அரசியல்

பா.ஜ.க.வின் அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !

பா.ஜ.க.வின் அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

“கவுண்ட் டவுன் ஆரம்­ப­மாகி விட்­டது”

“Count down Started”

ஆம்; பொய்யை மூல­த­ன­மாக்கி, பொய்­யி­லேயே வாழ்ந்த பொய்­யர் ஆட்­சி­யின் முடிவு காலத்­துக்கு…

“கவுண்ட் டவுன் ஸ்டார்­டட் ”.

ஜன­நா­யக நெறி­மு­றை­கள் அத்­த­னை­யை­யும் அழித்­தொ­ழித்­திட்ட சர்­வா­தி­கா­ரக் காட்­டாட்­சி­யின் ஆட்­டத்தை அடக்­கிட,

“கவுண்ட் டவுன் ஸ்டார்­டட் ”.

மதச்­சார்­பற்ற நாட்­டில் மத­வெ­றி­களை மறை­மு­க­மா­கத் தூண்டி, நாட்­டையே கல­வர பூமி­யாக்­கி­டும் மத­வெ­றி­யர்­க­ளுக்கு தூபம் போட்ட ஒரு மத­வெறி ஆட்­சி­யின் அந்­தி­மத்­துக்கு,

“கவுண்ட் டவுன் ஸ்டார்­டட் ”.

“அச்சே தின்” என உயர்த்­திய இரு கைகள் 9 ஆண்­டு­கள் கடந்த பின் அதே “அச்சே தின்” என்று அதே திக்­கில் உயர்­கி­றதே தவிர, அச்சே தின்னை மக்­கள் காண­வில்லை; ‘ஜும்லா’ (வாய­ள­வில் வடை சுட்ட) வாக்­கு­று­தி­கள்­தான் அவை என்று இன்று கூச்ச நாச்­சம் சிறி­து­மின்றி கூறி­டும் போலி­கள் ஆட்­சிக்கு,

“கவுண்ட் டவுன் ஸ்டார்­டட் ”.

மொத்­த­மா­கச் சொல்ல வேண்­டு­மா­னால், ஒரு ஈவு இரக்­க­மற்ற கொடுங்­கோ­லர்­க­ளின் தான்­தோன்றி தர்­பா­ரின் இறு­திச் சடங்­குக்கு,

“கவுண்ட் டவுன் ஸ்டார்­டட் ”.

மும்­பை­யில் நடை­பெற்ற INDIA (இந்­தியா) கூட்­ட­ணி­யின் கூட்ட முடி­வு­க­ளுக்­குப் பிறகு கழ­கத் தலை­வர் தள­பதி ஆற்­றிய உரை­யில் “கவுண்ட் டவுன் ஆரம்­ப­மா­கி­விட்­டது” – என்று உறு­தி­யு­டன் உரைத்த சொற்­களை சுல­ப­மா­கப் புறந்­தள்ளி ஆளும் பா.ஜ.க.வால் கடந்து சென்று விட முடி­யாது!

பா.ஜ.க.எனும், இந்த ஜன­நா­யக விரோத, மத­வெறி கொடுங்­கோல் ஆட்­சிக்கு எதி­ராக எல்லா அர­சி­யல் கட்­சி­க­ளும் ஒன்­றி­ணைந்து செயல்­பட வேண்­டும்; நம்­மி­டையே உள்ள மாச்­சர்­யங்­க­ளைத் துறந்து, யார் இந்­தி­யாவை ஆள வேண்­டும் என்­பதை விட, யார் இந்­தி­யாவை ஆளக்­கூ­டாது என்ற முடி­வோடு ஒன்­றி­ணை­வோம்! அப்­போ­து­தான் இந்­திய ஜன­நா­ய­கம், மதச்­சார்­பின்மை போன்ற இந்­திய அர­சி­யல் அமைப்­புச் சட்­டம் காப்­பற்­றப்­ப­டும்; ஏன்? இந்­தி­யாவே சித­றுண்டு போகா­மல் இருக்க வேண்­டு­மா­னால், “யார் ஆளக்­­கூடாது” என்ற ஒற்றை இலக்­கில் ஒன்­றா­வோம்; என்று கழ­கத் தலை­வர் தள­பதி பல நேரங்­க­ளில் வலி­யு­றுத்தி வந்­தார்!

தலை­வர் தள­பதி விதைத்த விதை முளைத்து வளர்ந்­தால், இந்­தி­யா­வுக்கு விடிவு காலம் ஏற்­ப­டும் என்று எண்­ணி­யோர் பலர்!

விதை முளைத்து எழாது மண்­ணி­லேயே மக்­கி­வி­டும் என இறு­மாந்­தி­ருந்­தோர், ஏள­னப் பார்வை வீசி­யோர் ஏரா­ளம்! அட்­ட­திக்கு பால­கர் போல எதி­ரும் புதி­ரு­மாக இருக்­கும் அணி­கள் ஒன்­றி­ணை­யுமா? மம்தா பானர்­ஜிக்­கும் கம்­யூ­னிஸ்­டு­க­ளுக்­கும் ஒத்து வருமா? காங்­கி­ரஸ் அங்கு தலை எடுக்க மம்தா ஒருக்­கா­லும் அனு­ம­திக்க மாட்­டார் என்று எண்ணி இறு­மாந்­தி­ருந்­தோர் தலை­யிலே இடி இறங்கி விட்­டது!

ஆம்; கவுண்ட் டவுன் ஸ்டார்­டட்!

பா.ஜ.க.வின் அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !

கேர­ளத்­தில் கம்­யூ­னிஸ்ட்­டு­கள் காங்­கி­ர­சுக்கு இடம் கொடுப்­பார்­களா? இ.காங், கம்­யூ­னிஸ்ட்­டு­க­ளோடு ஒத்­துப் போக வாய்ப்பே இல்லை; இந்த நிலை­யில் INDIA (இந்­தியா) கூட்­டணி கரை சேருமா? என்று கரு­தி­ய­வர்­களை, மும்பை கூட்­டம் மூச்­சுத் திண­ற­வைத்து விட்­டது!

ஆம்; கழ­கத் தலை­வர் தள­பதி கூறிய, “கவுண்ட் டவுன் ஆரம்­ப­மா­கி­விட்­டது!”

மகா­ராஷ்­டி­ரா­வில் தேசி­ய­வாத காங்­கி­ரஸ், சிவ­சேனா, காங்­கி­ரஸ் என்ற மூன்று பெரும் சக்­தி­கள் இணை­யும் என்­பது கன­விலே கூட நடக்­காத காரி­யம்! என்ற அர­சி­யல் நோக்­கர்­கள், ஆய்­வா­ளர்­கள் அத்­தனை பேரின் கணக்­கு­க­ளை­யும் தவி­டு­பொ­டி­யாக்கி, மூன்று கட்­சி­க­ளின் தலை­வர்­க­ளும் ஓர­ணி­யில்,அதா­வது பாசிச, பி.ஜே.பி. அரசு அகற்­றப்­பட வேண்­டும் என்ற ஒற்றை நோக்­கில் ஒன்­றாகி நிற்­கின்­ற­னர்.

“உத்­தி­ரப்­பி­ர­தே­சத்­தில் அகி­லே­சும், காங்­கி­ர­சும் ஒரே அணி­யில் அணி­­வகுப்­பார்­களா? அணி­­வகுக்க முடி­யுமா?” என எண்­ணி­யி­ருந்­தோ­ரின் கன­வு­கள் எல்­லாம், ‘இந்­தியா’ கூட்­ட­ணிக் கட்­சி­கள் நடத்­தி­டும் இந்த ஒருங்­கி­ணைப்­புக் கூட்­டங்­க­ளால் தவி­டு­பொ­டி­யாகி விட்­டன.

‘கவுண்ட் டவுன் ஆரம்­ப­மா­கி­விட்­டது’ என, இதனை எல்­லாம் கண்­டு­தான் கழ­கத் தலை­வர் தள­பதி ஸ்டாலின் கூறி­னார்!

தேசிய ஜன­நா­ய­கக் கூட்­டணி என்ற பெய­ரில் பா.ஜ.க. தலை­மை­யில் இயங்­கும் அரசு ஆடிய ஆட்­டம் முடி­வுக்கு வர,

“கவுண்ட் டவுன் ஸ்டார்­டட் ”.

‘இந்­தியா’ அணி­யின் ஒரு­மித்த குரல், ஆளும் அதி­கார வர்க்­கத்­தின் அடி வயிற்­றில் புளி­யைக் கரைக்க ஆரம்­பித்­து­விட்­டது! அதன் அறி­கு­றி­கள் வெளி­வ­ரத் தொடங்­கி­விட்­டன! இறக்­க­மும், இரக்­க­மு­மின்றி ஏறிக் கொண்­டி­ருந்த சமை­யல் எரி­வாயு விலை­யில் திடீ­ரென சிறிய இறக்­கம்!

பா.ஜ.க.வின் அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !

இந்த அறி­விப்­பால் மக்­கள் ஏமா­ற­வில்லை! ஏறிக்­கொண்டே இருக்­கும் பெட்­ரோல் – டீசல் விலை தேர்­தல் நெருங்­கும் நேரங்­க­ளில், சிறிது காலம் ஒரே புள்­ளி­யில் நிற்­ப­தும், தேர்­தல் முடிந்த பின் ஏறு­வ­தை­யும் கடந்த பத்­தாண்டு கால­மாக பல­முறை பார்த்­த­வர்­கள்; எத்­தர்­களை நம்­பு­வார்­களா?

இவர்­க­ளது ஒவ்­வொரு நட­வ­டிக்­கை­யை­யும் மக்­கள் சந்­தே­கிக்­கத் தொடங்­கி­விட்­ட­னர் ! ஏறத்­தாழ கடந்த பத்­தாண்டு கால­மாக நாளொரு மேனி­யும், பொழு­தொரு வண்­ண­மு­மாக ஏறிக்­கொண்­டி­ருந்த சமை­யல் எரி­வாயு, தேர்­தல் நெருக்­கத்­தில் திடீ­ரென ஒரு சிறிது குறைந்­த­தால் மக்­கள் சந்­தோ­சப்பட­வில்லை. சந்­தே­கிக்­கத் தொடங்­கி­னர்.

எல்­லாமே ‘‘தில்­லு­முல்லு – தில்­லு­முல்லு… உள்­ள­மெல்­லாம் கல்லு முல்லு… ஆயி­ரம் நாட­கம், ஆயி­ரம் வேஷங்­கள்…’’ என்­ப­தைத் தெளி­வாக உணர்ந்­தார்­கள்!

இந்த திடீர் விலைக் குறைப்பு, நாடா­ளு­மன்­றத் தேர்­தலை முன்­கூட்டி நடத்­திட எண்ணி, அதற்­கான திட்­ட­மிட்ட வேலையா? – என்று பொது­வான பேச்சு எழுந்­தது!

இந்­தச் சூழ­லில் மும்­பை­யில் சக்­தி­மிகு எதிர்க்­கட்­சி­கள் எல்­லாம் ஒன்­றி­ணைந்து நடத்­திய கூட்­டம்; பா.ஜ.க.வை கதி­க­லங்க வைத்­துள்­ளது! இந்த நிலை­யில் நாடா­ளு­மன்­றப் பொதுத்­தேர்­த­லைச் சந்­தித்­தால் தோல்­வி­தான் முடிவு என்­பது உறு­தி­யான நிலை­யில், வந்த அறி­விப்பே; ‘ஒரே நாடு, ஒரே தேர்­தல்’ – என்­பது! இத­னைச் செயல்­ப­டுத்த முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் தலை­மை­யில் குழு! இடை­யிலே நாடா­ளு­மன்ற கூட்ட திடீர் அறி­விப்பு!

பா.ஜ.க.வின் அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது.. “Count down Started” -சிலந்தி கட்டுரை !

இந்­தச் செய்­தி­கள் எல்­லாம் ஆளும் பி.ஜே.பி. அரசு தோல்வி பயத்­தில் அரண்­டு­போய் கிடப்­பதை தெளி­வா­கக் காட்­டு­கி­றது!

2024 நாடா­ளு­மன்­றத் தேர்­தல் உரிய காலத்­தில் நடத்­தப்­ப­டுமா? முன்­கூட்­டியே வருமா? அல்­லது ‘‘ஒரே நாடு ஒரே தேர்­தல்’’ குறித்து குழு முடி­­வெ­டுக்­கும் வரை கால­தா­ம­தப்­­படுத்­தி­டும் நோக்­கோடு, குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி என்ற போர்­வை­யில், அடுத்த தேர்­தல் அறி­விப்பு வரும் வரை ‘காபந்து’ சர்க்­கா­ராக இந்த ஆட்­சி­யைத் தொடர்ந்­திட சூழ்ச்­சி­கள் மேற்­கொள்­ளப்­ப­டுமா? இப்­ப­டிப் பல சந்­தே­கங்­கள் எழுப்­பு­கின்­றன, திடீர் நாடா­ளு­மன்­றக் கூட்ட அறி­விப்பு பின்­னணி!

தேர்­தல் உரிய நேரத்­தில் நடந்­தா­லும், முன்னே நடந்­தா­லும், பின்னே நடந்­தா­லும், பா.ஜ.க.வின் இறுதி ஆட்சி, அதா­வது அதி­கார ஆட்­டம் முடிவை நெருங்­கி­விட்­டது. கழ­கத் தலை­வர் தள­பதி கூறி­ய­படி,

‘‘கவுண்ட் டவுன் ஆரம்­ப­மா­கி­விட்­டது.’’

Related Stories

Related Stories