அரசியல்

3 டிகிரி முடித்தும் ஆங்கிலம் தெரியாமல் காப்பி அடித்த பாஜக முதல்வர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

அசாம் பாஜக முதல்வர் ஒருவர் தனக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

3 டிகிரி முடித்தும் ஆங்கிலம் தெரியாமல் காப்பி அடித்த பாஜக முதல்வர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

இந்தியா சுதந்திரம் பெரும் முன்னரே இந்தியை திணிக்கும் முயற்சி பல்வேறு முறை மேற்கொள்ளப்பட்டாலும் தமிழ்நாடு உறுதியாக அதனை எதிர்த்த காரணத்தால் ஆங்கிலம் தொடர்பு மொழியாக தற்போதும் தொடர்ந்து வருகிறது. ஆனாலும் ஆங்கிலத்துக்கு மாற்றாக இந்தியை கொண்டு வர ஒன்றிய பாஜக அரசு தற்போது கடுமையாக முயற்சி செய்து வருகிறது.

அதற்காக புதிய கல்விக் கொள்கையை கொண்டுவந்து பல்வேறு விதங்களில் இந்தியை திணிக்க முயற்சி செய்து வருகிறது. தற்போது ஒன்றிய அரசின் இந்த இந்தி திணிப்பை தமிழ்நாடு தாண்டி பல்வேறு மாநிலங்களும் எதிர்த்து வருகின்றன. குறிப்பாக வடகிழக்கு மாநிலங்கள் ஆங்கிலத்துக்கு பதில் இந்தியை கொண்டுவரும் முயற்சியை கண்டித்து வருகின்றன.

3 டிகிரி முடித்தும் ஆங்கிலம் தெரியாமல் காப்பி அடித்த பாஜக முதல்வர்.. கிண்டல் செய்யும் நெட்டிசன்கள் !

இந்த நிலையில், அசாம் பாஜக முதல்வர் ஒருவர் தனக்கு ஆங்கிலமும், இந்தியும் தெரியாது என்று கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அசாம் மாநில பாஜக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா டெல்லி சென்றிருந்தபோது அங்கு ஒரு இடத்துக்கு சென்றுள்ளார். அங்கு பார்வையாளர் குறிப்பேட்டில் அவரை எழுதக்கூறியபோது ஆங்கிலத்தில் எழுத தெரியாமல் வேறு ஒருவர் எழுதி கொடுத்ததை பார்த்து காப்பி அடித்து எழுதினார்.

இது தொடர்பாக வீடியோ காட்சி இணையத்தில் வைரலான நிலையில், "விசிட்டர்ஸ் புத்தகத்தில் ஒரு பத்தியைக் கூட நகலெடுக்காமல் எழுத முடியாத அசாம் முதல்வர்" என ரோஷன் ராய் என கூறியிருந்தார். அதனைத் தொடர்ந்த்து அவரின் இந்த பதிவை பலரும் பகிர்ந்திருந்தனர்.

தன் மீதான இந்த விமர்சனங்களுக்கு பதிலளித்த ஹிமந்தா பிஸ்வா சர்மா "நான் ஒரு அஸ்ஸாமி மீடியம் பள்ளிக்குச் சென்றேன், இந்தி மற்றும் ஆங்கிலத்தை எனது சொந்த வழியில் கற்க என்னால் முடிந்த அனைத்தையும் செய்கிறேன். எனக்கு ஆங்கிலம் மற்றும் இந்தி நன்றாகத் தெரியாது என்பதை ஒப்புக் கொள்ள வேண்டும், அதை ஒப்புக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை" என்று கூறியுள்ளார்.

ஆனால், அவர் 3 பட்டப்படிப்புகள் முடிந்த நிலையில், அங்கு கூடவா அவர் ஆங்கிலம் கற்கவில்லை. அதோடு வருகை பதிவேட்டில் ஆங்கிலத்திலோ இந்தியிலோ மட்டுமே எழுத வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவர் அசாம் மொழியில் கூட எழுதியிருக்கலாம். ஆனால் அவர் காப்பி அடித்ததுதான் சர்ச்சைக்கு காரணம் என நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories