அரசியல்

டெல்லி மசோதா : 90 வயதில் வீல்சேரில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்.. நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி !

டெல்லி அவசரச் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக வீல் சேரில் வாக்களித்த வந்த காங்கிரஸ் மூத்த தலைவர் மன்மோகன் சிங்குக்கு ஆம் ஆத்மி கட்சியினர் நன்றி தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மசோதா : 90 வயதில் வீல்சேரில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்.. நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

நாடாளுமன்றத்தின் மழைக்கால கூட்டத் தொடர் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத் தொடர் தொடங்கிய முதல் நாளிலிருந்தே இந்தியா கூட்டணி எம்.பிக்கள் மணிப்பூர் வன்முறை குறித்து விவாதம் நடத்த வேண்டும் என ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்து வருகின்றனர்.

ஆனால் இரு அவைகளிலும் அனுமதி மறுக்கப்படுகிறது. இதனால் இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் தொடர்ந்து ஒன்றிய அரசுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர். அதேபோல் மோடி அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தையும் கொண்டுவந்துள்ளனர். நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவந்தால் அதன்மீது விவாதம் நடத்த வேண்டும் என்று விதியுள்ளது. ஆனால் ஒன்றிய அரசு விவாதம் எதுவும் நடத்தாமல் பல்வேறு மசோதாக்களைத் தாக்கல் செய்து வருகிறது.

டெல்லி மசோதா : 90 வயதில் வீல்சேரில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்.. நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி !

அந்தவகையில் மக்களவையில் டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதாவை உள்துறை அமைச்சர் அமித்ஷா, மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இம்மசோதாவிற்கு இந்தியக் கூட்டணி எம்.பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் மக்களவையில் பா.ஜ.கவின் எண்ணிக்கை அதிகம் உள்ளதால் டெல்லி அரசின் அதிகாரிகள் நியமனத்தில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேறியது.

இந்த நிலையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையிலும் ஒன்றிய அரசின் மசோதாவுக்கு எதிராக வாக்களிக்க நாடாளுமன்றத்துக்கு முன்னாள் பிரதமரும், தற்போது எம்.பியுமான மன்மோகன் சிங் வந்தார். 90 வயதான அவருக்கு நடக்க இயலாத சூழலில் வீல் சேரில் வந்து வாக்களித்தார். அதுமட்டுமின்றி ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஷிபு சோரனும் உடல்நிலை சரியில்லாத நேரத்தில் நாடாளுமன்றத்துக்கு வந்து வாக்களித்தனர்.

டெல்லி மசோதா : 90 வயதில் வீல்சேரில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்.. நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி !

இதற்காக ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள், தொண்டர்கள் என பலரும் நன்றி தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில், "நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் பல கட்சிகள், பல தலைவர்கள் பாஜக கொண்டு வந்த இந்த சட்டவிரோத கருப்பு சட்டத்திற்கு எதிராக டெல்லி மக்களுக்கு ஆதரவு அளித்தனர். இந்த ஆதரவு அளித்த அனைத்து தலைவர்களுக்கும் டெல்லியின் அனைத்து கட்சிகளுக்கும் 2 கோடி மக்கள் சார்பாக என் இதய பூர்வமான நன்றி.

குறிப்பாக முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் மற்றும் ஜேஎம்எம் தலைவர் ஷிபு சோரன் ஆகியோர் உடல் நலம் கருதி பாதகமான சூழ்நிலையிலும் நாடாளுமன்றத்திற்கு வந்ததற்கு, இரு மூத்த தலைவர்களுக்கும் டெல்லிவாசிகள் சார்பாக மிக்க நன்றி." என்று குறிப்பிட்டு நன்றி தெரிவித்துள்ளார்.

டெல்லி மசோதா : 90 வயதில் வீல்சேரில் வந்து வாக்களித்த மன்மோகன் சிங்.. நன்றி தெரிவித்த ஆம் ஆத்மி !

தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் செய்தி தொடர்பாளர் அக்ஷய் மராத்தே, "உடல்நிலை பிரச்னை இருந்தபோதிலும், ராஜ்யசபாவுக்கு வந்த டாக்டர் மன்மோகன் சிங்கின் செயல் மிகப்பெரிய மரியாதைக்குரியதாகும். இந்தச் செயலுக்காக ஆம் ஆத்மி அவருக்கு என்றென்றும் நன்றியுடன் இருக்கும்" என்று குறிப்பிட்டு பாராட்டையும் நன்றியையும் தெரிவித்துள்ளார்.

இப்படி தொடர்ந்து ஆம் ஆத்மி கட்சியின் தலைவர்கள், நிர்வாகிகள் என பலரும் மன்மோகன் சிங்குக்கு பாராட்டுகளையும், நன்றிகளையும் தெரிவித்து வருகின்றனர். முன்னதாக ஆம் ஆத்மி கட்சியினரால் மன்மோகன் சிங் கடுமையான கேலிகளுக்கும், கிண்டல்களுக்கும் உள்ளானார். இந்த சூழலில் தற்போது அவர்களே புகழ்ந்து பேசி நன்றி தெரிவித்துள்ளது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories