித்தார்.

மேலும் அராஜகவாதிகளால் நடத்தப்பட்ட கோழைத்தனமான தாக்குதலை வலுவான வார்த்தைகளில் நான் கண்டிக்கிறேன் என்று உரிமைக்காக போராட்டம் நடத்திய விவசாயிகளை தாக்கி பேசிய சாய்னாவுக்கு கண்டனங்கள் எழுந்தது. தொடர்ந்து பாஜக தொடர்பாகவே கருத்துகளையும் ஆதரவாகவும் பதிவிட்டு வருகிறார்.

“மோடியை குறித்து அறிய இதை படியுங்கள்” - BATMINTON வீராங்கனை சாய்னாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் பதில்!

இந்த சூழலில் தற்போது தேர்தல் நடைபெற்று வரும் நிலையில், மோடி குறித்து சாந்தனு குப்தா என்பவர் எழுதிய புத்தகத்தை சாய்னா நேவால் கடந்த 1-ம் (மே) தேதி வெளியிட்டார். ‘101 Reasons Why I Will Vote for Modi’ என்ற புத்தகத்தை வெளியிட்டது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைதளங்களில் வெளியிட்ட சாய்னா, "தகவலறிந்த தேர்வுகளைத் தழுவி, பிரகாசமான எதிர்காலத்திற்கு பங்களிப்போம்." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

'மோடியின் 100 பொய்கள்' என்று பலரும், மோடியின் பொய்களை விமர்சித்து பதிவிட்டு வரும் நிலையில், மோடிக்கு ஆதரவாக சாய்னா வெளியிட்டுள்ள இந்த புத்தகம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், சானியாவுக்கு அமைச்சர் மனோ தங்கராஜ் புத்தகம் ஒன்றை பரிந்துரை செய்து படிக்குமாறு அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அமைச்சர் மனோ தங்கராஜ் வெளியிட்டுள்ள பதிவில், "அன்புள்ள சாய்னா... இந்திய மக்களை தவறாக வழிநடத்தும் முன், "Mr. Modi, The Nation has 108 questions for you" என்ற புத்தகத்தைப் படியுங்கள். பிறகு நீங்கள் உண்மையாகவே பக்கச்சார்பற்று நமது நாட்டை நேசிப்பதாக நம்பினால், இதுகுறித்து உங்கள் அரசியல் முதலாளியிடம் பதிலை பெற்றுக்கொள்ளுங்கள்.

இந்த புத்தகம் அமேசான் இணையத்தில் கிடைக்கும்" என்று குறிப்பிட்டுள்ளார். "Mr. Modi, The Nation has 108 questions for you" என்ற புத்தகத்தை அமைச்சர் மனோ தங்கராஜ் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories