அரசியல்

“குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன..” : ராகுல் காந்தி வழக்கு - சிறப்பு கட்டுரை!

குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று, வெள்ளியன்று ராகுல்காந்தி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் எள்ளி நகையாடினார்.

“குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன..” : ராகுல் காந்தி வழக்கு - சிறப்பு கட்டுரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன என்று, வெள்ளியன்று ராகுல்காந்தி வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பி.ஆர்.கவாய் எள்ளி நகையாடினார்.  இந்த வழக்கில் தீர்ப்பளித்த போது அவர் மேலும் கூறியதாவது:

“(ராகுலுக்கு வழங்கப்பட்ட) தண்டனை யைப் பொறுத்தவரை, சில காரணிகளைக் கருத்தில் கொண்டுள்ளோம். - இந்திய தண்ட னைச் சட்டப் பிரிவுகள் 498 & 499 IPC தண்ட னைக்குரிய குற்றத்தின் உள்ளடக்கங்கள் அதிகபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்க வழிவகை அளிக்கிறது. வழக்கை விசாரித்த (சூரத்) நீதிபதி அதிகபட்சமாக 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

உச்ச நீதிமன்றத்தின் அறிவுரையைத் தவிர, விசாரணை நீதிபதியால் இதற்கு வேறு எந்த காரணத்தையும் வழங்க முடியவில்லை.  ஒரு நாளைக்குப் பல பொதுக்கூட்டங்களில் உரையாற்றும் அரசியல்வாதிகளுக்கு அவர்களின் பேச்சுகளே நினைவில் இருப்பதில்லை. நீங்கள் அதிகபட்ச தண்டனையை விதிக்கும்போது, அதற்குக் காரணங்கள் இருக்க வேண்டும்.

ஆனால் இதுகுறித்து விசாரணை நீதிமன்றம் எந்தவொரு காரணத்தையும் சுட்டிக் காட்டவில்லை. ஒரு நபரைத் தேர்ந்தெடுக்கும் ஒரு தொகுதி ஒட்டுமொத்தமாகப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகிறது. இதை நாம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும். நீங்கள் ஒரு தனிநபரின் உரிமையை மட்டுமல்ல, முழுத் தொகுதியின் உரிமையையும் பாதிக்கிறீர்கள்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அந்த ‘கற்றறிந்த’ தனி நீதிபதி, ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்பதாலேயே சலுகை வழங்க முடியாது என்கிறார். அதேநேரம் இந்த தண்டனைக்கான மற்ற காரணங்கள் குறித்து அவர் எதையும் சொல்லவில்லை. இந்த அதிகபட்ச தண்டனையின் காரணமாக மட்டுமே, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் விதிகள் (எம்.பி. பதவி பறிப்பு) நடை முறைக்கு வந்துள்ளன. தண்டனை ஒரு நாள்  குறைவாக இருந்திருந்தால், இந்த விதிகள் வந்திருக்காது.

மேல்முறையீட்டில், உயர்நீதிமன்றம் தண்டனை மீதான தடையை நிராகரித்து ஏராளமான பக்கங்களைச் செல வழித்தாலும், இந்த அம்சங்கள் அவர்களின்  உத்தரவுகளில் கணக்கில் கொள்ளப்பட வில்லை. ராகுல் காந்தி பேச்சு நல்ல ரசனை இல்லை என்பதும் உண்மைதான் அதேநேரம், (ராகுல் காந்தி பேசியது) நல்ல  ரசனை இல்லாத வார்த்தைகள் என்பதில் சந்தேகம் இல்லை. பொது வாழ்வில் இருப்ப வர், பொதுப் பேச்சுகளில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

நீதிமன்ற அவமதிப்பு மனுவில் அவரது பிரமாணப் பத்திரத்தை ஏற்கும் போது, இந்த நீதிமன்றம் கவனித்த படி, அவர் மிகவும் கவனமாக இருந்திருக்க வேண்டும். ஒருவேளை மனுதாரர் இந்த வார்த்தைகளை கூறுவதற்கு முன்பு, முந்தைய வழக்குகளில் ஒரு முடிவு வந்திருந்தால், அவதூறானதாகக் கூறப்படும் இதுபோன்ற கருத்துக்களை வெளியிடுவதற்கு முன் அவர் மிகவும் கவனமாக இருந்திருப்பார்.

பொது வாழ்வில் தொடருவது தொடர்பான விவகாரத்தைப் பொறுத்தவரை, மனுதாரர்களின் உரிமை மட்டுமல்ல, அவரைத் தேர்ந்தெடுத்த வாக்காளர்களின் உரிமையும் பாதிக்கப்படுகிறது. எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டும் அதிகபட்ச தண்டனை வழங்குவதற்கு விசாரணை நீதிபதியால் எந்தக் காரணமும் கூறப்படவில்லை என்பதை கருத்தில் கொண்டும், இறுதித் தீர்ப்பு வரும் வரை,  தண்டனை உத்தரவை நிறுத்தி வைக்கிறோம்” என்று உத்தரவிட்டார்.

குற்றவியல் அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து ராகுல் காந்தி, உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த மேல்முறையீட்டு மனு மீது உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற காரசாரமான வாதத்தின் சாரம்சம் வருமாறு:

‘மோடி’ சமூகத்திலிருந்து ஒருவர் கூட வழக்கு தொடரவில்லை

ராகுல் காந்தி தரப்பு வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி வாதங்களை துவக்கி வைத்துப் பேசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது: “ராகுல் காந்தி ஒரு (நரேந்திர மோடி) பெயரை சொன்னதை, ஏதோ 30 கோடி பேருக்கு எதிராக பேசியது போல மாற்றி உள்ளனர். மோடி என்ற பெயர் பலருக்கு உள்ளது. பல சாதிகள், பல மதங்களில்கூட மோடி என்ற பெயர் உள்ளது. ராகுல் காந்தி, ‘மோடி’ என்ற பெயரில் எந்த சாதியையும் அவமதிக்கவில்லை. அவர் குறிப்பிட்ட நபர்களை பற்றி மட்டும்தான் குறிப்பிட்டார்.

“குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன..” : ராகுல் காந்தி வழக்கு - சிறப்பு கட்டுரை!

முதலில் வழக்கு தொடுத்த பூர்ணேஷ் மோடியின் (புகார்தாரர்) அசல் குடும்பப் பெயர் மோடி அல்ல... அவர் வழக்கு தொடுப்பதற்கு முன், தனது குடும்பப் பெயரை மோடி என மாற்றிக் கொண்டார். அவர் மோத் வணிகா சமாஜ் என்ற பிரிவை சேர்ந்தவர். சுவாரஸ்யம் என்னவென்றால், ராகுல் காந்தி தனது உரையின் போது குறிப்பிட்ட நபர்களில் ஒருவர் கூட வழக்குத் தொடரவில்லை. 13 கோடி பேர் கொண்ட சமூகமாக கூறப்படுவோரில் பாதிக்கப்பட்டதாக ஒருவர் கூட வழக்கு தொடரவில்லை. வழக்குத் தொடுத்தவர்கள் அனைவரும் பாஜக அலுவலகத்தில் இருப்பவர்களாக இருக்கிறார்கள். அதிலும் வழக்கு தொடுத்தவரே (பூர்ணேஷ் மோடி) தனது அசல் குடும்பப் பெயர் மோடி அல்ல என்று கூறிவிட்டார்.

சமூகத்தையே அவதூறு செய்யும் ‘நோக்கம்’ ராகுலுக்கு இல்லை

ஒரு நபரின் தார்மீக அல்லது அறிவார்ந்த தன்மையைக் குறைக்கும் வரை, ஒரு நபரின் நற்பெய ருக்கு தீங்கு விளைவிப்பதாக எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்க முடியாது. (இந்திய தண்டனைச் சட்டத்தின் 499-வது பிரிவுகளைப் படித்துப் பார்த்துக் கொள்ள லாம்) ‘மோடி’ என்ற குடும்பப் பெயரைக் குறிப்பிட்டதன் மூலம், அந்த சமூகத்தையே அவதூறு செய்யும் நோக்கம் ராகுல் காந்திக்கு இருந்ததா என்பது தங்களுக்குத் தெரியாது என்று சாட்சிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.  ஆகவே, ராகுல் காந்திக்கு ஒரு ‘நோக்கம்’  இருந்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை. 499-ஆவது பிரிவின் நீட்சி 4 கூறுவதுபோல ‘நோக்கம்’ இல்லாதபோது அது குற்றம் ஆகாது. சமூகத்திற்கு எதிரானதும் அல்ல.

அப்படியே ஆனாலும், அந்தக் குற்றம் ஜாமீன் பெறக்கூடிய சாதாரண குற்றமாகவே பார்க்கப்பட வேண்டியதாகும்.  கொலை, வல்லுறவு, கடத்தல் குற்றங்களோடு பொருத்திய சூரத் நீதிபதி ஆனால், கற்றறிந்த நீதிபதி (சூரத் நீதிபதி) இதை ஒரு தார்மீகக் குழப்பம் சம்பந்தப்பட்ட ஒரு கடுமையான குற்றமாகக் கருதுகிறார். கடத்தல், பாலியல் வல்லுறவு, கொலை போன்றவற்றுக்குத்தான் தண்டனை 2 ஆண்டுகள்... ஆனால், ராகுல் காந்தி மீது, இது எப்படி ஒழுக்க சீர்கேடு சம்பந்தப்பட்ட குற்றமாக மாறுகிறது என தெரியவில்லை? ராகுல் காந்தி ஒரு கொடுங்குற்றவாளி அல்ல. அவர் இதுவரை எந்த வழக்குகளி லும் தண்டிக்கப்படவில்லை. 

“குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன..” : ராகுல் காந்தி வழக்கு - சிறப்பு கட்டுரை!

அனைத்தும் பாஜகவினர் தொடர்ந்தே வழக்குகளே!

ராகுல் காந்திக்கு எதிராக ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் உள்ளன என்று குஜராத் உயர் நீதிமன்றம் கூறி உள்ளது. 13 கிரிமினல் வழக்குகளை அவர்கள் குறிப்பிட்டு உள்ளனர். ஆனால் அந்த 13 வழக்குகளிலும் ராகுலுக்கு எதிராக இன்னும் தீர்ப்பு வரவில்லை. ராகுல் காந்திக்கு எதிரான வழக்குகள் பாஜக காரியகர்த்தாக்களால் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளே நிறைந்துள்ளன. ஆனால், எந்த வழக்கிலும் அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படவில்லை. இந்த வழக்கும்  கூட வாட்ஸ்-ஆப் துண்டுத் தகவல் அடிப்படை யில்தான் தொடரப்பட்டுள்ளது. இதுதவிர வழக்கை தொடர்ந்த நபரே மீண்டும் அதனைத் திரும்பப் பெற்றார். பிறகு அவரே அதனை விசாரிக்கக் கோரினார்.

புகார்தாரருக்கு செய்தித்தாள் வெட்டப்பட்ட வாட்ஸ்-ஆப் கிடைத்ததால் புகார் தொடங்குகிறது. அது எப்படி கிடைத்தது, யார் அனுப்பினார் என்று சொல்ல வில்லை. அனைத்திலும் உண்மை சம்பவம் ஆதாரச் சட்டத்தின்படி நிரூபிக்கப்பட வில்லை. அவர் 21 மாதங்களுக்குப் பிறகே  வழக்குக்கு வருகிறார். வழக்கில் ஆர்வ முள்ள நபராக மாறுகிறார்...”  நீதிபதி பி.ஆர்.கவாய் குறுக்கிட்டு, “காரியகர்த்தா அல்ல, ஆனால் அவர் ஒரு  முக்கியமான செயல்பாட்டாளர்” என்று  கூற, “ஆமாம், ஒரே ஒரு நபர், கணேஷ்... பல மாதங்களுக்குப் பிறகு கண்டு பிடிக்கப்பட்டவர். அவர் பாஜக காரியகர்த்தா வாக இருக்கிறார்” என்று சிங்வி பதிலளித்தார்.

அப்போது, பூர்ணேஷ் மோடி தரப்பு வழக்கறிஞரான மகேஷ் ஜெத்மலானி குறுக்கிட்டு, “மோடி என்ற குடும்பப் பெயரு டன் ஒவ்வொரு நபரையும் அவதூறு செய்வதே ராகுல் காந்தியின் நோக்கமாக இருந்தது, அது பிரதமருடன் ஒத்துப் போகிறது. இது முதன்மையான குற்றம். ‘அச்சா ஏக் சோட்டா சா சவால், இன் சப்  சோரோன் கா நாம், மோடி, மோடி, மோடி கைசே ஹைன்... லலித் மோடி, நிரவ் மோடி... அவுர் தோடா துண்டோகே தோ அவுர் சாரே மோடி நிகல் ஆயேகா’ -என்பதுதான் ராகுல் காந்தி பேசிய வார்த்தைகள்” என்றார். மேலும், “நான் குஜராத்தி மொழிப் பெயர்ப்பைப் பார்த்தேன்... மோடி என்ற குடும்பப்பெயர் கொண்ட அனைவரும் குற்றம் சாட்டப்பட்டவர்களால் அவமானப்படுத்தப் பட்டு உள்ளனர்” என்றார்.

“குஜராத்திலிருந்து வரும் தீர்ப்புகள் சுவாரஸ்யமாக இருக்கின்றன..” : ராகுல் காந்தி வழக்கு - சிறப்பு கட்டுரை!

ஒருவர் பொதுவாழ்வில் 8 ஆண்டுகளை இழக்க வேண்டுமா?

மீண்டும் வாதத்தைத் தொடர்ந்த அபிஷேக் மனு சிங்வி, 2 ஆண்டு சிறைத்தண்டனையால் “இந்த மனிதர் (ராகுல் காந்தி) 8 ஆண்டுகள் அமைதியாக இருக்க வேண்டுமா?” என்று கேள்வி எழுப்பினார். ஏற்கனவே ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு தீர்ப்பை குஜராத் உயர் நீதிமன்றம் 66 நாட்கள் கிடப்பில் போட்டது. இதனால் இரண்டு நாடாளுமன்றக் கூட்ட தொடருக்கு ராகுல் காந்தியால் செல்ல முடியவில்லை. கடைசியில் அவர் குற்ற முடையவர் என்றும் கூறிவிட்டனர். ஆனால் அவருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லை.  அப்போது, “தண்டனை மீதான தகுதி நீக்கம் தானாகவே உடனடியாக வருவ தாகும். ஆனால், லில்லி தாமஸ் (2005-இல்) நீதிமன்றத்திற்கு எடுத்துச் சென்ற விவகாரத்தை, தற்போது மீண்டும் கொண்டுவர முற்படுகிறார்கள்.

தண்டனை மீது தடைகோரும் விண்ணப்பங்களில், மிகத் தெளிவான புள்ளி இருக்க வேண்டும். இங்கு ராகுல் காந்தி பதவி பறிக்கப்பட்டதில் “ஒரு தனிநபர் அல்லது வாக்காளரின் உரிமை பாதிக்கப்படவில்லை. ஆனால், விசாரணை நீதிபதி அதிகபட்ச தண்டனை வழங்கியுள்ளார் என்றால், அதை அவர்தான் விளக்க வேண்டும்” என்று ஜெத்மலானி பதிலளித்தார். “தொகுதி பிரதிநிதித்துவம் இல்லாதது பொருத்தமானதா? என்ற கேள்வியை முன்வைக்கிறார்களே..” என்று நீதிபதி கவாய் கேள்வி எழுப்ப, அதற்கு பதிலளித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “நான் குஜராத்தைச் சேர்ந்தவன் என்று சொல்வதில் பெருமிதம் கொள்கிறேன்” என்றார்.  உடனே நீதிபதி பி.ஆர்.கவாய், “நானும் மகா ராஷ்டிராவைச் சேர்ந்தவன்” என்று பதிலடி  கொடுத்தார். அப்போது, மகேஷ் ஜெத்மலானி, “சொலிசிட்டர் ஆனவுடன் ஒருவர் முழு இந்தியாவையும் பிரதிநிதித்துவம் செய்கிறார்” என்று நீதிபதிகளை சமாதானப் படுத்தினார்.

இடைத்தேர்தல் அறிவிக்காததற்கு தோல்வி பயமே காரணம்!

ஜெத்மலானிக்கு பதிலளித்த சிங்வி, ரவி காந்த் தீர்ப்பை முன்வைத்து, “தொகுதியின் பிரதிநிதித்துவம் மிகவும் பொருத்தமான கருத்தாகும்” என்றார். அந்த தீர்ப்பை வாசித்துக் காட்டினார். 2018-இல் வெளியான லோக் பிரஹாரி தீர்ப்பையும் குறிப்பிட்டார். அதேபோல தண்டனை நிறுத்தி வைக்கப்பட்ட ஹர்திக் படேல் எம்.பி.  வழக்கையும் சுட்டிக்காட்டினார். மேலும், “கேரள (வயநாடு) தொகுதிக்கான தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெற்றிக்கான வாய்ப்புகள் குறைவு என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்கலாம்” என்றும் கிண்டலாக குறிப்பிட்டார்.

நன்றி: ‘தீக்­க­திர்’

Related Stories

Related Stories