அரசியல்

நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? உலகம் உங்களைப் பார்க்கிறது.. -ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை வேதனை !

இனி மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என டெல்லி காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? உலகம் உங்களைப் பார்க்கிறது.. -ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை வேதனை !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் பிரிஜ் பூஷன் சரண் சிங். இவர் பா.ஜ.க சார்பில் எம்.பியாகவும் செயல்பட்டு வருகிறார். இவர் பெண் மல்யுத்த வீராங்கனைகளுக்கு பாலியல் கொடுமைகளைச் செய்வதாகவும், குறைந்தது 10, 12 வீராங்கனைகளுக்கு மேல் இவரால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பெண் மல்யுத்த வீராங்கனைகள் கடந்த ஜனவரி மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதோடு இவரால் தேசிய பயிற்சி முகாம்களில் நியமிக்கப்பட்ட சில பயிற்சியாளர்கள் பல ஆண்டுகளாகப் பெண் மல்யுத்த வீராங்கனைகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி வருகின்றனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த போராட்டத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, வீராங்கனைகள் வினேஷ் போகத், சாக்‌ஷி மாலி போன்றவர்கள் கலந்து கொண்டனர்.

நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? உலகம் உங்களைப் பார்க்கிறது.. -ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை வேதனை !

இதையடுத்து இந்த போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர ஒன்றிய அரசு, குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இதனால் போராட்டத்தை வீராங்கனைகள் தற்காலிகமாகத் திரும்பப்பெற்றனர்.பின்னர் விசாரணைக் குழு பிரிஜ் பூஷன் ஷரண் சிங் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எதுவும் எடுக்காததை அடுத்து மல்யுத்த வீரர்கள் மீண்டும் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் போராட்டத்தை எப்படியாவது கலைத்துவிட வேண்டும் என ஒன்றிய அரசு சதித்திட்டம் தீட்டி வருகிறது. இதற்கிடையில் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில் பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது டெல்லி போலிஸார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. இதனால் மல்யுத்த வீராங்கனைகள் அவரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? உலகம் உங்களைப் பார்க்கிறது.. -ஒலிம்பிக் பதக்கம் வென்ற வீராங்கனை வேதனை !

இந்த நிலையில், நேற்று புதிய நாடாளுமன்றம் திறக்கப்பட்ட நிலையில், அதனை முற்றுகையிட்டு மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்த முயன்றனர். இதில் மல்யுத்த வீரர்களுக்கு ஆதரவாக ஏராளமான பொதுமக்கள், விவசாயிகள் திரண்டனர். ஆனால், இந்த போராட்டத்தின் போது மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்களை தடுப்புகள் வைத்து டெல்லி காவல்துறை தடுத்து நிறுத்தியது.

ஆனால், மல்யுத்த வீரர்கள் மற்றும் பொதுமக்கள் தடுப்புகளை தாண்டி செல்ல முயன்றபோது போலிஸார் அவர்களை தாக்கி கைது செய்தனர். அதிலும், நாட்டுக்காக ஒலிம்பிக் தொடர், ஆசிய தொடர், காமன்வெல்த் தொடரில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளை ஒன்றிய பாஜக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள டெல்லி காவல்துறைதெருவில் இழுத்துச் சென்று கைது செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. டெல்லி காவல்துறையின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதனைத் தொடர்ந்து ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சாக்‌ஷி மாலிக் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பாலியல் குற்றஞ்சாட்டப்பட்ட பாஜக எம்.பி எம்.பி பிரிஜ்பூஷண் சரண் சிங் மீது வழக்குப் பதிவு செய்ய 7 நாட்கள் எடுத்துக் கொண்ட டெல்லி போலீஸ், அமைதியாகப் போராட்டம் நடத்திய எங்கள் மீது வழக்குப் பதிவு செய்ய 7 மணி நேரத்தைக் கூட எடுத்துக் கொள்ளவில்லை. நாட்டில் சர்வாதிகாரம் ஓங்குகிறதா? இந்திய அரசு தனது விளையாட்டு வீரர்களை எப்படி நடத்துகிறது என்று இந்த உலகம் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது" என்று கூறியுள்ளார்.

இந்த போராட்டத்தை தொடர்ந்து இனி மல்யுத்த வீரர் வீராங்கனைகளின் போராட்டத்திற்கு அனுமதி கிடையாது என டெல்லி காவல்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது. மேலும், மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்திவந்த டெல்லி டெல்லி ஜந்தர்மந்தரில் நான்கு முதல் ஏழு அடுக்குகள் வரை தடுப்புகள் அமைத்து நூற்றுக்கணக்கான காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், ஜந்தர் மந்தரை இணைக்கும் அனைத்து சாலைகளும் மூடப்பட்டடுள்ளது.

banner

Related Stories

Related Stories