அரசியல்

குஜராத் : தொழுகையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் - பல்கலை. விடுதிக்கும் புகுந்து தாக்கிய கும்பல் !

குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் : தொழுகையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் - பல்கலை. விடுதிக்கும் புகுந்து தாக்கிய கும்பல் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

மோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்தே தினந்தோறும் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் தொடுக்கப்பட்டு வருகிறது. CAA போன்ற கொடூர சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை மக்களை இந்தியாவில் இருந்து தனிமைப்படுத்துவதற்கான முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.

இது ஒருபுறம் என்றால் மற்றொருபுறம் மத உணர்வுகளைத் தூண்டி இந்துத்வ கும்பல் வன்முறைகளைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. இந்த நிலையில், குஜராத்தில் தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலம் அஹமதாபாத்தில் குஜராத் பல்கலைக்கழகம் அமைந்துள்ளது. ரமலான் மாதத்தை முன்னிட்டு இந்த பல்கலைக்கழக விடுதியில் தங்கியிருந்த இஸ்லாமிய மாணவர்கள் ஒன்று கூடி தொழுகையில் ஈடுபட்டுள்ளனர். இதனை அங்கிருந்த ஒருவர் கண்டு இந்துத்துப அமைப்பிடம் கூறியுள்ளார்.

குஜராத் : தொழுகையில் ஈடுபட்டிருந்த வெளிநாட்டு மாணவர்கள் - பல்கலை. விடுதிக்கும் புகுந்து தாக்கிய கும்பல் !

அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழகத்துக்குள் நுழைந்த கும்பல் ஒன்று தொழுகையில் ஈடுபட்டிருந்த இஸ்லாமிய மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் அந்த பல்கலைக்கழகத்தில் படித்துவந்த வெளிநாட்டு மாணவர்கள் 5 பேர் உள்ளிட்ட காயமடைந்துள்ளனர்.

மேலும் அந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் அங்கிருந்த லேப்டாப், போன் மற்றும் இருசக்கர வாகனங்களை அடித்து உடைத்து சேதப்படுத்தினர். இந்த தாக்குதல் குறித்து காவல்துறைக்கு உடனடியாக தகவல் அளிக்கப்பட்டபோதும் 30 நிமிடங்கள் கழிந்தே போலிசார் சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். இது விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories