
இந்தியாவில் இருக்கும் அனைத்து பகுதிகளிலும் நாள்தோறும் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒன்றியத்தில் பாஜக வந்த பிறகு, பெண்களுக்கு எதிரான குற்றப்பட்டியாலும் அதிகரித்தே காணப்படுகிறது. அதோடு எதிர்த்து கேள்வி கேட்பவர்கள், எதிர்க்கட்சிகள், பத்திரிகையாளர்கள் என பலரையும் ஒன்றிய பாஜக அரசு கட்டுப்டுத்த முயற்சிக்கிறது.
அந்த வகையில் UAPA என்று சொல்லப்படும் தேச விரோத சட்டத்தை பயன்படுத்தி, பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பும், பாஜகவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்களை அடக்க முயற்சிக்கிறது பாஜக அரசு. அதன்படி கடந்த 2021-ம் ஆண்டை விட, 2022-ம் ஆண்டில் UAPA சட்டத்தின் கீழ் பதியப்பட்ட வழக்குகளின் எண்ணிக்கை 17.9% அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ளது.
NCRB என்று சொல்லப்படும் தேசிய குற்ற ஆவணக் காப்பகம் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் நிகழும் குற்றங்களை பட்டியலிட்டு அறிக்கையாக வெளியிடும். இதில் எந்த மாநிலத்தில் குற்றங்கள் அதிகரிப்பு, எந்த வழக்கில் அதிக குற்றங்கள் என பட்டியலிட்டு வெளியிடும். அதன்படி கடந்த 2022-ம் ஆண்டில் குற்ற பட்டியலை 2023-ம் ஆண்டின் இறுதியில் (கடந்த டிசம்பர் மாதம்) வெளியிட்டுள்ளது NCRB.

அதில் UAPA சட்டத்தில் மட்டும் நாடு முழுவதும் பதியப்பட்ட வழக்குகளில் 17.9% அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. UAPA சட்டம் என்பது நாட்டுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீது பதியப்படக்கூடிய ஒரு பயங்கர சட்டமாகும். இந்த சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவர்களுக்கு ஜாமீன் கூட அவ்வளவு எளிதில் கிடைக்காது. இது போன்ற ஒரு சட்டத்தை பத்திரிகையாளர்கள் மீது ஒன்றிய பாஜக அரசு எளிதாக பயன்படுத்தி வருகிறது.
இந்த சட்டமானது நாட்டுக்கு எதிராக செய்லபடுபவர்கள் மீது பயன்படுத்தப்படுபவை ஆகும். ஆனால் தற்போது பாஜக அரசுக்கு எதிராக செயல்படுபவர்கள் மீதும் பயன்படுத்தி வருகிறது. 2019 ஆம் ஆண்டு பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பின், UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோர் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில் தற்போது ஜம்மு காஷ்மீர், அசாம், மணிப்பூர், உத்தர பிரதேசம் உள்ளிட்ட பாஜக ஆளும் மாநிலங்களில் இந்த வழக்கு அதிகமாக பதியப்பட்டுள்ளதாகவும், இதில் ஜம்மு காஷ்மீரில் 28%-மும், அசாமில் 40%-மும் உத்தர பிரதேசத்தில் 83-ல் இருந்து 101-ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆவணம் தெரிவிக்கிறது.

அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டில் UAPA சட்டம் 17 சிறுவர்கள் மீது பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 13 சிறுவர்கள் ஜம்மு காஷ்மீரில் பதியப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2021-ல் 814-ஆக இருந்த வழக்கு 2022-ல் 1,005-ஆக அதிகரித்துள்ளது. இப்படி பாஜக ஆட்சிக்கு பிறகு நாடு முழுவதும் UAPA சட்டத்தின் கீழ் பதியப்படும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அண்மையில் கூட ஒன்றிய பாஜக அரசின் தில்லாலங்கடி வேலைகளை மக்களுக்கு வெளிச்சம்போட்டு காட்டி வரும் NEWSCLICK ஊடகத்தில் ரெய்டு நடத்தி, UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அந்நிறுவனத்தின் ஆசிரியரை கைது செய்யப்பட்டார்.
இதுபோல் 2010 முதல் சுமார் 16 பத்திரிகையாளர்கள் தேச விரோத செயல்களில் ஈடுபடுவதாக கூறி அவர்கள் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டனர். அதில் சிலர் தற்போது வரை சிறையில் உள்ளன. இதில் ஜம்மு காஷ்மீர், கேரளா, டெல்லி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பத்திரிகையாளர்கள் ஆவர்.

ஒன்றிய பாஜக அரசுக்கு எதிராக குரல் எழுப்பும்போது அதனை ஒடுக்கும் விதமாக செயல்படும் பாஜக அரசுக்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இம்மாதிரியான சூழலில் ‘பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்கிதா, பாரதிய சாட்சிய சன்ஹிதா’ என 3 குற்றவியல் சட்டங்களை பாஜக அரசு நடைமுறை படுத்தியுள்ளது.
எதிர்க்கட்சி உறுப்பினர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டு நாடளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இந்த சட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அதோடு இந்த சட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என்று இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.








