அரசியல்

எப்படி இப்படி நடிக்க முடிகிறது மோடியால்? - சிலந்தி சிறப்பு கட்டுரை!

‘தங்­க­ளது பதவி பறி­போய்­வி­டுமோ’ என்ற பதட்­டத்­தில் இன்று ‘ரோட் ஷோ’ நாட­கம் நடத்­தும் மோடி­க­ளை­யும், நட்­டாக்­க­ளை­யும் பார்த்து தமிழ்­நாட்டு மக்­கள் வெறுப்புடன் கவனித்து வருகின்றனர்.

எப்படி இப்படி நடிக்க முடிகிறது மோடியால்? - சிலந்தி சிறப்பு கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

“எந்த முகத்­து­டன் மோடி தமிழ் நாட்­டுக்கு வரு­கி­றார்?”

கழ­கத் தலை­வர், தமிழ்­நாட்டு முத­ல­மைச்­சர் முத்­து­வேல் கரு­ணா­நிதி ஸ்டாலின், கடல் காணா மதுரை; மக்­கள் கட­லில் மிதந்­ததோ எனும் அளவு, கண்­ணுக்­குத் தெரி­யும் விண் முட்­டும் தொடு­வா­னத்­தை­யும் கடந்து கண் கொள்­ளாக் காட்­சி­யாக மக்­கள் வெள்­ளக் காடா­கக் காட்­சி­ய­ளித்த தேர்­தல் பிரச்­சா­ரக் கூட்­டத்­தில் எழுப்­பிய இந்­தக் கேள்வி, முத­ல­மைச்­சர் மட்­டும் எழுப்­பிய கேள்வி அல்ல;

வெள்­ளம், மழை, புயல்­க­ளால் பாதிக்­கப்­பட்டு, தங்­க­ளது வாழ்க்­கை­யைத் தொலைத்து, ‘எதிர்­கா­லம் கேள்­விக்­கு­றி­யா­கி­விட்­டதோ’ என்று தவித்த தமிழ்­நாட்டு மக்­கள் அனை­வ­ரது உள்­ளத்­தி­லும் கொந்­த­ளித்­தி­டும் கேள்வி! அவர்­க­ளது குமு­றல்­க­ளின் எதி­ரொலி!

‘தங்­க­ளது பதவி பறி­போய்­வி­டுமோ’ என்ற பதட்­டத்­தில் இன்று ‘ரோட் ஷோ’ நாட­கம் நடத்­தும் மோடி­க­ளை­யும், ராஜ்­நாத்­சிங்குகளை­யும், நட்­டாக்­க­ளை­யும் பார்த்து தமிழ்­நாட்டு மக்­கள் வெறுப்பைக் கக்கிட நினைத்­தா­லும், கண்­ணி­யம்
காத்­திட நினைத்து அவ்­வாறு செய்­யாது, எழுப்­பி­டும் கேள்­வி­யின் பிர­தி­ப­லிப்­பு­தான் அது!

“எந்த முகத்­து­டன் மோடி வரு­கி­றார்?”

எதிர்­பாரா இயற்­கைப் பேரி­டர்­க­ளால் உள்­ளதை எல்­லாம் இழந்­து­விட்­டோம், எஞ்­சிய வாழ்வை எப்­படி நடத்­து­வோம்; என அல்­ல­லுற்று அழுத மக்­க­ளுக்கு ஆறு­தல் கூறக்­கூட வரா­த­வர்­கள் இப்­போது எந்த முகத்­தோடு வரு­கி­றார்­கள்?

எப்படி இப்படி நடிக்க முடிகிறது மோடியால்? - சிலந்தி சிறப்பு கட்டுரை!

லஞ்­சத்தை ஒழிப்­பேன் எனச் சூளு­ரைத்து இன்று லஞ்ச மஞ்­சத்­தில் துகி­லும் முகத்­தோடா?

‘வாரிசு அர­சி­யலை அழிப்­பதே லட்­சி­யம்’ என்று அறி­வித்து, இன்று வாக்­குக்­காக வாரி­சு­க­ளோடு கொஞ்­சிக் குல­வி­டும்
வஞ்­சக முகத்­தோடா?

