அரசியல்

”இந்தியா கூட்டணி பாஜகவுக்கு சவாலாகவே இருக்கும்” : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர்!

"நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணி பா.ஜ.கவுக்கு சவாலாகவே இருக்கும் என உண்மையை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார்.

”இந்தியா கூட்டணி பாஜகவுக்கு சவாலாகவே இருக்கும்” : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

10 ஆண்டுகளாக மக்கள் மத்தியில் வெறுப்பை ஏற்படுத்தி வரும் ஒன்றிய பா.ஜ.க அரசை அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தோற்கடித்தே தீரவேண்டும் என்ற சூளுரையுடன் எதிர்கட்சிகள் ஒற்றுமையுடன் இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.

மேலும் தேர்தலுக்கான ஒருங்கிணைப்புக் குழுக்களையும் அமைத்து அடுத்தடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் வியூகங்களை வகுத்து வருகின்றனர். அதேநேரம் பா.ஜ.கவும் இந்தியா கூட்டணி பெயரை கண்டு அச்சத்தில் உள்ளது. அதன் வெளிப்பாடாகத்தான் இந்தியாவின் பெயரை பாரத் என பா.ஜ.கவினர் பயன்படுத்தி வருகின்றனர்.

அண்மையில் டெல்லியில் நடந்த ஜி.20 மாநாட்டில் கூட பிரதமர் மோடியின் இருக்கையில் இந்தியாவிற்குப் பதில் பாரத் என்ற பெயர் இடம் பெற்றது சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் இந்தியா கூட்டணி கட்சிகளில் உள்ள எதிர்க்கட்சிகளக்கு 60% வாக்கு உள்ளது பா.ஜ.கவிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால்தான் பா.ஜ.க மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவையும் கொண்டு வந்துள்ளது.

”இந்தியா கூட்டணி பாஜகவுக்கு சவாலாகவே இருக்கும்” : உண்மையை ஒப்புக் கொண்ட ஒன்றிய அமைச்சர்!

அதோடு பா.ஜ.கவின் என்.டி.ஏ கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறியுள்ளது. அதேபோல் நடிகர் பவன் கல்யாண் கட்சியும் இக்கூட்டணியில் இருந்து வெளியேறிவிட்டதாக அறிவித்துள்ளார். இப்படி என்.டி.ஏ கூட்டணியிலிருந்து பலரும் வெளியேறி வருகின்றனர். அதேநேரம் சாதிவாரி கணக்கெடுப்பை எடுத்த வேண்டும் எனவும் என்டிஏ கூட்டணியில் இருக்கும் கட்சிகள் வலியுறுத்தி வருகிறது. இது பா.ஜ.கவிற்கு குழப்பதை ஏற்படுத்தியுள்ளது.

அதேபோல் விரைவில் நடக்க உள்ள 5 மாநில தேர்தல்களில் மத்திய பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியைப் பிடிக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவித்து வருகின்றனர். இப்படி இந்தியா கூட்டணி வலுவடைந்து வருகிறது.

இந்நிலையில், நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி பா.ஜ.கவுக்கு சவாலாகவே இருக்கும் என உண்மையை ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார். இது குறித்து ஆங்கில ஊடகத்திற்குப் பேட்டி கொடுத்த தர்மேந்திர பிரதான், இந்தியா கூட்டணி பா.ஜ.கவுக்கு சவாலாகவே இருக்கிறது. வரும் தேர்தலை தீவிரமாக எடுத்துக் கொண்டு சாதாரண தொண்டர் முதல் தலைவர்கள் வரை கடுமையாக உழைத்து வருகிறோம் என தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தொடங்கி பா.ஜ.கவினர் பலரும் இந்தியா கூட்டணியை விமர்சித்து வரும் நிலையில் உண்மையைச் சரியாக ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஒப்புக்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories