அரசியல்

பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் : நாடாளுமன்றத்தில் தொடரும் அராஜகம்!

நாடாளுமன்றத்தில் பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் செய்யப்பட்டுள்ளதற்கு கண்டனங்கள் எழுந்து வருகிறது.

பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் : நாடாளுமன்றத்தில் தொடரும் அராஜகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் கடந்த வாரத்திலிருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் தி.மு.க உறுப்பினர் எம்.எம் அப்துல்லா ஜம்மு காஷ்மீர் பிரச்சனை குறித்து பேசினார்.

அப்போது அவர், ”ஒவ்வொரு இனத்துக்கும் தங்கள் சொந்த விதியை தாங்களே நிர்ணயிக்கும் உரிமை இருக்கிறது. காஷ்மீர் மக்களுக்கும் அது பொருந்தும்’ என சொன்னவர் தந்தை பெரியார்.”என பேசினார். இதற்கு நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட ஒன்றிய அமைச்சர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

பெரியார் கருத்தை மேற்கோள் காட்டிய தி.மு.க MP உரை நீக்கம் : நாடாளுமன்றத்தில் தொடரும் அராஜகம்!

உடனே எம்.எம். அப்துல்லாவின் இப்பேச்சு அவை குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. இதற்குக் காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, "எம்.எம்.அப்துல்லா பேசியது அவரது கருத்து கிடையாது. பெரியாரின் கருத்து. அவர் பேசியதை நீக்கியது பேச்சுரிமைக்கு எதிரானது" என கண்டித்துள்ளார்.

அதேபோல் திருச்சி சிவா MP,"பெரியாரின் கருத்தைச் சுட்டிக்காட்டிப் பேசியதில் எந்த தவறும் இல்லை. தி.மு.கவுக்கு தனியாக எந்த வண்ணமும் பூச வேண்டாம். தி.மு.க அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு தேச நலனுக்காகவே செயல்பட்டு வருகிறது. இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரும்போது 370 சிறப்பு அதிகாரம் மீண்டும் திருப்பக் கொண்டு வரப்படும்" என தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories