அரசியல்

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர் பாஜக, மோடியின் தீவிர ஆதரவாளர் - கைதானவரின் தந்தை பரபர வாக்குமூலம் !

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய மனோரஞ்சன் என்பவர் பாஜக மற்றும் மோடியின் தீவிர ஆதரவாளர் என அவரது தந்தை கூறியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர் பாஜக, மோடியின் தீவிர ஆதரவாளர் - கைதானவரின் தந்தை பரபர வாக்குமூலம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர், கடந்த 4-ம் தேதி தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த சூழலில் 8-வது நாளாக மக்களவை, மாநிலங்களவையில் கூட்டத்தொடர் நேற்று நடைபெற்று கொண்டிருந்த நேரத்தில், பார்வையாளர்கள் மாடத்தில் இருந்து சாகர் சர்மா, மனோரஞ்சன் ஆகிய 2 நபர்கள் அரங்கிற்குள் சட்டென்று குதித்தனர்.

தொடர்ந்து அவர்கள் கோஷமிட்டுக்கொண்டே, தாங்கள் கொண்டு வந்த புகை குண்டுகளையும் வெடிக்க செய்தனர். இதனால் அங்கு சற்று சலசலப்பு ஏற்பட்ட நிலையில், அந்த நபர்களை அங்கிருந்த சில எம்.பிக்கள் துரத்தி பிடித்து காவலர்களிடம் ஒப்படைத்தனர். அவர்களிடம் விசாரிக்கையில், 5 பேர் சேர்ந்து இந்த திட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதனைத் தொடர்ந்து அவர்கள் 5 பேர் மீது UAPA சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு இந்த தாக்குதலுக்கு 18 மாதங்களாக அந்த கும்பல் திட்டம் தீட்டியதும் தெரியவந்தது. நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய இந்த நபர்களுக்கு கர்நாடக பாஜக எம்.பி பிரதாப் சிம்ஹாவே பாஸ் வழங்கியது தெரியவந்தது.

நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்தியவர் பாஜக, மோடியின் தீவிர ஆதரவாளர் - கைதானவரின் தந்தை பரபர வாக்குமூலம் !

இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் தாக்குதல் நடத்திய மனோரஞ்சன் என்பவர் பாஜக மற்றும் மோடியின் தீவிர ஆதரவாளர் என அவரது தந்தை கூறியுள்ளார். இது குறித்துப் பேசிய மனோரஞ்சனின் தந்தை தேவராஜே கவுடா, எந்த ஒரு மகனும் இதுபோன்ற செயலை செய்யக்கூடாது. மக்களவை நமது சொத்து. யார் செய்தாலும் இது கண்டிக்கத்தக்கது.

ஒரு தந்தையாக நான் இதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். சமுதாயத்திற்கு ஏதாவது தவறு செய்திருந்தால் தூக்கிலிடட்டும். என் மகன் பிரதமர் நரேந்திர மோடியின் தீவிர ரசிகன். இத்தகைய சிறந்த பிரதமரைப் பெற்றது இந்தியாவின் பாக்கியம் என்று என் மகன் கூறுவதுண்டு” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories