அரசியல்

“ஏழை, நடுத்தர மக்களை வரி ஏய்ப்பின் மூலம் பழிவாங்கும் மோடி அரசு” : காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

இந்திய வரிவிதிப்பில், தனியார் நிறுவனங்களின் வரி விகிதத்தை மிஞ்சிய தனி மனித வருமான வரி! வாடும் மக்கள்!

“ஏழை, நடுத்தர மக்களை வரி ஏய்ப்பின் மூலம் பழிவாங்கும்  மோடி அரசு” : காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒன்ரிய அரசின் வரிவிதிப்பில், தனியார் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டிருக்கும் வரி விகிதத்தை விட வருமான வரி செலுத்தும் மக்கள் மீது கூடுதல் வரி சுமத்தப்பட்டுள்ளது. இவள்ளவு வித்தியாசம் உருவாகி இருப்பது இதுவே முதல் முறை. இதனால் ஏழை எளிய நடுத்தர மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

ஒன்றிய அரசு தற்போது விதித்திருக்கும் வரி வரையறை, சமூக நீதிக்கு புறம்பாக உள்ளது என ஆதாரங்களோடு, தனது X சமூக வலைதள பக்கத்தில் விமர்சித்து பதிவிட்டிருக்கிறார் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்.

“கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத வகையில் தனி மனித வருமான வரி ரூ.10 லட்சம் கோடியாக அதிகரித்திருக்கிறது. தனியார் நிறுவனங்களின் வரி 9 லட்சம் கோடியாக குறைந்திருப்பது அதிர்ச்சியாக உள்ளது என பொருளாதார அறிஞர்கள் கருத்து தெரிவித்திருக்கின்றன”

“தனியார் நிறுவனங்கள் மீதான வரி விகிதமானது, கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு குறைந்துள்ள போதும், தனிமனித வருமான வரி கனிசமாக அதிகரித்துள்ளது.”

“இந்த காரணங்களால் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகி இருக்கிறது. நிறுவனங்களின் இந்த நிலையில் அதில் பணிபுரியும் தொழிலாளர்களின் பொருளாதார நிலையும் கவலைக்குரியதாக மாறி இருக்கிறது. இதனால் பலர் கடன் பெற்று அதை அடைப்பதற்கு வட்டிக்கட்டி வாழும் துர்பாக்கிய நிலை ஏற்பட்டிருக்கிறது.

“ஏழை, நடுத்தர மக்களை வரி ஏய்ப்பின் மூலம் பழிவாங்கும்  மோடி அரசு” : காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ்!

ஆனால், இதன் மூலம் லாபம் அடைந்த பெரும் முதலாளிகளான அதானி மற்றும் அம்பானி போன்றோர் கடும் வளர்ச்சி கண்டுள்ளனர். ஆசியாவிலேயே பெரும் பணக்காரராக அம்பானி வளர்ச்சியடைந்துள்ளார். உலகின் பெரும் பணக்காரர்கள் பட்டியலில் இருக்கும் இந்தியர்கள் அனவரும் பா.ஜ.க அரசுக்கு மிக நெருக்கமானவர்களாக இருக்கிறார்கள்.

இவ்வாறான வரி ஏய்ப்பின் முலம் நடுத்தர மக்களின் வாழ்வாதரத்தை உறிஞ்சி பெரும் பணக்காரர்களுக்கு தாரைவார்த்திருக்கிறது பா.ஜ.க. இவர்களின் இந்த கார்ப்பரேட் ஆதரவு கொள்கையால் மக்கள் காவு கொடுக்கப்பட்டிருக்கிறார்கள். என்று கடுமையாக விமர்சித்திருக்கிறார்” ஜெய்ராம் ரமேஷ்

மக்களை நேரடியாக பாதிக்கும் வரி விகிதத்தில் ஏற்றத்தாழ்வுகள் நீடிக்கும் போதும் இடைக்கால பட்ஜெட்டில் மக்களின் சுமைகளை குறைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

மக்களை கடுமையான சுமைக்கு தள்ளியிருக்கும் அரசின் இந்த முடிவுக்கு இந்திய அளவில் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories