அரசியல்

கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹெலிகாப்டரில் பண மூட்டையோடு வந்த அண்ணாமலை..காங்கிரஸ் குற்றச்சாட்டு!

கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அண்ணாமலை கையோடு கட்டுகட்டாக பணம் அடங்கிய மூட்டையை கொண்டுவந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹெலிகாப்டரில் பண மூட்டையோடு வந்த அண்ணாமலை..காங்கிரஸ் குற்றச்சாட்டு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹெலிகாப்டரில் பண மூட்டையோடு வந்த அண்ணாமலை..காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

கர்நாடக தேர்தல் இணை பொறுப்பாளராகத் தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளார். இதனிடையே கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அண்ணாமலை கையோடு கட்டுகட்டாக பணம் அடங்கிய மூட்டையை கொண்டுவந்ததாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

கர்நாடகாவில் வாக்காளர்களுக்கு கொடுக்க ஹெலிகாப்டரில் பண மூட்டையோடு வந்த அண்ணாமலை..காங்கிரஸ் குற்றச்சாட்டு!

இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், கௌப் தொகுதி காங்கிரஸ் வேட்பாளருமான வினய் குமார் கூறிகையில், ”கர்நாடக மாநிலம் உடுப்பியில் ஹெலிகாப்டரில் வந்திறங்கிய அம்மாநில தேர்தல் இணை பொறுப்பாளர் அண்ணாமலை வாக்காளர்களுக்கு கொடுக்க கையோடு கட்டுகட்டாக பணம் அடங்கிய மூட்டையை கொண்டு வந்தார். இது குறித்து தேர்தல் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக விளக்கம் அளித்த அண்ணாமலை ”நேரத்தை சேமிப்பதற்காகவே தான் ஹெலிகாப்டரில் பயணம் செய்தேன்” என மீண்டும் அடடே விளக்கமளித்துள்ளார். இந்த விவகாரம் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories