அரசியல்

ராமர் கோவில்: "தலித்துகள் நிதியில் கொடுக்கப்படும் பிரசாதம் தூய்மை அற்றது" - திரும்ப அளிக்கப்பட்ட நன்கொடை!

தலித்துகள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் எனக் கூறி ராமர் கோவிலுக்கு தலித் மக்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட நிதி திருப்பி அளிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது.

ராமர் கோவில்: "தலித்துகள் நிதியில் கொடுக்கப்படும் பிரசாதம் தூய்மை அற்றது" - திரும்ப அளிக்கப்பட்ட நன்கொடை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு இந்துத்துவ கும்பலால் இடிக்கப்பட்ட பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோயில் பிரம்மாண்டமாக கட்டப்பட்டுள்ளது. இந்த கோயிலின் திறப்பு விழா வரும் ஜனவரி 22-ம் தேதி நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி உட்பட பா.ஜ.கவை சேர்ந்த முக்கிய தலைவர்கள் மற்றும் ஆர்.எஸ்.எஸ் நிர்வாகிகள், ஒன்றிய அமைச்சர்கள் என பலரும் கலந்து கொள்கின்றனர்.

மேலும் இந்த விழாவில் பங்கேற்க அரசியல் கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ், சிபிஎம், சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகள் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க மாட்டோம் என அறிவித்துவிட்டன.

இதற்கிடையில், பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்த உத்தரகாட் ஜோதிர் மடத்தின் சங்கராச்சார்யா அவிமுக்தேஷ்வரனந்த் சரஸ்வதி சங்கராச்சாரியாக்கள் யாரும் ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் கலந்துகொள்ள மாட்டோம் என அறிவித்தார். இப்படி தொடர் சர்ச்சையில் சிக்கி வரும் ராமர் கோவில் திறப்பு விழா தற்போது மற்றொரு சர்ச்சையில் சிக்கியுள்ளது.

தலித்துகள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் எனக் கூறி ராமர் கோவிலுக்கு தலித் மக்களிடம் நன்கொடையாக பெறப்பட்ட நிதி திருப்பி அளிக்கப்பட்டதால் சர்ச்சை எழுந்துள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவுக்காக நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் நிதி வசூலிக்கப்பட்டு வந்தது.

ராமர் கோவில்: "தலித்துகள் நிதியில் கொடுக்கப்படும் பிரசாதம் தூய்மை அற்றது" - திரும்ப அளிக்கப்பட்ட நன்கொடை!
ANI

அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் ஜாலவார் மாவட்டத்திலும் பல்வேறு தரப்பு மக்களிடம் அரசு அதிகாரிகள் நிதி வசூல் செய்துள்ளனர். அதில் முண்ட்லா கிராமத்தில் உள்ள ஏராளமான தலித் மக்களிடமும் நன்கொடை வசூலிக்கப்பட்டுள்ளது.

ஆனால், கடந்த ஜனவரி 9-ம் தேதி அன்று, அந்த கிராமத்துக்கு வந்த சில அதிகாரிகள் தலித் மக்கள் அளித்த நிதியை திரும்ப அவர்களிடமே திரும்பி கொடுத்துள்ளனர். இது குறித்து கிராம மக்கள் கேள்வி எழுப்பியபோது, கோயில் சடங்குகளுக்கு தலித்துகளின் பணம் ஏற்கப்படாது என்றும், அவர்கள் நன்கொடையில் அளிக்கும் பிரசாதம் தூய்மையற்றதாகக் கருதப்படும் ஏற்பதால் அவர்கள் அளித்த நிதியை திரும்ப அளிப்பதாக கூறியுள்ளனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள், சில தலித் அமைப்புகளுடன் இணைந்து, இந்த சம்பவம் குறித்து காவல் துறையில் புகார் அளித்துள்ளனர். ஆனால் புகாரை ஏற்க மறுத்த அதிகாரிகள் கிராமத்திற்கு வந்து புகாரை கைவிடுமாறு கிராம மக்களை மிரட்டி வருவதாக ஊடகங்களிடம் கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories