அரசியல்

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் செலவுகள் அதிகரிக்கும்.. 2015-ல் அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் !

'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை செயல்படுத்தினால் அதிக செலவு ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் செலவுகள் அதிகரிக்கும்.. 2015-ல் அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்தே ஜனநாயகத்துக்கு விரோதமான பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டின் கூட்டாட்சியை சிதைக்கும் வகையில் 'ஒரே நாடு -ஒரே தேர்தல்' திட்டத்தை கொண்டுவருவதில் வெகு மும்முரமாக இருந்து வருகிறது.

இந்த முறை நடைமுறைக்கு வந்தால் நாட்டில் இருந்த அனைத்து சட்டமன்றங்களும் கலைக்கப்பட்டு நாடாளுமன்ற தேர்தலோடு சட்டமன்ற தேர்தலும் நடைபெறும். அதே போல ஒன்றிய அரசு கலைக்கப்பட்டாலோ அல்லது அது பெரும்பான்மை இழந்தாலோ அப்போதும் நாடு முழுவதும் உள்ள சட்டமன்றங்கள் கலைக்கப்படும் நிலை நிலவுகிறது.

இதன் காரணமாக இதற்கு எதிர் கட்சிகளும், அரசியல் விமர்சகர்களும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே 'ஒரே நாடு ஒரே தேர்தல்' குறித்து ஆய்வு நடத்த முன்னாள் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் குழு அமைத்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தால் செலவுகள் அதிகரிக்கும்.. 2015-ல் அறிக்கை தாக்கல் செய்த தேர்தல் ஆணையம் !

பாஜக தரப்பில் தேர்தல் செலவை குறைப்பதற்கு இந்த நடைமுறையை கொண்டுவருகிறோம் எனக் கூறினாலும், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' முறையை செயல்படுத்தினால் அதிக செலவு ஏற்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து கடந்த 2015ம்ஆண்டு தேர்தல் ஆணையம் தரப்பில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால் வாக்குப்பதிவு இயந்திரங்கள், விவிபேட் ஆகியவற்றின் தேவை அதிகரிக்கும். இதனால் இவற்றை வாங்குவதற்கு மட்டும் ரூ.9000 கோடிக்கு மேல் செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த இயந்திரங்களின் ஆயுட்காலம் 15 ஆண்டுகள் மட்டுமே என்பதால் அடுத்த 15 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இவற்றை வாங்க இதை விட கூடுதல் செலவு ஏற்படும். மேலும், இவற்றை பாதுகாக்க கூடுதல் இட வசதி மற்றும் பாதுகாவர்கள் தேவைப்படுவர் என்றும், இதற்கும் செலவுகள் அதிகரிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதே போல, நாடு முழுவதும் நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் அதிக அளவிலான தேர்தல் பணியாளர்கள், பாதுகாப்புப் படையினர், காவல்துறையினரின் தேவைப்படுவர் என்றும், இதனால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படலாம் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories