அரசியல்

மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செயலில் ஈடுபட்டு வென்ற பாஜக : வெளியான சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி !

மேயர் தேர்தலில் தில்லுமுல்லு செயலில் ஈடுபட்டு வென்ற பாஜக : வெளியான சிசிடிவி காட்சிகளால் அதிர்ச்சி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, திரிணாமூல் காங்கிரஸ் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு கட்சிகள் இணைந்து இந்தியா கூட்டணியை உருவாக்கின.

அந்த கூட்டணியில் உள்ள காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் யூனியன் பிரதேசமான சண்டிகரில் நடைபெற்ற மேயர் தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட்டன. இந்த கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி வேட்பாளர் குல்தீப் குமார் என்பவர் போட்டியிட்டார்.

அதேபோல பாஜக சார்பில், மனோஜ் சோன்கர் என்பவர் போட்டியிட்டார். இன்று நடைபெற்ற இந்த தேர்தலில் ஆம் ஆத்மி , காங்கிரஸ் கூட்டணி வேட்பாளருக்கு அதிகம் வாக்குகள் இருந்த காரணத்தால் அவர் வெற்றிபெறுவார் என எதிர்பாக்கப்பட்டது.

இந்த தேர்தலில், மொத்தம் பதிவான 36 வாக்குகள் பதிவான நிலையில், அதில் எட்டு வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதனால் பாஜக வேட்பாளர் மனோஜ் சோன்கருக்கு 16 வாக்குகளும், இந்தியா கூட்டணி வேட்பாளர் குல்தீப் குமாருக்கு 12 வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. இதனால் பாஜக வேட்பாளர் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், செல்லாதவை என அறிவிக்கப்பட்ட எட்டு வாக்குகளை தேர்தல் ஆணையர் திருத்திய வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. இதனால் தேர்தல் ஆணையர் பாஜகவுக்கு சாதகமாக செயல்பட்டார் என காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories