அரசியல்

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !

பாரத் ஜோடோ யாத்திரையில் நாட்டில் பெண்கள் இன்னும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாவதாக ராகுல் காந்தி பேசியதற்கு விளக்கம் கேட்டு ராகுல் காந்தி வீட்டுக்கு டெல்லி போலீஸ் சென்றுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை இந்திய ஒற்றுமை நடைபயணத்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் தொடங்கினார். இந்த நடைப்பயணத்தை கன்னியாகுமரியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

பின்னர் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா, மாகராஷ்டிரா, மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், அரியானா, டெல்லி, பஞ்சாப் என 12 மாநிலங்களைக் கடந்து ஜனவரி மாதம் ஜம்மு காஷ்மீரில் முடிவடைந்தது.

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற யாத்திரையில் ராகுல் காந்தி, "நாட்டில் இன்னும் பெண்கள் பாலியல் வன்கொடுமைகள், சித்ரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டு வருகின்றனர்" என்றார். அவர் கூறி பல நாட்களுக்கு பிறகு இதுகுறித்து தகவல்களை கேட்டு டெல்லி போலீஸ் அதிகாரிகள் ராகுல் காந்தியின் இல்லத்துக்கு விரைந்துள்ளனர்.

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !

முன்னதாக கடந்த 16-ம் தேதி பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக அவரை அணுகிய பெண்களின் விவரங்களை கேட்டு ராகுல் காந்திக்கு டெல்லி போலீசார் நோட்டீஸ் அனுப்பியிருந்தனர். அதற்கு ராகுல் காந்தி பதிலளிக்காத நிலையில், இன்று அவரது வீட்டுக்கு போலீசார் விளக்கம் கேட்டு சென்றுள்ளனர். அதோடு அவரது வீட்டிலும் அத்துமீறி நோட்டீஸ் ஒட்டியுள்ளனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு காங்கிரஸ் கட்சியினர் வலுத்த கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். மேலும் இந்த தகவல் கிடைக்கப்பட்டதை அடுத்து ராகுல் காந்தி வீட்டுக்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், ஜெய்ராம் ரமேஷ் உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி இல்லத்துக்கு சென்றனர். அதோடு இந்த சம்பவத்துக்கு எதிராக கண்டனங்களும் எழுப்பி வருக்கின்றனர்.

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான பவன் கெரா கூறுகையில், "பாரத் ஜோடோ யாத்திரை முடிந்து 45 நாள்களாகிவிட்டன. இப்போது கேட்கவேண்டிய அவசியம் என்ன... என்னைக்கூட வீட்டுக்குள் நுழையவிடவில்லை" என்றார்.

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !

முன்னதாக இங்கிலாந்துக்கு சென்ற ராகுல் காந்தி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். இந்திய ஒன்றிய அரசு குறித்து பேசினார். மேலும் மோடி அரசு அதானிக்கு துணைப் போவதாகவும் குற்றம்சாட்டினார். இவரது இந்த பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதனால் நாடாளுமன்றம் முடங்கியது.

பாரத் ஜோடோ யாத்திரை: ராகுல் காந்தி வீட்டுக்கு விரைந்த டெல்லி போலிஸ்.. அத்துமீறி கொடுக்கப்பட்ட நோட்டீஸ் !

இந்த சூழலில் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது ஆளும் பாஜக அரசு வன்மம் வைத்து ராகுல் காந்திக்கு நெருக்கடி கொடுத்து வருவதாக எதிர்க்கட்சியினர் கண்டங்களை தெரிவித்து வருகின்றனர். பிரதமருக்கும், அதானிக்குமிடையிலான உறவு குறித்து ராகுல் காந்தி எழுப்பிய கேள்விகளால்தான் ஒன்றிய அரசு இது போன்று போலீஸாரைக் கொண்டு துன்புறுத்துவதாகவும் காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories