அரசியல்

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? இதன் மூலம் பாஜக எவ்வாறு ஊழல் செய்கிறது ? முழுமையான விவரம் உள்ளே !

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? இதன் மூலம் பாஜக எவ்வாறு ஊழல் செய்கிறது ?  முழுமையான விவரம் உள்ளே !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

1. தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன?

அரசியல் கட்சிகளுக்கு நன் கொடை தருவதற்காக “வெளிப் படைத்தன்மை” என்ற பெயரில் பா.ஜ.க. ஒன்றிய அரசால் 2017ஆம் ஆண்டு பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 2018ஆம் ஆண்டு அமலுக்கு வந்தது. எந்த ஒரு தனிநபர் அல்லது அமைப்பு இந்த பத்திரங்களை வாங்கி அதனை அரசியல் கட்சிகளுக்கு தரலாம். யார் தந்தார்கள் என்பது தந்தவர்களுக்கும் அரசுக்கும் அதாவது ஆளும் கட்சிக்கு மட்டுமே தெரியும். பொது மக்களுக்கு வெளிப்படையாக தெரியாது.

2. இது எப்படி அமலாக்கப்படுகிறது?

ஒரு தனி நபரோ அல்லது அமைப்போ ரூ.1000 முதல் ரூ.கோடி மடங்குகளில் இந்த பத்திரங்களை வாங்கலாம். இதற்கு அதிக ரம் பெற்ற எஸ்பிஐ வங்கியின் எந்த ஒரு கிளையிலும் இதனை வாங்கலாம். நன்கொடையாளர்கள் விவரம் பொது வெளியில் பகிரப்படாது. வங்கிக்கும் அரசுக்கும் மட்டுமே இந்த விவரங்கள் தெரியும்.

3. தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதியை பெற யார் தகுதியானவர்கள்?

ம க்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள்தான் பெற இயலும். மேலும் இந்த கட்சிகள் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற தேர்தலில் குறைந்தபட்சம் 1 சதவீத வாக்குகள் வாங்கியிருக்க வேண்டும்.

4. இந்த முறை ஏன் விமர்சனத்துக்கு உள்ளாகியுள்ளது?

அரசு இந்த முறை வெளிப் படைத்தன்மை கொண்டது என கூறுகிறது. ஆனால் பல அரசியல் கட்சிகளும் ஜனநாயகத்தில் பற்றுக் கொண்ட அமைப்புகளும் இதனை கடுமையாக விமர்சிக்கின்றன. இந்த விமர்சனங்களுக்கு இரு முக்கிய காரணங்கள்:

யார் நன்கொடையாளர் என்பதும், எவ்வளவு நன்கொடை தொகை என்பதும் வெளிப்படையாக தெரியாது. மக்கள் அறிய முடியாது.

பெரும் தொகை நன்கொடை தருபவர்கள் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களாக இருந்தால் அவர்கள் இந்த நன்கொடை மூலம் பெறும் லாபம் என்ன? சலுகைகள் என்ன? இது ஊழலுக்கு வழிவகுக்கும். இந்த விவரங்களும் மக்களுக்கு தெரியாது.

வாக்களிக்கும் மக்கள் இந்த விவரங்களை தெரிந்து கொள்ள உரிமை படைத்தவர்கள். எனவே இந்த பூடக ரகசிய நடைமுறை விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? இதன் மூலம் பாஜக எவ்வாறு ஊழல் செய்கிறது ?  முழுமையான விவரம் உள்ளே !

5. எந்த அரசியல் கட்சிகள் இதனை எதிர்க்கின்றன?

பல அரசியல் கட்சிகள் விமர்சித்தாலும் சிபிஐ(எம்) இதனை மிக கடுமையாக எதிர்க்கிறது. இது ஊழலை சட்டமயமாக்கும் மோசமான நடைமுறை என சிபிஐ(எம்) சொல்கிறது.

6. எந்தெந்த கட்சிகள் பத்திரங்கள் மூலம் நிதியை பெறுகின்றன? எந்த கட்சிக்கு அதிகமாக நிதி செல்கிறது?

அநேகமாக எல்லா முதலாளித்துவக் கட்சிகளும், மாநில கட்சிகளும் இத்தகைய நிதியை பெறுகின்றன. இதுவரை 2018லிருந்து 2022 வரை பெறப்பட்ட ரூ.9208 கோடி. அதில் மிக அதிகமாக ரூ.5,271 கோடி அதாவது 57சதவீதம் பா.ஜ.க. பெற்றுள்ளது. அடுத்தபடியாக காங்கிரஸ் ரூ.952 கோடி பெற்றுள்ளது. இந்த இரு தொகைகளுக்கும் இடையே உள்ள நீண்ட இடைவெளியை பார்க்கலாம். பல மாநில முதலாளித்துவக் கட்சிகளும் இத்தகைய நிதி பெற்றுள்ளன. மேலும் 2022க்கு பின்னர் ரூ.3200 கோடிக்கு தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டுள்ளன.

7. தேர்தல் பத்திரம் மூலம் நிதியை பெறாத கட்சி ஏதாவது உள்ளதா?

ஆம். சிபிஐ(எம்) மட்டும்தான் தேர்தல் பத்திரம் மூலம் நிதியை பெறாத ஒரே கட்சி. இதனை உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் பதிவு செய்துள்ளார்.

8. சிபிஐ(எம்)க்கு எங்கிருந்து நிதி வருகிறது?

கட்சி உறுப்பினர்களிடம் பெறப்படும் லெவி தொகை மற்றும் மக்களிடமிருந்து பெறும் நன்கொடை மூலம் மட்டுமே சிபிஐ(எம்) நிதி பெறுகிறது.

9. தேர்தல் பத்திரங்கள் மூலம் யார் நன்கொடை தருகின்றனர்?

பெரும்பாலும் பெரிய கார்ப்ப ரேட் நிறுவனங்கள்தான் தருகின்றன. அவை தரும் தொகை கோடிக்கணக்கில்! அவ்வாறு தரப்படும் நிதிக்கு கைமாறாக அரசு மூலம் ஒப்பந்தங்கள் மற்றும் திட்டங்களில் சலுகைகள் பெரும் அளவில் கிடைக்கின்றன என்பதுதான் முக்கிய குற்றச்சாட்டு.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? இதன் மூலம் பாஜக எவ்வாறு ஊழல் செய்கிறது ?  முழுமையான விவரம் உள்ளே !

10. ஊழலுக்கு வழிவகுக்கும் என தெரிந்திருந்தும் யாரும் ஆட்சேபணை தெரிவிக்கவில்லையா?

2019 ம் ஆண்டு தேர்தல் ஆணையம் இதற்கு கடுமையாக ஆட்சேபணை தெரிவித்தது. சிபிஐ(எம்) கடுமையாக விமர்சித்தது,. மேலும் ஜனநாயக சீர்திருத்தத்துக்கான அமைப்பு (Association For Demo cratic Reforms) போன்ற சில அமைப்புகளும் விமர்சித்துள்ளன.

11. ஏன் இந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்துக்கு போனது?

கடுமையான விமர்சனங்களுக்கு பின்னரும் நாடாளுமன்றத்தில் எதிர்ப்புக்கு பின்னரும் பா.ஜ.க. அரசு பின்வாங்கவில்லை. இது தேர்தலில் சம வாய்ப்புகளை மறுக்கும். ஆளும் கட்சிக்கு மிகப்பெரிய நியாயமற்ற சாதகமான வாய்ப்பை உருவாக்கும். ஏற்கெனவே பல சிதைவுகளுக்கு உள்ளாகியுள்ள முதலாளித்துவ தேர்தல்முறை மேலும் பின்னடைவை சந்திக்கும். எனவே இது குறித்து வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன.

12. யார் வழக்கு தொடர்ந்துள்ளனர்?

சிபிஐ(எம்) சார்பாக பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி வழக்கு தொடர்ந்துள்ளார். மேலும் ஏடிஆர் மற்றும் ஜெயா தாகூர் எனும் தனி நபர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

13. எப்பொழுது வழக்கு தாக்கல் செய்யப்பட்டது?

2019 ஆம் ஆண்டே வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. கெடுவாய்ப்பாக நீதிமன்றம் ஜனநாயகத்துக்கு முக்கியமான இந்த வழக்கை விசாரிக்க அபரிமிதமான காலதாமதம் செய்தது. இடையில் நடந்த பல தேர்தல்களில் தேர்தல் பத்திரங்கள் ஜனநாயக நடைமுறைகள் மீது பெரும் சிதைவை உருவாக்கின. குறிப்பாக பா.ஜ.க. பெரும் பலன் பெற்றது. 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாகவாவது இந்த வழக்கு முழுமை பெற வேண்டும் என்பதே இன்றைய தேவை ஆகும். இப்பொழுது அரசியல் சாசன அமர்வு இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க உள்ளது.

14. தேர்தல் பத்திரங்கள் எப்படி ஜனநாயகத்தை பாதிக்கும்?

நிதியின் பெரும் பகுதியை வளைக்கும் பா.ஜ.க. தேர்தல் செலவை மற்ற கட்சிகளைவிட அதிகம் செய்கிறது. ஊடகங்கள் மூலம் விளம்பரங்கள்/ சமூக ஊடகங்களுக்கு செய்யும் செலவு/ ஊடகங்களை விலைக்கு வாங்குவது ஆகியவற்றுக்கு இந்த நிதி பயன்படுத்தப்படுகிறது. மேலும் பல இடங்களில் வாக்காளர்களுக்கு பணமும் தரப்படுகிறது. இந்த நிதி மூலம் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்ப்பது/ சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவது ஆகியவையும் நடக்கின்றன. நிதியின் 57சதவீதத்தை பா.ஜ.க. பெறுவதால் இந்த ஜனநாயக சிதைவு பணிகளில் அது ஆழமாக செயல்படுகிறது. அதன் மூலம் பலன் பெறுகிறது. தேர்தல் அரசியலில் களத்தில் இருக்கும் கட்சிகளிடையே அசமத்துவ ஆடுகளத்தை இது விளைவிக்கிறது. எனவேதான் தேர்தல் பத்திரங்கள் ஜனநாயக விரோதமானவை என சிபிஐ(எம்) கூறுகிறது.

15. தேர்தல் பத்திரங்கள் எப்படி ஊழலை சட்டமயமாக்குகின்றன?

இந்தியாவில் உள்ள பல பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஆளும் கட்சிக்கு நன்கொடை தருகின்றன. யார் எவ்வளவு தருகின்றனர் என்பது ஆளும் கட்சிக்கு அரசு இயந்திரம் மூலம் தெரியும். தான் பெற்ற தொகைக்கு கைமாறாக பல சலுகைகளை அரசு இந்த கார்ப்பரேட்டுகளுக்கு செய்கிறது. விமான நிலையங்கள்/ சில பொதுத் துறை நிறுவனங்கள்/ இயற்கை வளங்கள் ஆகியவை டெண்டர் இல்லாமலேயே கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்கப்படுகின்றன. கார்ப்பரேட் நிறுவனங்களிலேயே ஆளும் கட்சிக்கு நெருக்கமானவர்களுக்கு அதீத சலுகைகள் காட்டப்படுகின்றன. உதாரணத்துக்கு மும்பை விமான நிலையத்தை மேம்படுத்தியது ஒரு கார்ப்பரேட் நிறுவனம். ஆனால் அந்த நிறுவனம் மீது அமலாக்கத்துறை/ மத்திய புலனாய்வுத் துறை/ வருமானத் வரி துறை ஆகியவற்றை ஏவி நிர்ப்பந்தப்படுத்தி ஆளும் கட்சிக்கு மிக மிக நெருக்கமான இன்னொரு குழுமத்துக்கு இந்த விமான நிலையம் மடைமாற்றப்பட்டது. இது மிகப்பெரிய ஊழல். ஆனால் தேர்தல் பத்திரங்கள் மூலம் இதை நியாயப்படுத்தி சட்டப்ப்பூர்வமாக்கப்படுகின்றது.

தேர்தல் பத்திரங்கள் என்றால் என்ன? இதன் மூலம் பாஜக எவ்வாறு ஊழல் செய்கிறது ?  முழுமையான விவரம் உள்ளே !

16. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் எந்த பிரச்சனைகளை முதன்மையாக பரிசீலனை செய்கிறது?

ரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவுகள் 14/ 19/ 21 ஆகியவை மீறப்பட்டுள்ளனவா என்பதை நீதி மன்றம் ஆய்வு செய்கிறது. குறிப்பாக :

ரகசிய தேர்தல் நிதி என்பது சட்டத்துக்கு விரோதமானதா?

அரசியல் கட்சிகளுக்கு நிதி எப்படி வருகிறது என்பதை குடிமக்கள் தெரிந்து கொள்ளும் தகவல் உரிமை பாதிக்கப்பட்டுள்ளதா?

ஆகிய பிரச்சனைகளை ஆய்வு செய்கிறது.

17. நீதிமன்றத்தில் அரசின் வாதம் என்ன?

தேர்தல் பத்திரங்கள் சட்டப் பூர்வமானவை எனவும் நியாயமானவை எனவும் வெளிப்படைத்தன்மை கொண்டவை எனவும் அரசு வாதிடுகிறது. மேலும் இது குறித்து தகவல் அறியும் உரிமை மக்களுக்கு இல்லை எனவும் சர்வாதிகாரமாக, மூர்க்கத்தனமாக அரசு சொல்கிறது.

18. அரசியல் கட்சிகள் கார்ப்பரேட்டுகளிடமிருந்து தேர்தல் நிதி பெறுவது தவறா?

ஆ ம். தவறு. ஏனெனில் கார்ப்பரேட்டுகள் தாம் செய்யும் செலவுகளுக்கு தகுந்த கைமாறை எதிர்பார்ப்பர். எனவே இது தவறுதான்!

19. அப்படியானால் மாற்று வழி என்ன?

தேர்தல் செலவுகளை அரசே ஏற்க வேண்டும். அனைத்து கட்சிகளுக்கும் தேர்தல் பணிகளில் மற்றும் பிரச்சாரத்தில் சமவாய்ப்பு தரப்பட வேண்டும். தேர்தல்களில் தனியார் பணத்துக்கு குறிப்பாக கார்ப்பரேட்டுகளுக்கு எவ்வித பங்கும் இருக்கக் கூடாது. இது ஒன்றுதான் சிறந்த தீர்வாக இருக்க இயலும்..

20. உச்சநீதிமன்ற வழக்கு எந்த நிலையில் உள்ளது?

வாதங்கள் முடிந்து தீர்ப்பு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது. இதற்கிடையே செப்டம்பர் 30 வரை அனைத்துக் கட்சிகளும் பெற்ற தேர்தல் நிதி பற்றிய விவரங்களை தருமாறு தேர்தல் ஆணையத்தை நீதிமன்றம் பணித்துள்ளது. இந்த அரசியல் சாசன அமர்வு நியாயமான தீர்ப்பு தர வேண்டும் என விரும்புகிறோம்; அவ்வாறு தரும் என நம்புகிறோம்.

- நன்றி தீக்கதிர்

Related Stories

Related Stories