அரசியல்

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 5271 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தேர்தல் பத்திரங்களிலிருந்து பா.ஜ.கவிற்கு ரூ. 5271 கோடி நன்கொடை கிடைத்துள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 5271 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க.. வெளியான அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

2018-ஆம் ஆண்டு ஒன்றிய பாஜக அரசால் தேர்தல் பத்திரம் (Electoral Bond) திட்டம் கொண்டு வரப்பட்டது. அதாவது, அங்கீகரிக்கப்பட்ட எஸ்.பி.ஐ (SBI) வங்கி கிளைகளில், ரூ. ஆயிரம், 10 ஆயிரம், 1 லட்சம், 10 லட்சம், கோடி போன்ற மதிப்புகளில் தேர்தல் பத்திரங்கள் கிடைக்கும்.

தனி நபர்களோ, கார்ப்பரேட் நிறுனங்களோ இந்த தேர்தல் பத்திரங்களை வாங்கி, தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு நன்கொடையாக அளிக்கலாம். ஒருவர் எத்தனை தேர்தல் பத்திரமும் பெறலாம் என்று கூறப்பட்டது. தேர்தலின்போது கட்சிகளுக்கு 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல் நிதி வழங்கியவர் பெயர் மற்றும் தொகை தொடர்பான தரவுகளை நிதியாண்டின் இறுதியில் கட்சிகள் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தில் (Representation of People Act-1951) முன்பு குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 5271 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க.. வெளியான அதிர்ச்சி தகவல்!

தனை தேர்தல் பத்திரங்கள் திட்டம் (Electoral Bond Scheme- 2018) மூலம் திருத்திய பாஜக அரசு, தேர்தல் பத்திரம் மூலம் கட்சிகளுக்கு நிதி வழங்குபவரின் பெயர்களைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கத் தேவையில்லை என மாற்றியது. தேர்தல் பத்திரம் என்பது வெளிப்படைத் தன்மைக்கு எதிராக உள்ளது என உச்ச நீதிமன்றத்தில் 2019-ஆம் ஆண்டுத் தேர்தல் ஆணையம் தரப்பிலேயே முறையிடப்பட்டது. எனினும் அது மாற்றப்படவில்லை.

தேர்தல் பத்திரங்கள் மூலம் ரூ. 5271 கோடி நன்கொடை பெற்ற பா.ஜ.க.. வெளியான அதிர்ச்சி தகவல்!

இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிகமான கார்ப்பரேட் நிதியை பெற்றது, பா.ஜ.கதான் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. Association for Democratic Reforms (ADR) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் பா.ஜ.கவின் மொத்த நன்கொடைகளில் ரூ. 5271.9751 கோடி (52 %) தேர்தல் பத்திரங்களிலிருந்து வந்த நன்கொடை என்ற அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது.

2016 லிருந்து 2017 முதல் 2021 லிருந்து 2022 வரை ரூ. 5271.9751 தேர்தல் பத்திரங்களில் இருந்து பா.ஜ.க நன்கொடை பெற்றுள்ளது. இது மற்ற கட்சிக விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories