அரசியல்

'Nonsense': மணிப்பூர் பற்றி கவலையின்றி சிரித்துக் கொண்டிருக்கிறார் மோடி, -விமர்சித்த ராகுல் காந்தி !

மணிப்பூர் பற்றி கவலைபடாமல் சிரிப்பு, கிண்டல் கலந்து பிரதமர் உரையாற்றியிருப்பது வேதனையளிக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.

'Nonsense': மணிப்பூர் பற்றி கவலையின்றி  சிரித்துக் கொண்டிருக்கிறார் மோடி, -விமர்சித்த ராகுல் காந்தி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வந்தனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்பட்டு வந்தது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் மக்களவையில் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்தனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதி உள்ளதால் வேறு வழி இல்லாமல் சபாநாயகர் விவாதத்திற்கு அனுமதி அளித்துள்ளார்.

இதையடுத்து ஆகஸ்ட் 8,9,10 ஆகிய மூன்று நாட்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது விவாதம் நடைபெற்றது. இந்த விவாதத்தில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சிபிஎம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிய அரசையும், பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சித்துப் பேசினர். குறிப்பாக ராகுல் காந்தி மணிப்பூரில் பாரதமாதாவையே கொன்று விட்டார்கள் என காட்டமாக விமர்சித்தார்.

'Nonsense': மணிப்பூர் பற்றி கவலையின்றி  சிரித்துக் கொண்டிருக்கிறார் மோடி, -விமர்சித்த ராகுல் காந்தி !

இக்கூட்டத் தொடர் தொடங்கிய நாளில் சிறிது நேரம் மட்டுமே கலந்து கொண்ட பிரதமர் மோடி நேற்று நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது பதிலளித்துப் பேசினார். கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேல் பிரதமர் மோடி உரையாற்றினார். இதில், ஐந்து நிமிடம் மட்டுமே மணிப்பூர் பற்றிப் பேசினார்.

பிரதமர் மோடியின் இந்த மோசமான செயலை The Telegraph ஆங்கில நாளேடு போன்ற நாளேடுகள் கடுமையாக விமர்சித்திருந்தன. இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் எம்.பி.ராகுல் காந்தி " மணிப்பூரில் மிகப்பெரிய வன்முறை நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் பிரதமர் மோடி நேற்று இரண்டரை மணி நேரம் பேசியதில் 2 நிமிடங்கள் மட்டுமே மணிப்பூர் பற்றி பேச ஒதுக்கியிருக்கிறார். அவர் அங்கு நடந்த கொடூரம் பற்றி கவலைப்படாமல் சிரிப்பு, கிண்டல் கலந்து பிரதமர் உரையாற்றியிருப்பது வேதனையளிக்கிறது. மணிப்பூர் மாநிலம் தீப்பற்றி எரிந்து பல நாட்களாகிவிட்டதை பிரதமர் மறந்துவிட்டார்.

'Nonsense': மணிப்பூர் பற்றி கவலையின்றி  சிரித்துக் கொண்டிருக்கிறார் மோடி, -விமர்சித்த ராகுல் காந்தி !

நாடாளுமன்றத்தின் நடுவில் அமர்ந்து இருக்கும் பிரதமர் வெட்கம் இன்றி சிரித்துக் கொண்டு இருந்தார். மணிப்பூரில் ராணுவத்தை அனுப்பி இருந்தால் 2 முதல் 3 நாட்களுக்குள் அமைதியை ஏற்படுத்தி இருக்க முடியும் ஆனால் அதனை அவர்கள் செய்யவில்லை.

பிரதமர் என்பவர் ஒரு நாட்டின் பிரதிநிதி. அவருடைய பேச்சில் பொறுப்புணர்வு இருக்க வேண்டும். ஒரு மூன்றாம் தர அரசியல் வாதியை போன்று பிரதமர் பேசுவதை சகித்துக் கொள்ள முடியாது.தற்போது நாடாளுமன்ற தொலைக்காட்சியின் கட்டுப்பாடு அரசிடம் இருக்கிறது; அதனால், அவர்கள் என்னைக் காட்ட விரும்பவில்லை, அதற்காக நான் வருத்தப்படவும் இல்லை. நான் எனது வேலையையும் சரியாக பார்த்திருக்கிறேன்" என்று காட்டமான விமர்சித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories