அரசியல்

அன்று இகழ்ச்சி... இன்று புகழ்ச்சி... “மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” - நிதிஷிடம் தேஜஸ்வி கேள்வி !

முன்பு பாஜகவினரை விமர்சித்த நீங்கள், இப்போது அவர்களைப் புகழ்ந்து பேசுகிறீர்களே என்று மக்கள் கேட்டால், என்ன சொல்வீர்கள்? என நிதிஷ் குமாரிடம் தேஜஸ்வி கேள்வியெழுப்பியுள்ளார்.

அன்று இகழ்ச்சி... இன்று புகழ்ச்சி...  “மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” - நிதிஷிடம் தேஜஸ்வி கேள்வி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (JDU). அப்போது நடைபெற்ற தேர்தலில் நிதிஷின் கட்சி வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பாஜக ஒப்புக்கொண்டது.

தொடர்ந்து சில ஆண்டுகள் கழியவே, கடந்த 2022-ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்து, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார் நிதிஷ் குமார். அப்போது மீண்டும் நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்ற நிலையில், துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பொறுப்பேற்றார்.

இந்த சூழலில் RJD மற்றும் JDU கட்சிக்குள் சில முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில், கடந்த மாதம் 28-ம் தேதி மீண்டும் பாஜகவுடன் நிதிஷ் குமார் இணைந்தார். இதன் மூலம் RJD, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தனது கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ், தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து மீண்டும் முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.

அன்று இகழ்ச்சி... இன்று புகழ்ச்சி...  “மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” - நிதிஷிடம் தேஜஸ்வி கேள்வி !

3 ஆண்டுகளில் 3-வது முறையாக நிதிஷ் குமார் பதவியேற்றுக்கொண்ட நிலையில், இவருடன் சேர்ந்து பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சராக உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். நிதிஷ் குமாரின் இந்த கட்சி தாவல் நாடு முழுவதும் அரசியலில் பெரிய பேசுபொருளாக மாறியது.

இந்த சூழலில் இன்று பீகார் சட்டமன்றத்தில் நிதிஷ் குமாரின் அரசுக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் RJD, JDU, BJP, காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்றது. தொடர்ந்து நடைபெற்ற வாக்கெடுப்பின்போது, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெளிநடப்பு செய்த நிலையில், பெரும்பான்மையை நிரூபித்தார் நிதிஷ் குமார்.

243 தொகுதிகளை கொண்ட பீகாரில், பெரும்பான்மை பெற 122 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு தேவை. அதன்படி தற்போது நிதிஷ்குமாருக்கு அவர் கூட்டணி கட்சிகள் உட்பட 129 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு கிடைத்துள்ளது. இதன்மூலம் மீண்டும் அதிகாரபூர்வமாக முதலமைச்சராக அறிவிக்கப்பட்டார் நிதிஷ் குமார்.

அன்று இகழ்ச்சி... இன்று புகழ்ச்சி...  “மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” - நிதிஷிடம் தேஜஸ்வி கேள்வி !

இந்த நிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பின்போது எதிர்க்கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான தேஜஸ்வி பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. சட்டமன்றத்தில் தேஜஸ்வி பேசியதாவது, “நான் நிதிஷ் குமார் தலைமையிலான அரசுக்கு எதிராக நிற்கிறேன். முதலில் நிதிஷுக்கு நன்றி சொல்ல வேண்டும். ஏனெனில் 9-வது முறை முதல்வராக பதவி பிரமாணம் ஏற்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். ஒரே ஆட்சியில் மூன்றாவது முறையாக பதவிப் பிரமாணம் செய்யும் அற்புதமான காட்சியை இதுவரை நாங்கள் கண்டதில்லை.

ஐக்கிய ஜனதா தளம் (JDU) கட்சி எம்.எல்.ஏ-க்களை நினைத்தால் வருத்தமாக உள்ளது. ஏனென்றால் அவர்கள் பொதுமக்களிடம் பதில் சொல்ல வேண்டும். ’முதல்வராக நிதிஷ்குமார் ஏன் 3 முறை பதவிப் பிரமாணம் செய்தார்?’ என்று யாராவது உங்களிடம் கேட்டால் என்ன சொல்வீர்கள்?

முன்பு பாஜகவினரை விமர்சித்த நீங்கள், இப்போது அவர்களைப் புகழ்ந்து பேசுகிறீர்களே என்று கேட்டால், என்ன சொல்வீர்கள்?. இத்தனை முறை, கூட்டணி மாற்றம் செய்த நிதிஷ் குமார், இனியும் கூட்டணியில் மாற்றம் செய்ய மாட்டார் என பிரதமர் மோடியால் உறுதியளிக்க முடியுமா?

அன்று இகழ்ச்சி... இன்று புகழ்ச்சி...  “மக்கள் கேட்டால் என்ன சொல்வீர்கள்?” - நிதிஷிடம் தேஜஸ்வி கேள்வி !

நிதிஷ் குமாரை நான் ஒரு தந்தை என்ற முறையில் தசரதனாகவே பார்க்கிறேன். தசரதன்தான் தனது மகன் ராமனை காட்டுக்கு அனுப்பினார். தற்பொழுது நிதிஷ் குமார் தசரதனாக இருப்பதற்கான நெருக்கடி அவருக்கு ஏற்பட்டுள்ளது. ஆனால் நிதிஷ் குமார் என்னை மட்டும் காட்டுக்கு அனுப்பவில்லை. ஒட்டுமொத்த பீகார் மக்களின் உணர்வுகளையும் புரிந்து கொள்ளாமல் மக்களுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறார்.

நாங்கள் சோசலிச இயக்கத்தை சேர்ந்தவர்கள். பீகார் முதல்வர் நிதிஷ் குமாரை எங்கள் குடும்பத்தின் உறுப்பினராக நினைத்தோம். நாட்டில் மோடியை தோற்கடிக்க நீங்கள் கொடியை ஏந்துகிறீர்கள். அதை அப்படியே வையுங்கள். உங்கள் அண்ணன் மகன் (தேஜஸ்வி) கையை உயர்த்தி பீகாரில் மோடியை தடுத்து நிறுத்த உதவி புரிவார்” என்றார்.

banner

Related Stories

Related Stories