அரசியல்

இந்தியாவில் சூறையாடப்படும் கருத்து சுதந்திரம் : பதற்றம் நிகழும் அனைத்து பகுதிகளிலும் இணைய முடக்கம் !

எங்கெல்லாம் மக்கள் தங்களின் உரிமைகளுக்காக போராடுகிறார்களோ அங்கெல்லாம் தனது ஒடுக்குமுறையை பா.ஜ.க அரசு தொடர்ந்து கட்டவிழ்த்து வருகிறது.

இந்தியாவில் சூறையாடப்படும் கருத்து சுதந்திரம் : பதற்றம் நிகழும் அனைத்து பகுதிகளிலும் இணைய முடக்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

மணிப்பூர், ஜம்மு - காஷ்மீர் பகுதிகளின் அனைத்து தரப்பு மக்களுமே ஒர் குரலில் ஒலித்து வீதிக்கு வந்த ஒன்றிய பா.ஜ.க அரசிற்கு எதிராக போராட தொடங்கினர், உடனே அந்த பகுதியில் இருக்கும் மக்களின் தகவல் தொடர்பை துண்டிப்பதற்காக இணைய சேவையினை முடக்கியது. இணையத்தின் மூலம் போராடும் மக்கள் சமூக வலைத்தளங்களில் அரசிற்கு எதிராக எழுப்பும் நியாய குரல்கள் தடுக்கப்பட வேண்டும் என்ற ரீதியில் இந்த வேலையினை தொடர்ந்து செய்து வருகிறது.

அந்த வகையில் விவசாயிகளின் போராட்டத்தை முடக்குவதற்காக பஞ்சாப்பிலும் இணைய சேவையினை முடக்கி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

இந்தியாவில் வேளாண்மைக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என காட்டிக்கொள்ளும் ஒன்றிய பா.ஜ.க அரசு, விவசாயிகளின் வழித்தடத்தில் ஆணி வைத்து தடுக்கிறது. விதை விதைக்கும் விவசாயிகளுக்காக ஆணி விதைத்த ஒரே பிரதமர் மோடி என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சிக்கின்றனர்.ஆனாலும் விவசாயிகளின் உறுதிமிக்க போராட்டம் பஞ்சாப், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட பல மாநிலங்களிலிருந்து ‘டெல்லி சலோ’ என்ற முழக்கத்தோடு, விவசாயிகள் அலை அலையாய் டெல்லி நோக்கி பேரணி மேற்கொண்டு வருகின்றனர்.

இந்தியாவில் சூறையாடப்படும் கருத்து சுதந்திரம் : பதற்றம் நிகழும் அனைத்து பகுதிகளிலும் இணைய முடக்கம் !

எங்களின் கோரிக்கைகளான உறுதியான வருமானம், கடன் தள்ளுபடி, அடிப்படை வருமான வரையறை உள்ளிட்டவை பரிசீலனை செய்யப்படும் என கடந்த சில ஆண்டுகளாக வாய்வழியில் சொல்லி வருகிறது பா.ஜ.க அரசு. ஆனால், அது தொடர்பான எவ்வித நடவடிக்கையும் எடுத்தாக தெரியவில்லை. இம்முறை நடந்த ஒன்றிய அமைச்சர்களுடனான பேச்சு வார்த்தையும் தோல்வியில் முடிந்தது என போராட்ட களத்தில் உள்ள விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

அரசின் அடக்குமுறைக்கு பணியாத அவர்களின் போரட்டத்தை ஒடுக்குவதற்கு, வன்முறையை கையில் எடுத்துள்ளது ஒன்றிய பா.ஜ.க அரசு. புகை குண்டுகளை வீசியும், இதர தடுப்புகளை எழுப்பியும் இருக்கிறது ஒன்றிய அரசு, இந்த படுபாதக செயலால் சுமார் 130 க்கும் மேற்பட்ட விவசாயிகள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இது போன்ற செய்திகள் இணையத்தில் வேகமாக பரவியதையடுத்து, பதற்றம் நிகழும் பகுதிகளில் இணையத்தையும் முடக்கியுள்ளது ஒன்றிய அரசு. இணையத்தின் ஒடுக்குவதன் கருத்து சுதந்திரத்தை மோடி அரசு தடுத்திருக்கிறது இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். உணவளிக்கும் விவசாயிகளை துன்புறுத்தும் இந்த அரசுக்கு நிச்சயம் மக்கள் பாடம் புகட்டுவார்கள்.

banner

Related Stories

Related Stories