“எய்ம்ஸ் வரு­கி­றது... இந்த ஆண்டு வரு­கி­றது... அடுத்த ஆண்டு வந்து விடும்.. 90 சத­வி­கி­தம் வேலை முடிந்­து­விட்­டது” என்று ஆண்­டுக்­க­ணக்­கில் பொய் கூறி மக்­களை ஏமாற்­றும் எத்­து மு­கத்­தோடா?

தமிழ்­நாடு செலுத்­தும் வரியை எல்­லாம் வாங்­கிக் குவித்து, அதனை பா.ஜ.க. ஆளும் மாநி­லங்­க­ளுக்கு வாரி வழங்­கி­விட்டு, தமிழ்­நாட்­டுக்கு ‘பே.. பே...’ கூறி­டும் வஞ்­சனை முகத்­தோடா?

அம­லாக்­கத்­துறை, வரு­மா­ன­வ­ரித் துறை, சி.பி.ஐ. போன்ற துறை­களை அர­சி­யல் ஆதா­யத்­துக்­குப் பயன்­ப­டுத்தி – எதிர்ப்­ப­வர்­களை சிறை­யில் முடக்கி, சந்­தோ­ஷம் கொண்­டா­டும் ‘சேடிஸ்ட்’ முகத்­தோடா?

உயர்­சாதி இந்­துக்­களை மட்­டுமே இந்­துக்களா­கக் கருதி வளர்த்­தி­ட­வும் மற்ற இந்­துக்­களை மட்­டம்­தட்டி அழுத்­தி­ட­வும் சிறு­பான்மை மக்­களை, தாழ்த்­தப்­பட்ட, பிற்­ப­டுத்­தப்­பட்ட இந்து சமு­தாய மக்­களை பொட்­டுப் பூச்­சி­க­ளாய், புன்­மைத் தேரை­ க­ளாய், அடி­மைப் புழுக்­க­ளாய் ஆக்­கி­டத் துடிக்­கும் ஆதிக்க சக்­தி­க­ளுக்கு வலு சேர்க்­கும் விபீ­ஷண முகத்­தோடா?

ராஜாஜி ஆண்­ட­போது கொண்­டு­வந்த குலக் கல்வி முறை அதா­வது தந்தை மற்­றும் முன்­னோர் செய்த தொழிலை இளை­ஞர்­கள் செய்­திட வழி­வ­குக்­கும் கல்­வி­ மு­றைத் திட்­டத்தை மீண்­டும் ‘விஸ்­வ­கர்மா யோஜனா’ திட்­டம் என்று புதிய வழி­யில் கொணர்ந்து, செருப்­புத் தைக்­கும் தொழி­லாளி மகன் செருப்­புத் தைக்­க­வும், தச்சு வேலை செய்­ப­வர் மகன் தச்சு வேலை செய்­ய­வும், முடி­வெட்­டு­ப­வர்­க­ளின் வாரி­சு­கள் முடி­தி­ருத்­தம் செய்­ப­வர்­க­ளா­கவே வாழ வேண்­டும் என்­பது போன்ற நிலையை உரு­வாக்கி, ஒடுக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு சமூக நீதியை மறுத்து வரு­ணா­சி­ர­மத்­திற்கு வாழ்வு தர உந்­து­சக்­தித் திட்­டங்­களை உரு­வாக்­கி­விட்டு, சமூக நீதிக்கு வித்­திட்டு வளர்த்­துள்ள திரா­விட மண்­ணுக்கு எந்த முகத்­தோடு வரு­கி­றார்?

‘தன்னை எந்­தச் சக்­தி­யா­லும் ஆட்­டவோ, அசைக்­கவோ முடி­யாது’ என்ற இறு­மாப்பு முகத்­தோடா?

அர­சி­யல் அமைப்­புச் சட்­டத்தை அலங்­கோ­லப்­ப­டுத்­திட, ஆளு­நர்­களை அனுப்பி, அவர்­கள் மக்­கள் ஆட்­சித் தத்­து­வத்­தைச் சிதைத்து மண்­மே­டாக்­கிக் கொண்­டி­ருப்­ப­தைக் கண்­டும் காணா­த­து­போல நடித்­துக் கொண்டிருக்­கும் மோடி; இன்று மக்­க­ளைக் காண எந்த முகத்­தோடு வரு­கி­றார்? கப­ட­வேட முகத்­தோடா?

ஜன­நா­ய­கத்­தின் அடித்­த­ளங்­கள் அத்­தனையையும் அடித்து நொறுக்­கி­விட்டு அதி­கார மம­தை­யில் ஆர்ப்­ப­ரித்­தி­டும் பாசிச முகத்­தோடா?

தமிழ்­மீ­தும் – தமிழ் மண்­ணின்­ மீ­தும் அதீத பற்­றுக் கொண்­ட­வர் போல வெளி­வே­ஷம் போட்டு, வாயில் நுழை­யாத சமஸ்­கி­ருத, இந்­திப் பெயர்­களை மட்­டுமே ஒன்­றிய அர­சின் திட்­டங்­க­ளுக்­குச் சூட்டி – முத்­து­ந­கர், பொதிகை, பல்­ல­வன், பாண்­டி­யன், சேரன், சோழன், கம்­பன், என்­றெல்­லாம் புகை­வண்­டி­கள் ஓடிக் கொண்டிருந்த தமிழ் மண்­ணில் இன்று – தேஜஸ்,
ஜன் சதாப்தி, வந்­தே­பா­ரத் என்று வட­மொ­ழி­யில் பெயர் சூட்டி புகை வண்­டி­களை தமி­ழ­கத்­தில் ஓட­விட்டு தமி­ழைச் சிதைத்­தி­டும் பசப்பு முகத்­தோடா?

இப்­படி – மோடியை நோக்கி தமிழ் மக்­கள் எழுப்­பி­டும் கேள்­வி­கள் இன்­னும் ஏரா­ளம் உள்­ளன.
அரு­ண­கி­ரி­நா­தர் இன்­றி­ருந்­தால் மோடி­யின் முகங்­க­ளுக்கு ஒரு புதிய திருப்­பு­கழே பாடி­யி­ருப்­பார்.

“பொய்யை மெய்­போல
பேசும் முகம் ஒன்று
வஞ்­ச­கம் செய்து விட்டு
வாஞ்சை மொழி பேசும் முகம் ஒன்று
ஊழ­லிலே உறைந்­து­கொண்டு
ஊழலை ஒழிப்­ப­தாக
நாட­க­மா­டும் முகம் ஒன்று
(மணிப்­பூ­ரில்) பஞ்­சமா பாத­கங்­கள்
நடக்­கும்­போ­தும்,
பத­றாத முகம் ஒன்று
ராஜ­தர்­மத்தை காற்­றில் பறக்­க­விட்­டும்
அச­ராத அதர்ம முகம் ஒன்று
உள்­ளொன்று வைத்­துப் புறம் ஒன்று
பேசும்கள்ள முகம் ஒன்று
கூட்­டாட்­சித் தத்­து­வத்­துக்கு வேட்­டு­ வைத்து
காட்­டாட்சி நடத்­தும் முகம் ஒன்று
மாறு­படு மக்­கள் தலை­வர்­களை
வதைத்து மகி­ழும் முகம் ஒன்று”

– என்று மோடி­யின் முகங்­களை இன்­னும் அழ­காக
வரி­சைப்­ப­டுத்­திப் பாடி­யி­ருப்பார்!

எப்படி இப்படி நடிக்க முடிகிறது மோடியால்? - சிலந்தி சிறப்பு கட்டுரை!

மக்­க­ளுக்­குப் பொய் வாக்­கு­று­தி­க­ளை­யும், உத்­த­ர­வா­தங்­க­ளை­யும் வாரி வழங்கி, அவர்களை ஏமாற்றி ஓட்டு வாங்­கி­விட்டு ஆட்­சி பீ­டம் ஏறி­ய­ பி­றகு அவர் இந்­தி­யா­வில் இருந்த காலம் சொற்­பமே!

வாக்­கு­று­தி­கள் பல­வற்றை வாரி வழங்கி விட்டு, பதவி ஏற்­ற­பின் வானூர்தி ஏறி அயல்­நா­டு­க­ளுக்­குப் பறந்து கொண்­டி­ருந்­தாரே தவிர, கொடுத்த வாக்­கு­று­தி­கள் பற்றி சிறி­தும் கவ­லைப்­பட்­ட­வ­ரில்லை மோடி.

பல­முறை வெளி­நாட்­டுப் பய­ணம் மேற்­கொண்­டாரே; ஒரு­வேளை வாக்­கு­றுதி கொடுத்­த­வாறு அயல்­நாட்டு வங்­கி ­க­ளில் பதுக்கி வைக்­கப்­பட்­டுள்ள கருப்­புப் பணத்தை மீட்­டி­டும் நட­வ­டிக்­கை­க­ளாக இருக்­குமோ என்று கருதி விடா­தீர்­கள்!

‘ஓய்­வெ­டுக்­கா­மல் உழைக்­கி­றார் பிர­த­மர் மோடி’ என்று இங்கே பிரச்­சா­ரம் செய்­கி­றார்­களே; அவர் ஓய்­வெ­டுக்­கா­மல் பிர­த­ம­ராக இருந்த 55 மாதங்­க­ளில் 92 நாடு­க­ளுக்கு சுற்­றுப் பய­ணம் செய்­த­தன் விளை­வாக, அதா­வது 2014ஆம் ஆண்டு அவர் பிர­த­ம­ராக ஆன­தி­லி­ருந்து 55 மாதங்­க­ளில் 92 நாடு­க­ளில் சுற்­றுப் பய­ணம் செய்­த­தின் மொத்­தச் செலவு 2,021 கோடி ரூபாய் என்று ஒரு அதி­கா­ரப்­பூர்­வத் தக­வல் கூறு­கி­றது.

இப்­படி ‘கொரோனா’ தொற்­றிய காலத்தை மட்­டும் தவிர்த்து மற்ற ஆண்­டு­க­ளில் எல்­லாம் வித­வி­த­மான உடை ­த­ரித்து உல­கச் சுற்­றுலா நடத்­தி­ய­வ­ரைத்­தான் – இந்த நாட்­டுக்­காக ஓய்­வின்றி உழைத்­த­வர் என்­கின்­ற­னர்.

வெளி­நா­டு­க­ளு­டன் இந்­தி­யா­வின் உறவை பலப்­ப­டுத்த மோடி­யின் வெளி­நாட்­டுப் பய­ணம் பயன்­பட்­டுள்­ளது என்று பி.ஜே.பி. வரு­ணித் தாலும், மோடி அதிக அளவு வெளி­நா­டு­க­ளில் தான் இருந்து கொண்­டி­ருக்­கி­றார் என்­றும், வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளுக்கு இடை­யி­டையே இந்­தியா வந்து போகி­றார் என்­றும், ‘வெளி­நாட்டு வாழ் இந்­தி­யப் பிர­த­மர்’ என்­றும், கேலி­யும் கிண்­ட­லு­மாக ‘ட்வீட்’ செய்­யும் அளவு மோடி பறந்து கொண்டே இருந்­தார் என்­ப­தை­யும் மறுக்க இய­லாது.

அப்­ப­டிப் பறந்து கொண்­டி­ருந்­தவ­ரால், மணிப்­பூ­ரில் நடந்து கொண்­டி­ருக்­கும் கல­வ­ரங்­க­ளால் பெண்­கள் மான­பங்­கப்­ப­டுத்­தப்பட்­டும், மக்­கள் துப்­பாக்­கிக் குண்­டு­க­ளுக்கு இரை­யா­கி­யும் மர­ண­ ஓ­லம் எழுப்­பிய காலங்­க­ளில், அங்கு சென்று ஆறு­தல் கூற நேரம் இல்­லா­மல் போயிற்றா?

பஞ்­சாப் மாநில விவ­சா­யி­கள் வெயி­லி­லும், மழை­யி­லும், குளி­ரி­லும் வாடி ஏறத்­தாழ ஓராண்டு காலம் போரா­டிக் கொண்­டி­ருந்­தார்­களே, அவர்­க­ளைச் சந்­திக்க நேரம் இல்­லையா? என்­பன போன்ற நியா­ய­மான கேள்­வி­கள் எழுந்­த­னவே, மோடி அந்­தக் கேள்­வி­கள் எதற்­கும் வாயையே திறக்­க­வில்­லையே, ஏன்?

“மோடி வெளி­நாட்­டுப் பய­ணங்­க­ளில் காட்­டும் ஆர்­வத்­தி­லும், செல­வ­ழிக்­கும் நேரத்­தி­லும் கொஞ்­சம் உள்­நாட்­டுப் பய­ணம் செய்­வ­தற்­கும் பயன்­ப­டுத்­தி­யி­ருந்­தால், நம் நாட்டு மக்­கள் வேத­னை­யில் வாடும் நிலை­யைத் தெரிந்து கொண்­டி­ருக்க
முடி­யும்” என்று இன்று மோடி­யின் நண்­ப­ராக ஆகி­யி­ருக்­கும் நிதிஷ்­கு­மார் அன்று விமர்­சித்­தாரே,

இப்­ப­டிப்­பட்ட விமர்­ச­னங்­க­ளுக்கு இடையே, வெளி­நா­டு­க­ளுக்­குப் பறந்து செல்­வ­தைக் குறிப்­பிட்டு, தான் ஓய்­வில்­லா­மல் உழைத்து வரு­வ­தா­கக் கூறு­கி­றார் மோடி!

நாம், ‘ஓய்­வின்றி மோடி உழைக்கி­றார்’ என்­பதை ஒப்­புக்­கொள்­கி­றோம். ஓய்­வின்றி இத்­தனை நாடு­க­ளுக்கு செல்­லத் தெரிந்தவருக்கு; குஜ­ராத்­தில் வெள்­ளம் என்­றால் ஓடோ­டிச் சென்று ஹெலி­காப்­டர் எடுத்­துப் பறந்து அந்­தப் பகு­தி­களை சுற்­றிப் பார்த்து உட­ன­டி­யாக ஆயி­ரம் கோடியை அள்­ளிக்
கொ­டுத்த ஈகை குணம் கொண்­ட­வ­ருக்கு,

தமிழ்­நாட்­டில் வெள்­ளம் சூழ்ந்து, வர­லா­று­காணா புயல் மழை­யால் மக்­கள் வாழ்வா­தா­ர­மி­ழந்து எதிர் காலத்­தைக் கேள்­விக்­கு­றி­யாக்­கித் தவித்­த­போது ஒரு ஆறு­தல் கூறக்­கூட வரத் தெரி­ய­வில்­லையா?

ஆறு­தல் கூற அவர் வந்­திட குஜ­ராத் போல் தமிழ்­நாடு அவ­ரது சொந்த மாநி­ல­மாக இல்­லா­மல் இருக்­க­லாம்; வர­வேண்­டாம். உட­னடி நிவா­ர­ண­மாக சில கோடி­க­ளைக் கூடத் தராத கல் மன­துக்­கா­ரர் இன்று, ஓட்­டுக்­காக தமிழ் மக்­க­ளைத் தேடி ஓடோடி வரு­கி­றாரே; எப்­படி இப்­படி வெட்­கம் சிறி­து­மின்றி கூச்ச நாச்­ச­மற்று நடிக்க முடி­கி­றது மோடி­யால்?
நினைக்­கவே தகிக்­கி­றதா?
அது­தான் மோடி!
அதுவே அவ­ரது நடிப்­பாற்­றல்!

- சிலந்தி!

Related Stories

Related Stories