அரசியல்

3 ஆண்டுகளில் 3வது முறை... கூட்டணியை மாற்றி ஆட்சியமைக்கும் நிதிஷ் குமார் - மீண்டும் முதல்வராக பதவியேற்பு !

ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் தனது கூட்டணியை முறித்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார், தற்போது பாஜக கூட்டணியில் மீண்டும் முதலமைச்சராக பதிவேற்றுக்கொண்டார்.

3 ஆண்டுகளில் 3வது முறை... கூட்டணியை மாற்றி ஆட்சியமைக்கும் நிதிஷ் குமார் - மீண்டும் முதல்வராக பதவியேற்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

பீகாரில் 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.கவுடன் கைக்கோர்த்து சட்டப்பேரவை தேர்தலை சந்தித்தது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (JDU). இந்த தேர்தல் அறிவிப்பு வந்ததில் இருந்தே பா.ஜ.க-வுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொகுதி ஒதுக்கீடு செய்வதில் பிரச்னை எழுந்தது. இருப்பினும் கூட்டணி உடையாமல் பா.ஜ.க தலைமை பார்த்துக் கொண்டது.

இந்த தேர்தலில் பா.ஜ.க, ஜே.டி.யு கூட்டணி வெற்றி பெற்ற நிலையில், நிதிஷ் குமாரின் கட்சி வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்றது. அதே நேரத்தில் பா.ஜ.க 78 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் மீண்டும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பா.ஜ.க ஒப்புக் கொண்டது. மேலும் பா.ஜ.க துணை முதல்வர் பதவியை பாஜக பெற்றுக் கொண்டது. இதில் இருந்தே பா.ஜ.கவுக்கும், ஜே.டி.யு கட்சிக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து கடந்த 2022-ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணி முறிந்துவிட்டது என்று நிதிஷ் குமார் அறிவித்து, பீகார் முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார். இந்த கூட்டணியின் முதல்வராக நிதிஷ் குமாரும், துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வியும் பதவியேற்றனர்.

3 ஆண்டுகளில் 3வது முறை... கூட்டணியை மாற்றி ஆட்சியமைக்கும் நிதிஷ் குமார் - மீண்டும் முதல்வராக பதவியேற்பு !

தற்போது பாஜகவுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்துள்ள நிலையில், அதில் பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமாரும் முக்கியமாக திகழ்கிறார். அண்மையில் நடைபெற்ற இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் கூட நிதிஷ் குமார் கலந்து கொண்டார். ஆனால் தற்போது மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளார் நிதிஷ் குமார்.

அதாவது சமீப காலமாக ஆர்.ஜே.டி மற்றும் ஜே.டி.யு இடையே சர்ச்சைகள் எழுந்துவந்த நிலையில், நிதிஷ் குமார் மீண்டும் கூட்டணியை மாற்றப்போவதாக நேற்றைய முன்தினம் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதனை JDU-வின் மாநில தலைவர் போலி என்று மறுத்து செய்தி வெளியிட்ட நிலையில், இன்று காலை RJD-யுடன் கூட்டணியை முறித்து, பாஜகவுடன் கூட்டணி அமைக்கவுள்ளதாக தெரிவித்தார்.

3 ஆண்டுகளில் 3வது முறை... கூட்டணியை மாற்றி ஆட்சியமைக்கும் நிதிஷ் குமார் - மீண்டும் முதல்வராக பதவியேற்பு !

அதன்படி இன்று காலை பீகார் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை நிதிஷ் குமார் வழங்கினார். இதைத்தொடர்ந்து தற்போது மீண்டும் ஆளுநர் முன்னிலையில் முதலமைச்சராக பதவி பிரமாணம் செய்து கொண்டார். நிதிஷ் குமாருடன் சேர்ந்து புதிதாக 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர். அதில் பாஜகவை சேர்ந்த சாம்ராட் சௌத்ரி மற்றும் விஜய் குமார் சின்ஹா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்ட 8 பேரில் 3 பேர் பாஜகவையும், 3 பேர் ஜே.டி.யூ கட்சியையும், மதச்சார்பற்ற ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா கட்சியை சேர்ந்த சந்தோஷ் குமார் சுமன், சுயேட்சை எம்.எல்.ஏ சுமித் குமார் என்பவரும் அடங்குவர். நிதிஷ் குமார் கடந்த 3 ஆண்டுகளில் 3-வது முறையாக கூட்டணி மாறியதோடு, 3-வது முறையாக முதலமைச்சராகவும் பதவியேற்றுள்ளார்.

ராஷ்டிரிய ஜனதா தளத்தில் நிதிஷ் இணைந்த பிறகு 2005 முதல் 2014 வரை தொடர்ந்து 8 ஆண்டுகளும், அதன்பிறகு 2020 முதல் தற்போது வரை தொடர்ந்து 9 ஆண்டுகளாகவும் முதலமைச்சராக இருந்து வருகிறார். ஒவ்வொரு முறையும் கூட்டணியை மாற்றிக்கொண்டு தனது ஆட்சியை நிதிஷ் குமார் தக்க வைத்துக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories