அரசியல்

"பாஜக சொல்வதை செய்வதே அமலாக்கத்துறையின் நோக்கம்! " - அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சனம் !

பாஜகவின் விருப்பத்திற்கேற்ப ஆம் ஆத்மி கட்சியை சீர்குலையச் செய்வதே அமலாக்கத்துறையின் ஒரே நோக்கம் என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

"பாஜக சொல்வதை செய்வதே அமலாக்கத்துறையின் நோக்கம்! " - அரவிந்த் கெஜ்ரிவால்  விமர்சனம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

டெல்லி மதுபான கொள்கை விவகாரத்தில் விசாரணைக்கு ஆஜராகும்படி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத் துறை பல முறை சம்மன் அனுப்பியது. இருப்பினும், அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை.

இதனிடையே நேற்று இரவு அமலாக்கத் துறை அதிகாரிகள் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் இல்லத்தை முற்றுகையிட்டு அவரை கைது செய்தனர். தேர்தல் நடைபெற சில நாட்களே இருக்கும் நிலையில், மாநில முதலமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அரவிந்த் கெஜ்ரிவால் கைதுக்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த கைது குறித்து அமெரிக்கா மற்றும் ஜெர்மன் அரசு சார்பில் கவலை தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பாஜகவின் விருப்பத்திற்கேற்ப ஆம் ஆத்மி கட்சியை சீர்குலையச் செய்வதே அமலாக்கத்துறையின் ஒரே நோக்கம் என அரவிந்த் கெஜ்ரிவால் விமர்சித்துள்ளார்.

"பாஜக சொல்வதை செய்வதே அமலாக்கத்துறையின் நோக்கம்! " - அரவிந்த் கெஜ்ரிவால்  விமர்சனம் !

இது குறித்துப் பேசிய அவர், "டெல்லியில் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த பாஜக முயற்சித்து வருகிறது. இது மிகப்பெரிய சதிச்செயல். பாஜகவின் விருப்பத்திற்கேற்ப ஆம் ஆத்மி கட்சியை சீர்குலையச் செய்வதே அமலாக்கத்துறையின் ஒரே நோக்கம். அதற்காகவே என்னை கைது செய்துள்ளனர்.

அரசியல் காழ்ப்புணர்ச்சியால் என்னை கைது செய்திருக்கின்றனர். இந்த வழக்கில் தொடர்புடைய சரத் ரெட்டி என்பவர் பாஜகவுக்கு ரூ.55 கோடி நிதி அளித்துள்ளார். கைது செய்யப்பட்ட பின்னர் அவர் ஏன் பாஜகவுக்கு நன்கொடை வழங்கவேண்டும்? இதற்கு பாஜக பதில் அளிக்குமா ? "என்று கூறியுள்ளார்.

banner

Related Stories

Related Stories