அரசியல்

“இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை தீபம் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை விளக்காக திராவிட தீபம், மு.க.ஸ்டாலின் என்று ஒளி கொடுத்தாரோ, அன்று முதல் இந்தியாவுக்கான எதிர்பார்ப்பாகவும் ஆகிவிட்டார்.

“இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை தீபம் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ப.திருமாவேலன்
Updated on

70க்கும் 71க்கும் இடையில்!

திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் - 'திராவிட மாடல்' ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை இந்தியாவே வரவேற்கிறது! இந்தியாவே வாழ்த்துகிறது!

நமக்கு தலைவருமானவராக - முதல்வருமான மு.க.ஸ்டாலின் இப்போது இந்தியாவுக்குமானவராக உயர்ந்து நிற்பதுதான் அதற்குக் காரணம்!

இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை விளக்காக திராவிட தீபம், மு.க.ஸ்டாலின் என்று ஒளி கொடுத்தாரோ, அன்று முதல் இந்தியாவுக்கான எதிர்பார்ப்பாகவும் ஆகிவிட்டார்.

இன்றைய இந்தியா என்பது இன்றைய பிரதமர் நரேந்திரமோடிக்கு ஆதரவு இந்தியா, நரேந்திர மோடியை எதிர்க்கும் இந்தியா என இரண்டாகப் பிளவுபட்டு நின்றது. நரேந்திர மோடியை ஆதரிப்பவர்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை. அவர்களது ஒற்றை இலக்கு, அந்த ஒற்றை மனிதருக்கு சாமரம் வீசுவது ஆகும். அவர்களுக்குச் செயலும் ஒன்றே, சிந்தனையும் ஒன்றே.

ஆனால், நரேந்திர மோடியை எதிர்ப்பவர்கள் பல்வேறு வகைப்பட்டவர்கள். அதில் அகில இந்தியக் கட்சிகளும் உண்டு. மாநிலக் கட்சிகளும் உண்டு. மதச்சார்பு கட்சிகளும் உண்டு. மதச் சார்பின்மைக் கட்சிகளும் உண்டு. மாநிலங்களை ஆளும் கட்சிகளும் உண்டு. மாநிலங்களில் ஆட்சியில் இருந்த கட்சிகளும் உண்டு. நரேந்திர மோடியை எதிர்ப்பவர்களைக் கூட எதிர்ப்பவர்களும் இந்தக் கட்சிகளில் உண்டு. எனவே தான் மோடி எதிர்ப்பை ஒருமுகப்படுத்த முடியவில்லை.

“இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை தீபம் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

மோடியை எதிர்ப்பவர்கள் அதிகம் தான். அவர்கள் வைத்திருக்கும் வாக்குகளும் அதிகம் தான். ஆனால் அவர்கள் ஒன்றாக இல்லை. தனித்தனியாக பிரிந்து இருந்தார்கள். அதுவே இவர்களின் பலவீனம் ஆகும். இதுவே மோடியின் பலமாகவும் இருந்தது. தனது எதிரிகள் பிளவுண்டு கிடப்பதைப் பார்த்து தான், மகிழ்ச்சியில் திளைத்தது பாஜக. இந்தப் பிளவை இன்னும் அதிகப்படுத்தும் காரியத்தையும் பாஜக பார்த்தது.

இத்தகைய நிலையில் மோடிக்கு எதிரானவர்களை ஒன்று சேர்க்க ஒருவர் தேவைப்பட்டார். நியாயப்படி பார்த்தால், அவர் ஒரு அகில இந்தியக் கட்சியின் தலைவராகத் தான் இருந்திருக்க வேண்டும். மாறாக, அதனை ஒரு மாநிலக் கட்சியின் தலைவர் செய்து காட்டினார். அவர் தான் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

பாஜக ஒரு அணி. அதனை எதிர்க்கும் இன்னொரு அணி என்பதாக இல்லாமல் மூன்றாவது அணி ஒன்று அமைந்தால் நல்லது என்று பாஜக நினைத்தது. காங்கிரஸ் கட்சி ஒரு அணியாகவும், காங்கிரசும் பாஜகவும் இல்லாத மூன்றாவது அணி ஒன்றும் இருப்பது தனக்கு நல்லது என்று பாஜக நினைத்தது.

அதற்கு முற்றுப்புள்ளி வைத்து பாஜகவுக்கு எதிரான அணியை காங்கிரஸையும் உள்ளடக்கி, மற்ற கட்சிகளையும் அதற்குள் இணைத்து உருவாக்க அடித்தளம் போட்டார் மு.க.ஸ்டாலின்.

2023 ஆம் ஆண்டு மார்ச் 1 - பிறந்த நாளுக்கும் 2024 மார்ச் 1 பிறந்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் நடைபெற்ற மிகப்பெரிய மாற்றம் என்பது இதுதான். 70 ஆவது பிறந்தநாளுக்கும் 71 ஆவது பிறந்த நாளுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியாவில் ஏற்பட்டுள்ளது மிகப்பெரிய மாற்றம்.

“இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை தீபம் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

2023 ஆம் ஆண்டு மார்ச் 1 - பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் - மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்க்கே இருந்தார்.காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சர், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா இருந்தார். உத்தரப்பிரதேச முன்னாள் முதலமைச்சர் , சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இருந்தார்.பீகார் மாநிலத்தின் துணை முதலமைச்சர்- ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ் இருந்தார். இவர்களை வைத்துக் கொண்டு தான் வழிகாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

''2024 நாடாளுமன்றத் தேர்தல் என்பது யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதற்கான தேர்தல் அல்ல, யார் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதைத் தீர்மானிக்கும் தேர்தல் ஆகும். ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி - ஒற்றைத் தன்மை எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கும் பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும் - அது ஒன்று தான் நம்முடைய ஒற்றை இலக்காக இருக்க வேண்டும்.

ஒற்றைத் தன்மை கொண்டதாக நாட்டை மாற்றநினைக்கும் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை இலக்கு கொண்டதாக பாஜகவை எதிர்க்கும் அனைத்துக் கட்சிகளும் திட்டமிட்டு ஒன்று சேர வேண்டும்.பாஜகவை 2024 தேர்தலில் வீழ்த்த நினைக்கும் அனைவரும் ஒன்றாகச் சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணர்வு வந்துவிட்டாலே வெற்றி பெற்றுவிட்டோம் என்று சொல்லி விடலாம்.

மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீர்மானித்தால் இழப்பு நமக்குத் தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரசு உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சேர்த்தே நான் சொல்கிறேன்.

“இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை தீபம் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

தமிழ்நாட்டில் கடந்த நான்காண்டு காலமாக நடந்த அனைத்துத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம் என்றால் அதற்கு இந்த ஒற்றுமை ஒன்று தான் அந்த வெற்றிக்கு அடிப்படையாகும்.அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து - விட்டுக் கொடுத்து - பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். அதே நேரத்தில் சிலரால் காங்கிரசு அல்லாத கட்சிகளின் கூட்டணி என்று சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும்.

அது கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் - என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது.இதனை பாஜகவை எதிர்க்கும் கட்சிகள் அனைத்தும் உணர்ந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்." என்று ஓராண்டுக்கு முன்பு மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசினார்கள். இதைத் தான் ஓராண்டு கழித்து 'இந்தியா' கூட்டணியாக நாம் பார்க்கிறோம்.

காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்குவதற்கான முயற்சிகளில் அரவிந்த் கெஜ்ரிவாலும், மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் ஈடுபட்ட காலத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இப்படி பேசினார்கள். காங்கிரஸ் அல்லாத அணியை உருவாக்க முயற்சிக்கலாம் என்ற நோக்கத்தோடு தன்னைத் தொடர்பு கொண்ட அனைவருக்கும் அறிவுரை சொல்லி அனுப்பி வைத்தார் முதலமைச்சர் அவர்கள்.

இவை தான் 2023 ஆம் ஆண்டு சூன் மாதம் 23 ஆம் தேதி பாட்னா ஆலோசனைக் கூட்டமாக அமைந்தது. அந்தக் கூட்டத்திலும் தொடக்கத்திலேயே முதலமைச்சர் அவர்கள் உரையாற்றினார்கள். அப்போது ஒரு ஸ்கெச் போட்டுக் கொடுத்தார்கள்.

* எந்த மாநிலத்தில் எந்தக் கட்சி செல்வாக்குடன் இருக்கிறதோ அந்தக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துக் கொள்ளலாம்.

* கூட்டணியாக அமைக்க முடியவில்லை என்றால் தொகுதிப் பங்கீடுகளை மட்டும் செய்து கொள்ளலாம்.

* அதுவும் முடியவில்லை என்றால் பொதுவேட்பாளர் அறிவித்துக் கொள்ளலாம்.

* தேர்தலுக்கு பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்பது சரியான நிலைப்பாடாக இருக்க முடியாது.

* அரசியல் கட்சிகளுக்கு இடையே குறைந்த பட்ச செயல் திட்டம் வகுக்கப்பட வேண்டும். - இவை தான் முதலமைச்சர் போட்டுக் கொடுத்த ஸ்கெச் ஆகும்.

“இந்தியாவுக்கான திசைத் தீர்மானிக்கும் கலங்கரை தீபம் மு.க.ஸ்டாலின்” : ப.திருமாவேலன் சிறப்புக் கட்டுரை!

2024 மார்ச் 1 - வரப் போகிறது. முதலமைச்சரின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறிக் கொண்டு வரும் காட்சிகளை நாம் பார்க்கிறோம். பாசிச பாஜகவை வீழ்த்த வேண்டும் என்று நினைப்பவர்களின் ஒற்றுமையும் அணிச்சேர்க்கையுமே பாஜகவை வீழ்த்தும். பாஜக வீழ்த்த முடியாத கட்சி அல்ல என்பதை துணிச்சலாக அறைகூவல் விடுத்துச் சொன்னதன் மூலமாக 'இந்தியாவுக்குமானவராக' எழுந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அவர் 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28 அன்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக முதன்முதலாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட போதே, 'காவிவண்ணம் அடிக்கும் மோடியை வீழ்த்த வா' என்று அறைகூவல் விடுத்தார். 2019 நாடாளுமன்றத் தேர்தலில் அதனை தமிழ்நாடு எதிரொலித்தது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவே எதிரொலிக்கக் காத்திருக்கிறது. இந்தியாவுக்குமானவரை இந்தியாவே வரவேற்கிறது. வாழ்த்துகிறது.

- ப.திருமாவேலன்.

banner

Related Stories

Related Stories