அரசியல்

இந்திய அணி வெற்றியை ராஜஸ்தான் தேர்தலுக்கு பயன்படுத்த பார்த்த பாஜக : புட்டுபுட்டு வைத்த காங்கிரஸ்!

ராஜஸ்தான் தேர்தலுக்கு உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி வெற்றியை அரசியல் செய்ய பா.ஜ.க என்ன சதித்திட்டம் வைத்திருந்தது என காங்கிரஸ் விளக்கியுள்ளது.

இந்திய அணி வெற்றியை ராஜஸ்தான் தேர்தலுக்கு பயன்படுத்த பார்த்த பாஜக :  புட்டுபுட்டு வைத்த காங்கிரஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவில் நடைபெற்ற 50 ஓவர் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது .

பின்னர் ஆடிய ஆஸ்திரேலிய அணி ஆரம்பத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும் பின்னர் ட்ராவிஸ் ஹெட், லபுசேனேவின் ஆட்டம் காரணமாக இந்திய அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 6-வது முறையாக உலகக்கோப்பையைக் கைப்பற்றியது.

இந்த தோல்விக்குப் பல காரணங்கள் கூறினாலும் விளையாட்டில் ஒன்றிய பா.ஜ.க அரசு அரசியலைப் புகுத்தியதாலே இந்திய அணிதோற்றது என்ற காரணமும் ரசிகர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை பரவலாகக் கூறப்பட்டு வருகிறது.

இந்திய அணி வெற்றியை ராஜஸ்தான் தேர்தலுக்கு பயன்படுத்த பார்த்த பாஜக :  புட்டுபுட்டு வைத்த காங்கிரஸ்!

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சுப்ரியா ஷிரினேட் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "உலகக் கோப்பையில் இந்தியா வெற்றி பெற்றால், ராஜஸ்தான் முழுவதும் பேனர்கள் மற்றும் ஹோர்டிங்குகள் நிறுவத் தயார் நிலையிலிருந்துள்ளது பாஜக. அந்த பேனர்களில் இந்திய அணி ஜெர்சி உடையில் பிரதமர் மோடி வெற்றி அடையாளங்களுடன் கைகளை உயர்த்தியது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தேர்தல் பதாகைகளை அகற்றிவிட்டு, இந்திய வீரர்களுடன் மோடி இருக்கும் புகைப்படங்களை வைக்கவும் திட்டமிட்டுள்ளனர். ஜெய்ப்பூரில் திறந்த பேருந்தில் ஐசிசி டிராபியுடன் பிரதமர் மோடி மற்றும் இந்திய வீரர்கள் ரோட்ஷோ நடத்தத் திட்டமிட்டிருந்தனர்.

ஞாயிற்றுக்கிழமை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக் கோப்பையை இந்தியா மட்டும் வென்றிருந்தால் பாஜக எவ்வளவு கீழ்நிலைக்குச் சென்றிருப்பார்கள் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?" என கேள்வி எழுப்பி கடுமையாக விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories