அரசியல்

“இது பெண் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி...” - மஹுவா மொய்த்ரா பதவி நீக்கத்திற்கு கொதித்த மம்தா !

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பியான மஹுவா மொய்த்ரா, தற்போது எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

“இது பெண் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி...” - மஹுவா மொய்த்ரா பதவி நீக்கத்திற்கு கொதித்த மம்தா !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்றத்தில் அதானி மற்றும் பிரதமர் மோடியின் கூட்டுச் சதியை, இந்தியா கூட்டணி கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல் அதானி முறைகேடுகளுக்கு ஆதரவாக பா.ஜ.க செயல்படுவதாகவும், அதனை மூடி மறைப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்து வருகின்றனர். தொடர்ந்து அதானி மற்றும் பிரதமர் மோடி குறித்து நாடாளுமன்றத்தில் பேசும் எம்.பிகள் மீது தொடர்ந்து குறிவைத்து அவர்களது குரல்களை பாஜக ஒடுக்க நினைத்து பல்வேறு முறையற்ற நடவடிக்கைகளை மேற்கொள்கிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, அதானி மற்றும் பிரதமர் மோடி விமானத்தில் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தைக் காட்டி கேள்வி எழுப்பினார். இதையடுத்து உப்புசப்பு இல்லாத வழக்கைக் காரணமாகக் காட்டி ராகுல் காந்தி இடைநீக்கம் செய்யப்பட்டார். பிறகு நீதிமன்றம் வரை சென்று போராடி இடைநீக்கத்தைத் திரும்பப்பெற வைத்தார்.

“இது பெண் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி...” - மஹுவா மொய்த்ரா பதவி நீக்கத்திற்கு கொதித்த மம்தா !

இதைத்தொடர்ந்து தற்போது திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மஹுவா மொய்த்ராவை பா.ஜ.க குறிவைத்தது. இவர் தொழிலதிபர் ஒருவரிடம் பணம் வாங்கிக் கொண்டு பிரதமரை விமர்சிப்பதாக பா.ஜ.கவினர் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு விசாரிக்க பரிந்துரை செய்யப்பட்டது.

அதன்படி இந்த குழு விசாரணையில் பங்கேற்று தனது விளக்கத்தை மஹுவா மொய்த்ரா கொடுத்தார். ஆனால் அந்த விசாரணைக்குழுவில் இருந்த பாதிபேர் பா.ஜ.கவை சேர்ந்தவர்கள் ஆவர். இதனால் மஹுவா மொய்த்ரா மீதான விசாரணை அறிக்கையை நாடாளுமன்ற நெறிமுறைகள் குழு இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து, மஹுவா மொய்த்ராவை நீக்கம் செய்ய பரிந்துரைத்தது.

இதனால் தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்தது. எனினும் இந்த கடும் எதிர்ப்புக்கு மத்தியிலும் எம்.பி பதவியில் இருந்து மஹுவா மொய்த்ராவை ஒன்றிய அரசு நீக்கம் செய்துள்ளது. இந்த நீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ், தி.மு.க உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பிகள் வெளிநடப்பு செய்து தங்களது எதிர்ப்புகளை பதிவு செய்துள்ளனர்.

“இது பெண் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி...” - மஹுவா மொய்த்ரா பதவி நீக்கத்திற்கு கொதித்த மம்தா !

இந்த நிலையில், மஹுவா மொய்த்ரா எம்.பி பதவியில் இருந்து நீக்கப்பட்டதற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மம்தா பேசியதாவது, "மஹுவா மொய்த்ரா நீக்கப்பட்டது, பாஜகவின் அரசியல் பழிவாங்கல். ஜனநாயகத்தை பாஜக படுகொலை செய்துவிட்டது. இது மிகவும் அநீதியான ஒன்று. இந்த யுத்தத்தில் மஹுவா மொய்த்ரா நிச்சயம் வெல்வார்.

495 பக்கம் கொண்ட அறிக்கையை நாடாளுமன்றத்தில் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு தாக்கல் செய்துவிட்டு மஹுவாவையும், இந்தியா கூட்டணி எம்.பிக்கள் யாரையும் பேச பாஜகவினர் அனுமதிக்கவில்லை. இப்படி அநீதியாக மஹுவாவின் பதவி பறிக்கப்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த சூழலில் 'இந்தியா' கூட்டணி ஒன்றிணைந்து நிற்பது மகிழ்ச்சியளிக்கிறது; அதற்கு வாழ்த்துகள்.

“இது பெண் இனத்திற்கு இழைக்கப்பட்ட அநீதி...” - மஹுவா மொய்த்ரா பதவி நீக்கத்திற்கு கொதித்த மம்தா !

நாங்கள் அனைவரும் மீண்டும் எதிர்த்துப் போராடுவோம். மஹுவா மொய்த்ரா தற்போது பாதிக்கப்பட்டுள்ளார். எங்கள் கட்சி முற்றிலும் அவருக்கு உறுதுணையாக இருக்கும். ஜனநாயகத்தில் இப்படியான நிகழ்வுகள் துரதிரஷ்டவசமானவை. பாஜகவின் இத்தகைய அணுகுமுறை பெரும் துயரத்தை தருகிறது. ஜனநாயகத்துக்கு எப்படி துரோகம் செய்யலாம் பாஜக? மஹுவா தமது நிலைப்பாட்டை தமது நியாயத்தை தெரிவிக்க அனுமதிக்காதது ஏன்? அப்பட்டமாக அநீதி இழைத்துவிட்டார்கள்.

இது பெண் இனத்திற்கே இழைக்கப்பட்ட அநீதியாகும். இதுதான் நாடாளுமன்றத்தை நடத்தும் விதமா? இந்த துரோகத்திற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். மக்கள் மஹூவா மொய்த்ராவுக்கு நீதி வழங்குவார்கள். அடுத்த தேர்தலில் பாஜக நிச்சயமாகத் தோற்கும்." என்றார்.

banner

Related Stories

Related Stories